திருப்புகழ் 704 சாலநெடு நாள்  (கோடைநகர்)
Thiruppugazh 704 sAlanedunAL  (kOdainagar)
Thiruppugazh - 704 sAlanedunAL - kOdainagarSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானதன தான தந்த தானதன தான தந்த
     தானதன தான தந்த ...... தனதான

......... பாடல் .........

சாலநெடு நாள்ம டந்தை காயமதி லேய லைந்து
     சாமளவ தாக வந்து ...... புவிமீதே

சாதகமு மான பின்பு சீறியழு தேகி டந்து
     தாரணியி லேத வழ்ந்து ...... விளையாடிப்

பாலனென வேமொ ழிந்து பாகுமொழி மாதர் தங்கள்
     பாரதன மீத ணைந்து ...... பொருள்தேடிப்

பார்மிசையி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லொன்று
     பாதமலர் சேர அன்பு ...... தருவாயே

ஆலமமு தாக வுண்ட ஆறுசடை நாதர் திங்கள்
     ஆடரவு பூணர் தந்த ...... முருகோனே

ஆனைமடு வாயி லன்று மூலமென வோல மென்ற
     ஆதிமுதல் நார ணன்றன் ...... மருகோனே

கோலமலர் வாவி யெங்கு மேவுபுனம் வாழ்ம டந்தை
     கோவையமு தூற லுண்ட ...... குமரேசா

கூடிவரு சூர டங்க மாளவடி வேலெறிந்த
     கோடைநகர் வாழ வந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சாலநெடு நாள்மடந்தை காயமதிலே யலைந்து ... மிகவும் நீண்ட
நாட்களாக ஒரு பெண்ணின் கருவிலே கிடந்து அலைச்சலுற்று,

சாம் அளவதாக வந்து புவிமீதே சாதகமுமான பின்பு ... சாகும்
அளவிற்கான துன்பத்துக்கு ஆளாகிவந்து, இந்தப் புவிமீது பிறப்பை
அடைந்த பின்னர்,

சீறியழுதேகி டந்து தாரணியிலே தவழ்ந்து விளையாடி ...
வீறிட்டு அழுது, கீழே கிடந்து, தரையில் தவழ்ந்து விளையாடி,

பாலனெனவே மொழிந்து ... பால உருவினனாகப் பேச்சுக்கள் பேசி,

பாகுமொழி மாதர் தங்கள் பாரதன மீதணைந்து ... சர்க்கரை
போல இனிக்கும் சொற்களைக் கொண்ட மாதர்களின் பெரிய
மார்பகங்களை அணைந்து,

பொருள்தேடிப் பார்மிசையிலேயுழன்று ... பொருள் தேடவேண்டி
பூமியிலே திரிந்து அலைந்து,

பாழ்நரகெய்தாமல் ... பாழான நரகிலே போய்ச்சேராமல்

ஒன்று(ம்) பாதமலர் சேர அன்பு தருவாயே ... பொருந்திய உனது
பாத மலர்களை அடைவதற்குரிய அன்பை அருள்வாயாக.

ஆலம் அமுதாக வுண்ட ஆறுசடை நாதர் ... விஷத்தை அமிர்தமாக
உண்ட, கங்கை நதியை சடையில் சூடியுள்ள நாதர்,

திங்கள் ஆடரவு பூணர் தந்த முருகோனே ... சந்திரனையும்,
படமெடுத்து ஆடும் பாம்பையும் அணிந்தவராகிய சிவபிரான் தந்த
முருகனே,

ஆனைமடு வாயில் அன்று மூலமென ஓலமென்ற ... கஜேந்திரன்
என்ற யானை அன்று குளத்தில் (முதலை வாயில் அகப்பட்டு) ஆதி
மூலமே என்றும் நீயே தஞ்சம் என்றும் கூவி அழைத்த

ஆதிமுதல் நார ணன்றன் மருகோனே ... ஆதி முதல்வனான
நாராயணனின் மருகனே,

கோலமலர் வாவி யெங்கு மேவுபுனம் வாழ்ம டந்தை ... அழகிய
மலர்த் தடாகங்கள் எங்கும் இருந்த தினைப் புனத்தில் வாழ்ந்த பெண்
வள்ளியின்

கோவையமுது ஊற லுண்ட குமரேசா ... கொவ்வைக் கனி போன்ற
வாயின் அமுத ஊறலை உண்ட குமரனே,

கூடிவரு சூர் அடங்க மாள வடிவேலெறிந்த ... இரண்டு கூறாகப்
பிளவுபட்டாலும் ஒன்றாகக் கூடிவந்த சூரன் அடங்கி ஒடுங்க,
கூர்மையான வேலைச் செலுத்தியவனே,

கோடைநகர் வாழ வந்த பெருமாளே. ... கோடைநகர்* தலத்தில்
வாழவந்த பெருமாளே.


