திருப்புகழ் 719 சயில அங்கனைக்கு  (மதுராந்தகம்)
Thiruppugazh 719 sayilaangkanaikku  (madhurAndhagam)
Thiruppugazh - 719 sayilaangkanaikku - madhurAndhagamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதாந்த தத்த தனன தத்தத்
     தந்த தத்த தந்த ...... தனதான

......... பாடல் .........

சயிலாங்க னைக்கு ருகியி டப்பக்
     கங்கொ டுத்த கம்பர் ...... வெகுசாரி

சதிதாண்ட வத்தர் சடையி டத்துக்
     கங்கை வைத்த நம்பர் ...... உரைமாளச்

செயல்மாண்டு சித்த மவிழ நித்தத்
     த்வம்பெ றப்ப கர்ந்த ...... வுபதேசஞ்

சிறியேன்த னக்கு முரைசெ யிற்சற்
     றுங்கு ருத்து வங்கு ...... றையுமோதான்

அயில்வாங்கி யெற்றி யுததி யிற்கொக்
     கன்ற னைப்பி ளந்து ...... சுரர்வாழ

அகிலாண்ட முற்று நொடியி னிற்சுற்
     றுந்தி றற்ப்ர சண்ட ...... முழுநீல

மயில்தாண்ட விட்டு முதுகு லப்பொற்
     குன்றி டித்த சங்க்ர ...... மவிநோதா

மதுராந்த கத்து வடதி ருச்சிற்
     றம்ப லத்த மர்ந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சயில அங்கனைக்கு உருகி ... மலை மகளாகிய பார்வதியின்
பக்திக்கு உருகி

இடப்பக்கங் கொடுத்த கம்பர் ... தமது இடது பாகத்தையே
கொடுத்தருளிய சிவனார்

வெகுசாரி சதிதாண்டவத்தர் ... பலவித வரிசைக் கூத்துக்களையும்,
ஜதி (தாளம்) நடனங்களையும் ஆடுபவரும்,

சடையி டத்துக் கங்கை வைத்த நம்பர் ... ஜடாமுடியில் கங்கை
ஆற்றை வைத்த நம் பெருமானும் ஆகிய சிவனாருக்கு

உரைமாளச் செயல்மாண்டு சித்தம் அவிழ ... பேச்சற்றுப் போய்,
செயல் இழந்து, மனம் அழியும்படியாக,

நித்தத் த்வம் பெறப் பகர்ந்த உபதேசம் ... என்றும் உள்ளதாகிய
தன்மையைப் பெற நீ கூறிய உபதேசத்தை

சிறியேன்தனக்கும் உரைசெயில் ... சிறியவனாகிய எனக்கும் நீ
சொல்லி உதவினால்

சற்றுங் குருத்துவம் குறையுமோதான் ... கொஞ்சமேனும் உனது
குருமூர்த்தியாம் பதவி குறைந்திடுமோ என்ன?

அயில்வாங்கி யெற்றி ... வேலாயுதத்தை எடுத்துச் செலுத்தி

உததியிற் கொக்கன் தனைப்பி ளந்து ... சமுத்திரத்தில் மாமரமாக
ஒளிந்த சூரனைப் பிளந்து,

சுரர்வாழ ... தேவர்கள் வாழ்வுற,

அகிலாண்ட முற்று நொடியினிற் சுற்றும் ... சகல
அண்டங்களையும் ஒரு நொடிப் பொழுதில் சுற்றிய

திறற் ப்ரசண்ட முழுநீல ... வலிமை வாய்ந்த, கடுமை கொண்ட,
முழு நீல நிறமான

மயில்தாண்ட விட்டு ... மயிலைப் பாய்ந்தோடச் செய்தவனும்,

முதுகுலப்பொற் குன்றிடித்த ... பழைய சிறந்த பொன்மயமான
மேருமலையை செண்டால் அடித்தவனுமான*

சங்க்ரம விநோதா ... போர் விளையாட்டை உடையவனே,

மதுராந்தகத்து வட ... மதுராந்தகத்துக்கு வடக்குப் பகுதியில்

திருச்சிற்றம்பலத்து அமர்ந்த பெருமாளே. ... திருச்சிற்றம்பலம்**
என்னும் திருக்கோயிலில் அமர்ந்த பெருமாளே.


