திருப்புகழ் 808 பச்சை யொண்கிரி  (திருநள்ளாறு)
Thiruppugazh 808 pachchaiyoNgiri  (thirunaLLARu)
Thiruppugazh - 808 pachchaiyoNgiri - thirunaLLARuSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்த தந்தன தானன தானன
     தத்த தந்தன தானன தானன
          தத்த தந்தன தானன தானன ...... தனதான

......... பாடல் .........

பச்சை யொண்கிரி போலிரு மாதன
     முற்றி தம்பொறி சேர்குழல் வாளயில்
          பற்று புண்டரி காமென ஏய்கயல் ...... விழிஞான

பத்தி வெண்டர ளாமெனும் வாணகை
     வித்ரு மஞ்சிலை போல்நுத லாரிதழ்
          பத்ம செண்பக மாமநு பூதியி ...... னழகாளென்

றிச்சை யந்தரி பார்வதி மோகினி
     தத்தை பொன்கவி னாலிலை போல்வயி
          றிற்ப சுங்கிளி யானமி னூலிடை ...... யபிராமி

எக்கு லங்குடி லோடுல கியாவையு
     மிற்ப திந்திரு நாழிநெ லாலற
          மெப்பொ தும்பகிர் வாள்கும ராஎன ...... வுருகேனோ

கச்சை யுந்திரு வாளுமி ராறுடை
     பொற்பு யங்களும் வேலுமி ராறுள
          கட்சி வங்கம லாமுக மாறுள ...... முருகோனே

கற்ப கந்திரு நாடுயர் வாழ்வுற
     சித்தர் விஞ்சையர் மாகர்ச பாசென
          கட்ட வெங்கொடு சூர்கிளை வேரற ...... விடும்வேலா

நச்சு வெண்பட மீதணை வார்முகில்
     பச்சை வண்புய னார்கரு டாசனர்
          நற்க ரந்தநு கோல்வளை நேமியர் ...... மருகோனே

நற்பு னந்தனில் வாழ்வளி நாயகி
     யிச்சை கொண்டொரு வாரண மாதொடு
          நத்தி வந்துந ளாறுறை தேவர்கள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பச்சை யொண்கிரி போலிரு மாதனம் ... பச்சையானதும், ஒளி
பொருந்தியதுமான இரு பெரிய மார்பகங்கள்,

உற்று இதம்பொறி சேர்குழல் ... மொய்த்து இன்பம் துய்க்கும்
வண்டுகள் முரலும் கூந்தல்,

வாளயில் பற்று புண்டரி காமென ஏய்கயல்விழி ... ஒளிகொண்ட
வேலையும், தாமரையையும் போன்ற மீனை ஒத்த கண் விழிகள்,

ஞான பத்தி வெண்டர ளாமெனும் வாணகை ... ஞான ஒளி
வரிசையில் உள்ள வெண்முத்துக்களைப் போன்று ஒளிவீசும் பற்கள்,

வித்ருமஞ்சிலை போல்நுதலாரிதழ் பத்ம செண்பகமாம் ...
வில்லைப் போன்ற நெற்றி, பவளத்தையும், தாமரையையும்
செண்பகப்பூவையும் போன்ற இதழ்கள்,

அநு பூதியின் அழகாளென்று ... இவையெல்லாம் கொண்ட, ஞான
அநுபவத்தின் அழகியானவள்,

இச்சை யந்தரி பார்வதி மோகினி ... இச்சையெல்லாம் பூர்த்தி
செய்யும் பராகாச வடிவினாள், பேரழகியான பார்வதி,

தத்தை பொன்கவி னாலிலை போல்வயிறி ... கிளி, பொன்னின்
அழகுடைய ஆலிலை போன்ற வயிற்றினள்,

இற்பசுங்கிளியான மினூலிடை யபிராமி ... இல்லறம் நடத்தும்
பசுங்கிளி போன்றவள், மின்னலும் நூலும் போன்ற இடையை உடையவள்,

எக்குலங் குடிலோடு உலகியாவையும் ... எல்லாக் குலத்தாருக்கும்,
எல்லா உடலுக்கும், எல்லா உலகங்களுக்கும்,

இற்பதிந்து இரு நாழிநெலால் அறம் ... இருந்த இடத்தில் இருந்தே
இரண்டு படி நெல் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும்*

எப்பொ தும்பகிர்வாள்குமரா என வுருகேனோ ... எப்பொழுதும்
பங்கிட்டு அளிப்பவளாகிய பார்வதியின் குமரனே என்று கூறி உள்ளம்
உருக மாட்டேனோ?