* கோடைநகர் இன்று வல்லைக்கோட்டை என வழங்கப்படுகிறது.
சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூருக்குத் தெற்கே 6 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.693  pg 2.694  pg 2.695  pg 2.696 
 WIKI_urai Song number: 708 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 704 - sAlanedu nAL (kOdainagar)

sAlanedu nALma danthai kAyamathi lEya lainthu
     cAmaLava thAka vanthu ...... puvimeethE

sAthakamu mAna pinpu seeRiyazhu thEki danthu
     thAraNiyi lEtha vazhnthu ...... viLaiyAdip

pAlanena vEmo zhinthu pAkumozhi mAthar thangaL
     pArathana meetha Nainthu ...... poruLthEdip

pArmisaiyi lEyu zhanRu pAzhnarakey thAma lonRu
     pAthamalar cEra anpu ...... tharuvAyE

Alamamu thAka vuNda ARucadai nAthar thingaL
     Adaravu pUNar thantha ...... murukOnE

Anaimadu vAyi lanRu mUlamena vOla menRa
     Athimuthal nAra NanRan ...... marukOnE

kOlamalar vAvi yengu mEvupunam vAzhma danthai
     kOvaiyamu thURa luNda ...... kumarEsA

kUdivaru sUra danga mALavadi vEleRintha
     kOdainagar vAzha vantha ...... perumALE.

......... Meaning .........

sAlanedu nAL madanthai kAyamathilE yalainthu: For several long days, I rambled inside the womb of a woman,

sAmaLava thAka vanthu puvimeethE cAthakamu mAna pinpu: with suffering amounting to death. Then, I took birth on this earth.

seeRiyazhu thEki danthu thAraNiyi lEtha vazhnthu viLaiyAdi: I cried aloud lying on the ground, crawled on the floor and later played around.

pAlanena vEmozhinthu pAkumozhi mAthar thangaL pArathana meetha Nainthu: I babbled like a child, and later, I hugged the large bosoms of sweet-tongued women.

poruLthEdip pArmisaiyi lEyu zhanRu: In search of wealth, I wandered around toiling in this world.

pAzhnarakey thAmal: I do not want to end up in this wretched hell, and for that

onRu pAthamalar cEra anpu tharuvAyE: kindly bless me with love to attain Your hallowed lotus feet!

Alamamu thAka vuNda ARucadai nAthar: He consumed the deadly poison as if it was nectar; He holds the river Ganga on His tresses;

thingaL Adaravu pUNar thantha murukOnE: He also wears the crescent moon and the serpent that dances with a raised hood; that Lord SivA delivered You, Oh MurugA!

Anaimadu vAyi lanRu mUlamena vOla menRa: Once, the elephant GajEndran was caught in a pond (by a crocodile) and screamed "Oh Primordial One! I surrender to You!" praying to

Athimuthal nAra NanRan marukOnE: the Pristine God, Narayana. You are the nephew of that Vishnu!

kOlamalar vAvi yengu mEvupunam vAzhma danthai: She lived in a millet-field surrounded by many ponds with beautiful flowers;

kOvaiyamu thURa luNda kumarEsA: You kissed that damsel VaLLi's lips, red like the kovvai fruit, and tasted the nectar, Oh Lord Kumara!

kUdivaru sUra danga mALavadi vEleRintha: Even though his body was split in two, SUran confronted You by attaching the two halves; and You silenced him by killing him with the sharp spear wielded from Your hand.

kOdainagar vAzha vantha perumALE.: You have Your abode in KOdainagar*, Oh Great One!


* KOdainagar is now known as VallakkOttai which is 6 miles south of SriperumputhUr near Chennai.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 704 sAlanedu nAL - kOdainagar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]