திருப்புகழ் 866 பஞ்சுசேர் நிர்த்த  (கும்பகோணம்)
Thiruppugazh 866 panjusErnirththa  (kumbakONam)
Thiruppugazh - 866 panjusErnirththa - kumbakONamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தனா தத்தத் ...... தனதான

......... பாடல் .........

பஞ்சுசேர் நிர்த்தப் ...... பதமாதர்

பங்கமார் தொக்கிற் ...... படியாமற்

செஞ்சொல்சேர் சித்ரத் ...... தமிழாலுன்

செம்பொனார் வத்தைப் ...... பெறுவேனோ

பஞ்சபா ணத்தற் ...... பொருதேவர்

பங்கில்வாழ் சத்திக் ...... குமரேசா

குஞ்சரீ வெற்புத் ...... தனநேயா

கும்பகோ ணத்திற் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பஞ்சுசேர் நிர்த்தப் பதமாதர் ... பஞ்சு போல் மென்மையான
பாதங்களை, நடனம் ஆடும் பாதங்களை உடைய மாதர்களின்

பங்கமார் தொக்கிற் படியாமல் ... குற்றம் நிறைந்த உடம்புத்
தோலில் நான் வீழ்ந்து விடாமல்,

செஞ்சொல்சேர் சித்ரத் தமிழால் ... தேர்ந்தெடுத்த சொற்கள்
அமைந்துள்ள அழகிய தமிழால் பாடல்களைப் பாடி

உன்செம்பொன் ஆர்வத்தைப் பெறுவேனோ ... செம்பொன்னுக்கு
நிகரான உனது அன்பைப் பெற மாட்டேனோ?

பஞ்சபாணத்தற் பொருதேவர் ... ஐந்து மலர்ப் பாணங்களைக்
கொண்ட மன்மதனைச் சுட்டெரித்த தேவராகிய சிவபிரானின்

பங்கில்வாழ் சத்திக் குமரேசா ... இடப்பாகத்தில் வாழ்கின்ற
பராசக்தியின் குமரனாம் ஈசனே,

குஞ்சரீ வெற்புத் தனநேயா ... ஐராவதம் என்னும் யானை வளர்த்த
தேவயானையின் மலை போன்ற மார்பை நேசித்தவனே,

கும்பகோ ணத்திற் பெருமாளே. ... கும்பகோணத்தில் வீற்றிருக்கும்
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1105  pg 2.1106 
 WIKI_urai Song number: 870 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 866 - panjusEr nirththa (kumbakONam)

panjusEr nirththap ...... pathamAthar

pangamAr thokkiR ...... padiyAmaR

senjolsEr chithrath ...... thamizhAlun

semponAr vaththaip ...... peRuvEnO

panjapA NaththaR ...... poruthEvar

pangilvAzh saththik ...... kumarEsA

kunjaree veRputh ...... thananEyA

kumpakO NaththiR ...... perumALE.

......... Meaning .........

panjusEr nirththap pathamAthar: The dancing girls' feet are soft like cotton.

pangamAr thokkiR padiyAmal: Without indulging in their skins covering their sinful bodies,

senjolsEr chithrath thamizhAl unsempon Arvaththaip peRuvEnO: shall I be able to compose songs using the choicest words in the beautiful language of Tamil seeking Your reddish gold-like love?

panjapANaththaR poruthEvar: Lord SivA fought and destroyed Manmathan (God of Love) who wielded five arrows of flowers;

pangilvAzh saththik kumarEsA: on the left part of that SivA's body is Goddess ParAsakthi, and You are Her son Lord Kumara!

kunjaree veRputh thananEyA: You fell for the mountain-like bosoms of DEvayAnai, the damsel reared by the elephant, AirAvadham.

kumpakO NaththiR perumALE.: Your abode is KumbakONam, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 866 panjusEr nirththa - kumbakONam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]