திருப்புகழ் 861 புழுகொடுபனி  (திருவிடைமருதூர்)
Thiruppugazh 861 puzhugodupani  (thiruvidaimarudhUr)
Thiruppugazh - 861 puzhugodupani - thiruvidaimarudhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனதன தான தானன தனதனதன தான தானன
     தனதனதன தான தானன ...... தந்ததான

......... பாடல் .........

புழுகொடுபனி நீர்ச வாதுட னிருகரமிகு மார்பி லேபன
     புளகிதஅபி ராம பூஷித ...... கொங்கையானை

பொதுவினில்விலை கூறு மாதர்கள் மணியணிகுழை மீது தாவடி
     பொருவனகணை போல்வி லோசன ...... வந்தியாலே

மெழுகெனவுரு காவ னார்தம திதயகலக மோடு மோகன
     வெகுவிதபரி தாப வாதனை ...... கொண்டுநாயேன்

மிடைபடுமல மாயை யால்மிக கலவியஅறி வேக சாமிநின்
     விதரணசிவ ஞான போதகம் ...... வந்துதாராய்

எழுகிரிநிலை யோட வாரிதி மொகுமொகுவென வீச மேதினி
     யிடர்கெடஅசு ரேசர் சேனைமு ...... றிந்துபோக

இமையவர்சிறை மீள நாய்நரி கழுகுகள்கக ராசன் மேலிட
     ரணமுககண பூத சேனைகள் ...... நின்றுலாவச்

செழுமதகரி நீல கோமள அபிநவமயி லேறு சேவக
     செயசெயமுரு காகு காவளர் ...... கந்தவேளே

திரைபொருகரை மோது காவிரி வருபுனல்வயல் வாவி சூழ்தரு
     திருவிடைமரு தூரில் மேவிய ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

புழுகு ஒடு பனிநீர் சவாது உடன் இரு கரம் மிகு மார்பி(ல்)
லேபனம் புளகித அபிராம பூஷித கொங்கை யானை
... புனுகு
சட்டத்தோடு பன்னீர், ஜவ்வாது இவைகளுடன் இரண்டு கைகளிலும்
நிரம்பியதாய் அள்ளி, மார்பில் சந்தனம் கஸ்தூரி முதலியவற்றைப் பூசி,
புளகாங்கிதம் கொண்ட அழகுள்ளதாய், அலங்காரம் பூண்டதாய் உள்ள
மலை போன்ற மார்பகங்களை,

பொதுவினில் விலைகூறும் மாதர்கள் மணிஅணி குழை மீது
தாவடி பொருவன கணை போல் விலோசன வந்தியாலே
...
பொதுவான இடத்தில் நின்று விலை கூறும் வேசிகளின் ரத்தினம் பதித்த
குண்டலங்களின் மீது போர் செய்கின்ற அம்புகள் போன்ற கண்கள்
ஏற்படுத்தும் கொடுமையாலே,

மெழுகு என உருகா அ(ன்)னார் தமது இதய கலகமோடு
மோகன வெகு வித பரிதாப வாதனை கொண்டு நாயேன்
...
மெழுகு போல உள்ளம் உருகி அந்த வேசியர்களுடைய உள்ளத்தே
தோன்றும் சச்சரவால் மன மயக்கம் கொண்டவனாய் பலவிதமான
பரிதாபம் படத் தக்க துன்பம் அடைந்து அடியேன்

மிடை படும் மலம் மாயையால் மிக கலவிய அறிவு ஏக சாமி
நின் விதரண சிவ ஞான போதகம் வந்து தாராய்
... நெருங்கி
வரும் (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களின் மாயை வசத்தால்
மிகவும் மனக் கலக்கம் கொண்ட என் அறிவு தொலைந்து அழிய,
சுவாமியே, உன்னுடைய கொடையாக சிவஞான உபதேசத்தை நீ
எழுந்தருளி வந்து தந்து உதவுக.

எழு கிரி நிலை ஓட வாரிதி மொகுமொகு என வீச மேதினி
இடர் கெட அசுரேசர் சேனை முறிந்து போக
... (சூரனுடைய)
ஏழு மலைகளும் நிலை பெயர்ந்து ஓடவும், கடல் மொகுமொகு என்று
கலங்கி அலைகள் வீசவும், மண்ணுலகத்தாரின் துன்பங்கள் கெடவும்,
அசுரர்களின் சேனைகள் தோற்று ஓடவும்,

இமையவர் சிறை மீள நாய் நரி கழுகுகள் கக ராசன் மேலிட
ரண முக கண பூத சேனைகள் நின்று உலாவ
... தேவர்கள்
சிறையினின்று விடுபடவும், நாய், நரி, கழுகுகள், பறவைகளின்
அரசனாகிய கருடன் மேலே வட்டமிடவும், போர்க்களத்தில் பூத கண
சேனைகள் நின்று உலாவவும்,

செழு மத கரி நீல கோமள அபி நவ மயில் ஏறு சேவக செய
செய முருகா குகா வளர் கந்த வேளே
... செழுமை வாய்ந்த
பிணிமுகம்* என்னும் யானை மீதும், நீல நிறம் உள்ள அழகிய நவீனமான
மயில் மீதும் ஏறுகின்ற வலிமையாளனே, வெற்றி வேல் முருகனே, குகனே,
புகழ் ஓங்கும் கந்த வேளே,

திரைபொரு கரை மோது(ம்) காவிரி வருபுனல் வயல் வாவி
சூழ்தரு திருவிடை மருதூரில் மேவிய தம்பிரானே.
... அலைகள்
ஒன்றோடொன்று போரிட்டு கரையில் மோதுகின்ற காவிரியில் வரும் நீர்
பாயும் வயல்களும், குளங்களும் சூழ்ந்துள்ள திருவிடைமருதூரில்**
வீற்றிருக்கும் தம்பிரானே.