* முருகன் உக்கிர பாண்டியனாக அவதரித்து பாண்டிய நாட்டுப் பஞ்சத்தை
தீர்க்க பொன்மயமான மேருமலையை கையிலுள்ள செண்டாயுதத்தால் அடித்து
பொன் கொட்டச் செய்த வரலாறு - திருவிளையாடற் புராணம்.


** மதுராந்தகத்திலுள்ள முருகன் ஆலயத்திற்கு வட திருச்சிற்றம்பலம் என்று பெயர்.
மதுராந்தகம் செங்கற்பட்டுக்குத் தெற்கே 15 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.725  pg 2.726 
 WIKI_urai Song number: 723 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 719 - sayila angkanaikku (madhurAndhagam)

sayilAnga naik urugi idap pak
     kang koduththa kambar ...... vegusAri

sathi thANda vaththar sadai yidaththu
     gangai vaiththa nambar ...... uraimALa

seyal mANdu chiththam avizha niththath
     thvam peRap pagarndha ...... upadhEsam

siRiyEn thanakku murai seyiR sat
     Run guruththuvang ...... kuRaiyumOthAn

ayil vAngi etri udhadhi yiRkok
     kandranaip piLandhu ...... surarvAzha

akilAnda mutru nodiyiniR sut
     runthiRaR prachaNda ...... muzhuneela

mayil thANda vittu mudhu kulap poR
     kundri diththa sangrama ...... vinOdhA

madhurAntha kaththu vada thiruch chitr
     ambalath amarndha ...... perumALE.

......... Meaning .........

sayilAnga naik urugi: Moved by the devotion of PArvathi (ShailajA), daughter of Mount HimavAn,

idap pakkang koduththa kambar: He gave the left side of His body to Her;

vegusAri sathi thANda vaththar: He dances in a variety of ways to various beats (jathis);

sadai yidaththu gangai vaiththa nambar: and He is our Lord SivA who has adorned His tresses with River Ganga.

uraimALa seyal mANdu chiththam avizha: He lost His speech, His actions died and His mind was blown apart

niththath thvam peRap pagarndha upadhEsam: when He received the preaching from You that secured His eternity;

siRiyEn thanakku murai seyiR: and if You condescend to preach the same ManthrA to this humble soul as well,

satRun guruththuvang kuRaiyumOthAn: do You think Your status of mastership will be diminished in the least?

ayil vAngi etri udhadhi yiRkokkandranaip piLandhu: When You took out Your spear and shot it to pierce through SUran who disguised himself in the sea as a mango tree,

surarvAzha: the DEvAs were rescued.

akilAnda mutru nodiyiniR sutrun: It has the capacity to go around the entire universe in a minute;

thiRaR prachaNda muzhuneela: it has tremendous strength, fury and deep blue colour;

mayil thANda vittu: and it is Your Peacock which You drove in a gallop!

mudhu kulap poRkundri diththa sangrama vinOdhA: You caned the golden crest of ancient Mount MEru with Your ChendAyutham (weapon in the shape of a cane), and to You war is simply a sport!*

madhurAntha kaththu vada: On the northern part of MadhurAnthagam,

thiruch chitrambalath amarndha perumALE.: there is ThiruchchitRambalam**, which is Your abode, Oh Great One!


* Murugan incarnated as Uggira PANdiyan who was guided in his dream by Lord SivA to cane the golden crest of Mount MEru to obtain the much-needed gold to remove the poverty of his kingdom - ThiruviLaiyAdal purANam.


** The Murugan Temple in MadhurAndhagam is known as Vada (North) ThiruchchitRambalam.
MadhurAndhagam is 15 miles south of Chengalpattu.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 719 sayila angkanaikku - madhurAndhagam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]