திருப்புகழ் 743 கோல மறை  (திருநாவலூர்)
Thiruppugazh 743 kOlamaRai  (thirunAvalUr)
Thiruppugazh - 743 kOlamaRai - thirunAvalUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானதன தத்த தானதன தத்த
     தானதன தத்த ...... தனதான

......... பாடல் .........

கோல மறை யொத்த மாலைதனி லுற்ற
     கோரமதன் விட்ட ...... கணையாலே

கோதிலத ருக்கள் மேவுபொழி லுற்ற
     கோகிலமி குத்த ...... குரலாலே

ஆலமென விட்டு வீசுகலை பற்றி
     ஆரழலி றைக்கு ...... நிலவாலே

ஆவிதளர் வுற்று வாடுமெனை நித்த
     மாசைகொட ணைக்க ...... வரவேணும்

நாலுமறை கற்ற நான்முகனு தித்த
     நாரணனு மெச்சு ...... மருகோனே

நாவலர்ம திக்க வேல்தனையெ டுத்து
     நாகமற விட்ட ...... மயில்வீரா

சேலெனும் விழிச்சி வேடுவர் சிறுக்கி
     சீரணி தனத்தி ...... லணைவோனே

சீதவயல் சுற்று நாவல்தனி லுற்ற
     தேவர்சிறை விட்ட ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கோல மறை யொத்த மாலைதனி லுற்ற கோரமதன் விட்ட
கணையாலே
... அழகியவனும், அனங்கனாக உருவத்தை மறைத்து
வைத்திருப்பவனும், மாலைப் பொழுதில் வந்து சேர்ந்துள்ளவனும்,
கொடியவனும் ஆன மன்மதன் செலுத்தும் புஷ்ப பாணங்களினாலும்,

கோதில தருக்கள் மேவு பொழிலுற்ற கோகில மிகுத்த
குரலாலே
... குற்றமற்ற நல்ல செழிப்பான மரங்கள் நிறைந்த
சோலையில் உள்ள குயிலின் பலமான ஓசையினாலும்,

ஆலமென விட்டு வீசுகலை பற்றி ஆரழல் இறைக்கு
நிலவாலே
... விஷக் கதிர்களை எறிந்து வீசும் ஒளி மூலமாக மிகுத்த
நெருப்பை எங்கும் அள்ளி இறைக்கும் நிலவினாலும்,

ஆவி தளர்வுற்று வாடுமெனை நித்தம் ஆசைகொடு அணைக்க
வரவேணும்
... ஆவியானது தளர்ச்சியுற்று வாடுகின்ற என்னை
நாள்தோறும் ஆசையுடனே அணைக்க நீ வரவேண்டும்.

நாலுமறை கற்ற நான்முகன் உதித்த நாரணனு மெச்சு
மருகோனே
... நான்கு வேதங்களையும் கற்ற பிரமனைத் தோற்றுவித்த
நாரணனாகிய திருமால் மெச்சிடும் மருகனே,

நாவலர் மதிக்க வேல்தனை யெடுத்து நாகமற விட்ட
மயில்வீரா
... புலவர்கள் மதிக்கும்படியாக வேலாயுதத்தை எடுத்து
கிரெளஞ்ச மலையைப் பொடிபடச் செலுத்திய மயில் வீரனே,

சேலெனும் விழிச்சி வேடுவர் சிறுக்கி சீரணி தனத்தில்
அணைவோனே
... சேல் மீன் போன்ற கண்ணை உடைய வேடுவப்
பெண் வள்ளியின் சீரும் அழகும் கொண்ட மார்பை அணைவோனே,

சீதவயல் சுற்று நாவல்தனி லுற்ற தேவர்சிறை விட்ட
பெருமாளே.
... குளிர்ந்த வயல்கள் சூழ்ந்துள்ள திருநாவலூரில்*
வீற்றிருக்கும், தேவர்களைச் சிறையினின்றும் மீட்ட பெருமாளே.


* திருநாவலூர் இப்போது திருநாமநல்லூர் என்று வழங்கப்படுகிறது. பண்ருட்டிக்கு
11 மைல் மேற்கே உள்ளது.


இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவியாக
தன்னைக் கற்பனை செய்து பாடியது. மன்மதன், மலர்க் கணைகள், சோலைக்
குயில், நெருப்பை வீசும் நிலவு - இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.787  pg 2.788 
 WIKI_urai Song number: 747 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 743 - KOla maRai (thirunAvalUr)

kOla maRai yoththa mAlaithani lutRa
     kOramathan vitta ...... kaNaiyAlE

kOthilatha rukkaL mEvupozhi lutRa
     kOkilami kuththa ...... kuralAlE

Alamena vittu veesukalai patRi
     Arazhali Raikku ...... nilavAlE

AvithaLar vutRu vAdumenai niththam
     Asaikoda Naikka ...... varavENum

nAlumaRai katRa nAnmukanu thiththa
     nAraNanu mecchu ...... marukOnE

nAvalarma thikka vElthanaiye duththu
     nAkamaRa vitta ...... mayilveerA

sElenum vizhicchi vEduvar siRukki
     seeraNi thanaththi ...... laNaivOnE

seethavayal sutRu nAvalthani lutRa
     thEvarsiRai vitta ...... perumALE.

......... Meaning .........

kOla maRai yoththa mAlaithani lutRa kOramathan vitta kaNaiyAlE: He is beautiful without a body, suppressing His form; He is Manmathan (God of Love) who always comes in the evening and shoots mercilessly; because of His arrows of flowers;

kOthila tharukkaL mEvu pozhilutRa kOkila mikuththa kuralAlE: because of the shrieking sound made by the cuckoo that lives in the fertile grove full of impeccable trees;

Alamena vittu veesukalai patRi Arazhal iRaikku nilavAlE: and because of the moon that radiates burning rays splashing poison all over;

Avi thaLarvutRu vAdumenai niththam Asaikodu aNaikka varavENum: I am weakening and feeling morose; will You not come to me everyday to embrace me?

nAlumaRai katRa nAnmukan uthiththa nAraNanu mecchu marukOnE: You are the favourite nephew of Lord VishNu, NArAyaNA, who created Lord BrahmA, the Master of the four vEdAs!

nAvalar mathikka vElthanai yeduththu nAkamaRa vitta mayilveerA: To the great praise from the poets, You took Your Spear and wielded it, shattering Mount Krouncha to pieces, Oh valorous Lord on the peacock!

sElenum vizhicchi vEduvar siRukki seeraNi thanaththil aNaivOnE: You hug the famous and beautiful bosom of VaLLi, the damsel of the hunters, who has pretty eyes like the sEl fish!

seethavayal sutRu nAvalthani lutRa: You have Your abode at ThirunAvalUr* surrounded by cool paddy fields, Oh Lord!

thEvarsiRai vitta perumALE.: You unshackled the celestials from their prison, Oh Great One!


* ThirunAvalUr is now known as ThirunAmanallUr, situated 11 miles west of Panrutti.


This song has been written in the Nayaka-Nayaki BhAva portraying the pangs of separation of the heroine from Lord Murugan.
The poet assumes the role of Nayaki. Manmathan, the Love God, the flowery arrows, the shrieking cuckoo and the fiery moon are some of the sources which aggravate the agony of separation from the Lord.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 743 kOla maRai - thirunAvalUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]