திருப்புகழ் 685 மருமல்லி யார்  (திருவலிதாயம்)
Thiruppugazh 685 marumalliyAr  (thiruvalidhAyam)
Thiruppugazh - 685 marumalliyAr - thiruvalidhAyamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதய்ய தானதன ...... தனதான

......... பாடல் .........

மருமல்லி யார்குழலின் ...... மடமாதர்

மருளுள்ளி நாயடிய ...... னலையாமல்

இருநல்ல வாகுமுன ...... தடிபேண

இனவல்ல மானமன ...... தருளாயோ

கருநெல்லி மேனியரி ...... மருகோனே

கனவள்ளி யார்கணவ ...... முருகேசா

திருவல்லி தாயமதி ...... லுறைவோனே

திகழ்வல்ல மாதவர்கள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மருமல்லி யார்குழலின் மடமாதர் ... வாசனை வீசும் மல்லிகை மலர்
நிறைந்த கூந்தலையுடைய இளம் பெண்களை

மருளுள்ளி நாயடியன்அலையாமல் ... காம மயக்கத்தால் நினைந்து
நினைந்து அடிநாயேன் அலைவுறாமல்,

இரு நல்லவாகும் உனதடிபேண ... நன்மை நல்கும் உன் இரண்டு
திருவடிகளை விரும்பிப் போற்ற

இனவல்ல மான மனது அருளாயோ ... தக்கதான பெருமையும்
மானமும் உள்ள மனதினை அருளமாட்டாயோ?

கருநெல்லி மேனி அரி மருகோனே ... கருநெல்லிக்காய் போல
பச்சையும் கருப்பும் கலந்த நிறத்து மாலின் மருகனே,

கனவள்ளியார்கணவ முருகேசா ... பெருமை வாய்ந்த வள்ளி
தேவியின் கணவனே, முருகேசா,

திருவல்லிதாயம் அதில் உறைவோனே ... திருவலிதாயம்* என்ற
தலத்தில் வீற்றிருப்பவனே,

திகழ்வல்ல மாதவர்கள் பெருமாளே. ... விளங்குகின்ற
பெருந்தவர்கள் போற்றும் பெருமாளே.


* திருவலிதாயம் இப்போது 'பாடி' எனப்படும். சென்னைக்கு அருகே
வில்லிவாக்கத்திற்கு 2 மைல் மேற்கே உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.649  pg 2.650 
 WIKI_urai Song number: 689 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 685 - marumalli yAr (thiruvalidhAyam)

marumalli yArkuzhalin ...... madamAdhar

maruL uLLinAy adiyan ...... alaiyAmal

iru nallavAgum unadh ...... adi pENa

inavalla mAna manadh ...... aruLAyO

karunelli mEni ari ...... marugOnE

gana vaLLiyAr kaNava ...... murugEsA

thiruvalli thAymadhil ...... uRaivOnE

thigazhvalla mAdhavargaL ...... perumALE.

......... Meaning .........

marumalli yArkuzhalin madamAdhar: Young girls with fragrant jasmine flowers in their hair

maruL uLLinAy adiyan alaiyAmal: were playing havoc with my thoughts, and I was roaming like a dog. (To get rid of that thought,)

iru nallavAgum unadh adi pENa: I need to worship Your two feet, which confer benefit

inavalla mAna manadh aruLAyO: will You not grant me a self respecting mind that is fit to do so?

karunelli mEni ari marugOnE: Just like the black and green NellikkAi (gourd-lemon) is the mixed complexion of Vishnu, and You are His nephew!

gana vaLLiyAr kaNava murugEsA: You are the Consort of the revered damsel, VaLLi, Oh Lord MurugA,

thiruvalli thAymadhil uRaivOnE: You have chosen ThiruvalidhAyam* as Your abode!

thigazhvalla mAdhavargaL perumALE.: You are praised by Great prominent Sages, Oh Great One!


* ThiruvalidhAyam is now known as PAdi, a suburb of Chennai, 2 miles West of VillivAkkam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 685 marumalli yAr - thiruvalidhAyam


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]