கச்சை யுந்திரு வாளுமி ராறுடை பொற்புயங்களும் ... அரையில்
கச்சை, அழகிய வாள், பன்னிரண்டு அழகிய தோள்கள்,

வேலுமிராறுள கண் சிவங் கமலாமுகமாறுள முருகோனே ...
வேல், பன்னிரண்டு கண்கள், மங்களமான தாமரை போன்ற ஆறு
திருமுகங்கள் - இவை கொண்ட முருகனே,

கற்ப கந்திரு நாடுயர் வாழ்வுற ... கற்பகமரம் உள்ள செல்வம்
நிறைந்த தேவர்களின் நாடு உயர்ந்த வாழ்வைப் பெறவும்,

சித்தர் விஞ்சையர் மாகர் சபாசென ... சித்தர்களும், விஞ்சையர்களும்,
தேவர்களும் சபாஷ்** என்று மெச்சவும்,

கட்ட வெங்கொடு சூர்கிளை வேரற விடும்வேலா ... துன்பம்
தந்துவந்த கொடும் சூரர்களின் சுற்றத்தார் யாவரும் வேரறச் செலுத்திய
வேலனே,

நச்சு வெண்பட மீதணைவார் ... விஷமுள்ள வெண்ணிறப் படம்
உடைய ஆதிசேஷன்மீது படுக்கை கொண்டவர்,

முகில் பச்சை வண்புய னார்கருடாசனர் ... கருமுகிலின்,
மரகதப்பச்சையின் நிறம் கொண்டு வளமார்ந்த புயத்தை உடைய கருட
வாகனர்,

நற்க ரந்தநு கோல்வளை நேமியர் மருகோனே ... நல்ல கரத்தில்
வில் (சாரங்கம்), அம்பு, சங்கு (பாஞ்சஜன்யம்), சக்கரம் (சுதர் னம்)
இவற்றைக் கொண்ட திருமாலின் மருகனே,

நற்புனந்தனில் வாழ்வளி நாயகி ... நல்ல தினைப்புனத்தில்
வாழ்ந்திருந்த வள்ளிநாயகியின்

இச்சை கொண்டொரு வாரண மாதொடு ... காதலைப் பெற்று,
ஒப்பற்ற யானை ஐராவதம் வளர்த்த தேவயானையுடன்

நத்தி வந்துந ளாறுறை தேவர்கள் பெருமாளே. ... விரும்பி வந்து
திருநள்ளாறு*** என்ற தலத்தில் உறைகின்றவனே, தேவர்களின்
பெருமாளே.


* பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:

சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு,
பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு
உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல்,
அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல்,
நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி
அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய்,
ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல்,
தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு
உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.


** சபாஷ் என்ற அரபு வார்த்தை முகலாயர் ஆட்சி அருணகிரிநாதர் காலத்தில்
வந்ததைக் குறிக்கிறது.


*** திருநள்ளாறு காரைக்காலுக்கு மேற்கே 3 மைலில் உள்ளது. இந்தத் தலம்
நவக்கிரகங்களில் ஒன்றான சனீஸ்வரனின் க்ஷேத்திரம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.951  pg 2.952  pg 2.953  pg 2.954 
 WIKI_urai Song number: 812 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 808 - pachchai yoNgiri (thirunaLLARu)

pachchai oNgiripOl iru mAthana
     mutri tham poRi sErkuzhal vALayil
          patru puNdarikA mena Eykayal ...... vizhi nyAnA

baththi veNdaraLAm enum vANagai
     vidhru mansilai pOlnudhal Aridhazh
          padhma seNpaga mAm anubUthiyin ...... azhagALendru

ichchai anthari pArvathi mOhini
     thaththai pon kavin Alilai pOlvayi
          RiRpasung kiLiyAna minUlidai ...... abirAmi

ekkulang kudilOdula giyAvaiyum
     iRpadhin dhiru nAzhi nelAl aRam
          eppodhum pagir vAL kumarA ena ...... urugEnO

kachchaiyun thiruvALum irARudai
     poR buyangaLum vElum irARuLa
          katchivang kamalA mukam ARuLa ...... murugOnE

kaRpagam thirunA duyar vAzhvuRa
     sidhdhar vinjaiyar mAgar sabAshena
          katta vengkodu sUrkiLai vEraRa ...... vidum vElA

nachchu veNpada meedhaNai vArmugil
     pachchai vaNbuyanAr garudAsanar
          naR karandhanu kOlvaLai nEmiyar ...... marugOnE

naRpunan thanil vAzhvaLi nAyaki
     icchai koNdoru vAraNa mAdhodu
          naththi vandhu naLARuRai thEvargaL ...... perumALE.

