திருப்புகழ் 739 சீத மதியம்  (திருவாமூர்)
Thiruppugazh 739 seedhamadhiyam  (thiruvAmur)
Thiruppugazh - 739 seedhamadhiyam - thiruvAmurSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தனன தனத்தந் ...... தனதான

......... பாடல் .........

சீத மதிய மெறிக்குந் ...... தழலாலே

சீறி மதனன் வளைக்குஞ் ...... சிலையாலே

ஓத மருவி யலைக்குங் ...... கடலாலே

ஊழி யிரவு தொலைக்கும் ...... படியோதான்

மாது புகழை வளர்க்குந் ...... திருவாமூர்

வாழு மயிலி லிருக்குங் ...... குமரேசா

காத லடியர் கருத்தின் ...... பெருவாழ்வே

காலன் முதுகை விரிக்கும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சீத மதிய மெறிக்குந் தழலாலே ... குளிர்ந்த நிலவு வீசுகின்ற
நெருப்பாலும்,

சீறி மதனன் வளைக்குஞ் சிலையாலே ... கோபத்துடன் மன்மதன்
வளைக்கின்ற வில்லினாலும்,

ஓத மருவி யலைக்குங் கடலாலே ... அலைகளை வீசி அலைக்கின்ற
கடலினாலும்,

ஊழி யிரவு தொலைக்கும் படியோதான் ... ஊழிக்காலம் போல
நீடித்துள்ள இந்த இரவை எப்படி நான் கழிப்பேன்?

மாது புகழை வளர்க்குந் திருவாமூர் ... மாதரசி திலகவதியாரின்*
புகழை வளர்க்கும் தலமாம் திருவாமூரில்**

வாழு மயிலி லிருக்குங் குமரேசா ... வாழுகின்ற குமரேசனே, மயில்
மீது வீற்றிருக்கும் குமரேசனே,

காத லடியர் கருத்தின் பெருவாழ்வே ... அன்புள்ள அடியார்களின்
கருத்தில் உறையும் பெருஞ் செல்வமே,

காலன் முதுகை விரிக்கும் பெருமாளே. ... யமனுடைய முதுகைப்
பிளக்கும்படி அடித்து விரட்டும் பெருமாளே.


* திலகவதியார் அப்பரின் தமக்கை. திருவாமூரில் வாழ்ந்து, அப்பரை
சமணத்திலிருந்து சைவத்துக்கு மீட்டார். திருவாமூர் பண்ருட்டியிலிருந்து
5 மைலில் உள்ளது.


இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது. நிலவு,
மன்மதன், அலைகடல், இரவு முதலியவை தலைவனின் பிரிவை மிகவும்
அதிகமாக்கும் பொருட்கள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.779  pg 2.780 
 WIKI_urai Song number: 744 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 739 - seedha madhiyam (thiruvAmUr)

seetha mathiya meRikkun ...... thazhalAlE

seeRi mathanan vaLaikkum ...... silaiyAlE

Otha maruvi yalaikkum ...... kadalAlE

Uzhi yiravu tholaikkum ...... padiyOthAn

mAthu pukazhai vaLarkkum ...... thiruvAmUr

vAzhu mayili lirukkum ...... kumarEsA

kAtha ladiyar karuththin ...... peruvAzhvE

kAlan muthukai virikkum ...... perumALE.

......... Meaning .........

seetha mathiya meRikkun thazhalAlE: The fire emitted by the rays of the cool moon,

seeRi mathanan vaLaikkum silaiyAlE: the bow bent by the fierce God of Love (Manmathan),

Otha maruvi yalaikkum kadalAlE: and the sea throwing out swirling waves, -

Uzhi yiravu tholaikkum padiyOthAn: all these make the night too long like the doom's day; how can I make the night go away?

mAthu pukazhai vaLarkkum thiruvAmUr: In the town ThiruvAmUr, made famous by the great lady, Thilakavathi*,

vAzhu mayili lirukkum kumarEsA: You have Your abode, Oh Kumaresa! You mount the Peacock, Oh Lord!

kAtha ladiyar karuththin peruvAzhvE: You are the greatest treasure found in the thoughts of Your loving devotees!

kAlan muthukai virikkum perumALE.: You smack Yaman (God of Death) splitting his back, Oh Great One!


* Thilakavathi was the sister of the Saivite Saint Appar. She lived in ThiruvAmUr where she redeemed her brother into Saivism back from Jainism.


This song is based on the Nayaka-Nayaki Bhavam, where the poet, assuming the heroine's role, expresses the pang of separation from the hero, Murugan.
The moonlight, waves of the sea, the God of Love Manmathan, His bow and arrows are a few of the things that aggravate the agony of separation.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 739 seedha madhiyam - thiruvAmur


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]