* முருகன் மயில் வாகனன் ஆகினும், அடியார்களை ஆட்கொள்வதற்கும்,
அருள் செய்வதற்கும், போர் புரிவதற்குப் புறப்படும்போதும் 'பிணிமுகம்' என்ற
யானை வாகனத்தில் செல்வான் என்பர்.

பல தலங்களில் முருகனுக்கு பிணிமுக யானை வாகனமாக உள்ளது.


** திருவிடைமருதூர் கும்பகோணத்துக்கு அருகே வடக்கில் 5 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1095  pg 2.1096 
 WIKI_urai Song number: 865 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 861 - puzhugodupani (thiruvidaimarudhUr)

puzhukodupani neersa vAthuda nirukaramiku mArpi lEpana
     puLakithApi rAma pUshitha ...... kongaiyAnai

pothuvinilvilai kURu mAtharkaL maNiyaNikuzhai meethu thAvadi
     poruvanakaNai pOlvi lOchana ...... vanthiyAlE

mezhukenavuru kAva nArthama thithayakalaka mOdu mOkana
     vekuvithapari thApa vAthanai ...... koNdunAyEn

midaipadumala mAyai yAlmika kalaviya aRi vEka sAminin
     vitharaNasiva njAna pOthakam ...... vanthuthArAy

ezhukirinilai yOda vArithi mokumokuvena veesa mEthini
     yidarkedAsu rEsar sEnaimu ...... RinthupOka

imaiyavarsiRai meeLa nAynari kazhukukaLkaka rAsan mElida
     raNamukakaNa pUtha sEnaikaL ...... ninRulAvac

chezhumathakari neela kOmaLa apinavamayi lERu sEvaka
     seyaseyamuru kAku kAvaLar ...... kanthavELE

thiraiporukarai mOthu kAviri varupunalvayal vAvi cUzhtharu
     thiruvidaimaru thUril mEviya ...... thambirAnE.

......... Meaning .........

puzhuku odu panineer savAthu udan iru karam miku mArpi(l) lEpanam puLakitha apirAma pUshitha kongai yAnai: Their well-adorned mountain-like breasts, exhilarated and beautiful, have been smeared with two-handfuls of emulsion of civet, rose water and javvAthu (a musk-like incence) and their chest has been daubed with a paste of sandalwood powder and musk;

pothuvinil vilaikURum mAtharkaL maNiaNi kuzhai meethu thAvadi poruvana kaNai pOl vilOsana vanthiyAlE: Standing at a common place, they openly negotiate a price for their services; their arrow-like eyes, attacking their swinging ear-studs embedded with gems, have caused so much of cruelty to me that

mezhuku ena urukA a(n)nAr thamathu ithaya kalakamOdu mOkana veku vitha parithApa vAthanai koNdu nAyEn: my heart has melted like wax; due to the internal conflicts in the mind of these whores, I am in a state of delusion and thrown into a pitiable state of misery in many ways;

midai padum malam mAyaiyAl mika kalaviya aRivu Eka sAmi nin vitharaNa siva njAna pOthakam vanthu thArAy: the three confronting slags (namely, arrogance, karma and delusion) have perturbed me so much that my intellect is totally ruined; Oh Lord, kindly come forward and preach to me the Knowledge of SivA as Your gift!

ezhu kiri nilai Oda vArithi mokumoku ena veesa mEthini idar keda asurEsar sEnai muRinthu pOka: The seven mountains (belonging to the demon SUran) were uprooted and scattered; the sea was agitated intensely with all the waves blowing apart; the miseries of the people of the world ended; the defeated armies of the demons fled;

imaiyavar siRai meeLa nAy nari kazhukukaL kaka rAsan mElida raNa muka kaNa pUtha sEnaikaL ninRu ulAva: the celestials were freed from their prison; dogs, foxes and vultures gathered, along with the king-eagle circling in the sky above while the multitude of fiends and devils began to roam around in the battlefield;

sezhu matha kari neela kOmaLa api nava mayil ERu sEvaka seya seya murukA kukA vaLar kantha vELE: as You mounted a robust elephant* (named piNimukam) and also the blue, beautiful and novel peacock, Oh Strong One! Oh MurugA, Victory to You and to Your Spear! Oh GuhA, You are the famous Lord KandhA!

thiraiporu karai mOthu(m) kAviri varupunal vayal vAvi cUzhtharu thiruvidai maruthUril mEviya thambirAnE.: On the banks of the river KAvEri, the waves vie with each other in lapping the shores of ThiruvidaimaruthUr** which is surrounded by paddy-fields with water flowing through abundantly and many ponds; and You are seated here, Oh Great One!


* Although Murugan is known to mount the peacock most of the times, on certain occasions when He goes out to bestow His grace on His devotees or to enter the battlefield, He has used the elephant, PiNimukam, as the vehicle.

In many shrines, this appears as Murugan's vehicle.


** ThiruvidaimaruthUr is 5 miles north of KumbakONam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 861 puzhugodupani - thiruvidaimarudhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]