......... Meaning .........

pachchai oNgiripOl iru mAthana: She has two bosoms like green and bright mountains;

mutri tham poRi sErkuzhal: Around Her hair, beetles swarm in absolute bliss;

vALayil patru puNdarikA mena Eykayal vizhi: Her kayal-fish-like eyes sparkle like the spear and the lotus;

nyAnA baththi veNdaraLAm enum vANagai: Her teeth are like white pearls arranged neatly in a row of radiant wisdom;

vidhru mansilai pOlnudhal Aridhazh padhma seNpaga mAm: Her forehead is like a bow; Her lips are comparable to coral, lotus and sheNbaga (champak) flowers;

anubUthiyin azhagALendru: Her blissful beauty is realisable only through experience.

ichchai anthari pArvathi mOhini: She is the enchanting Goddess PArvathi in the form of the Supreme Cosmos, granting all wishes.

thaththai pon kavin Alilai pOlvayiRu: She is like a parrot. Her belly is like the golden banyan leaf.

iRpasung kiLiyAna minUlidai abirAmi: She is the green parrot that carries out all chores of the family life. Her waistline is slender like the lightning and a thread. She is exceedingly beautiful.

ekkulang kudilOdula giyAvaiyum: For the benefit of the entire world, irrespective of any lineage or any physical body,

iRpadhin dhiru nAzhi nelAl aRam eppodhum pagir vAL: She evenly distributes to everyone at all times, (thirty-two) religious duties* with two measures of paddy, without moving away from Her abode.

kumarA ena urugEnO: You are the son of that PArvathi - why do I not simply melt praising You with such words?

kachchaiyun thiruvALum irARudai poR buyangaLum: You are known for Your waistband, bright sword, twelve broad shoulders,

vElum irARuLa katchivang kamalA mukam ARuLa murugOnE: the spear, twelve eyes and six hallowed lotus faces, Oh MurugA!

kaRpagam thirunA duyar vAzhvuRa: The holy land of the celestials, which has the wish-yielding KaRpaga Tree, regained its prosperity;

sidhdhar vinjaiyar mAgar sabAshena: the SidhdhAs (achievers through penance), vinjayars (performing artists) and the DEvAs hailed You by cheering with the word "SabAsh"**;

katta vengkodu sUrkiLai vEraRa vidum vElA: when You threw Your spear to annihilate the vexatious and evil demons and their clan, Oh Lord!

nachchu veNpada meedhaNai vAr: He slumbers on the bed of the serpent, Adhiseshan, with a poisonous white hood;

mugil pachchai vaNbuyanAr garudAsanar: His broad shoulders bear the complexion of dark cloud and emerald green; He mounts the eagle, Garuda;

naR karandhanu kOlvaLai nEmiyar marugOnE: He holds in His hallowed hands a bow (SArangam), arrows, a conch shell (Panchajanyam) and a wheel (Sudharsanam); He is Lord Vishnu, and You are His nephew!

naRpunan thanil vAzhvaLi nAyaki: The damsel VaLLi lived in a nice millet field;

icchai koNdoru vAraNa mAdhodu: You won her love, and then, along with DEvayAnai, the maiden reared by AirAvadham,

naththi vandhu naLARuRai thEvargaL perumALE.: You sought to be seated with relish in ThirunaLLARu. You are the Lord of the DEvAs, Oh Great One!


* Thirty-two religious duties are listed in Periya PurANam as follows:

Road-laying; Food for teachers; Food for all the six kinds of religious people; Feeding the cows; Feeding the prisoners; Alms; Distribution of eatables; Feeding the orphans; Obstetrics; Orphanage; Feeding milk to babies; Cremation of destitute corpses; Clothing the orphans; Whitewashing old houses; Offering medicines; Washing others' clothes; Barber's work; Providing glasses for visually-impaired; Piercing ears and providing studs; Eyedrops for medication; Providing hair oil and hair cream; Fomentation for relief; Protecting others from perils; Free distribution of potable water; Provision of free accommodation; Provision of bathing facility; Rearing shady groves; Providing sandals and shoes; Feeding animals; Ploughing the field; Providing security guard; and Conducting marriages.


** The use of the Arabic word 'sabAsh' indicates the Moghul influence during the time of AruNagirinAthar.


*** ThirunaLLARu is 3 miles west of KAraikkAl; it has the famous temple for one of the planets, SaneeswarA, the Saturn.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 808 pachchai yoNgiri - thirunaLLARu

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]