திருப்புகழ் 663 பையரவு போலு  (வெள்ளிகரம்)
Thiruppugazh 663 paiyaravupOlu  (veLLigaram)
Thiruppugazh - 663 paiyaravupOlu - veLLigaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தய்யதன தான தய்யதன தான
     தய்யதன தான ...... தனதான

......... பாடல் .........

பையரவு போலு நொய்யஇடை மாதர்
     பையவரு கோலந் ...... தனைநாடிப்

பையலென வோடி மையல்மிகு மோக
     பவ்வமிசை வீழுந் ...... தனிநாயேன்

உய்யவொரு கால மையவுப தேச
     முள்ளுருக நாடும் ...... படிபேசி

உள்ளதுமி லாது மல்லதவி ரோத
     உல்லசவி நோதந் ...... தருவாயே

வையமுழு தாளு மையகும ரேச
     வள்ளிபடர் கானம் ...... புடைசூழும்

வள்ளிமலை வாழும் வள்ளிமண வாள
     மையுததி யேழுங் ...... கனல்மூள

வெய்யநிரு தேசர் சையமுடன் வீழ
     வெல்லயில்வி நோதம் ...... புரிவோனே

வெள்ளிமணி மாட மல்குதிரு வீதி
     வெள்ளிநகர் மேவும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பை அரவு போலும் நொய்ய இடை மாதர் பைய வரு கோலம்
தனை நாடிப் பையல் என ஓடி மையல் மிகு மோக பவ்வம்
மிசை வீழும் தனி நாயேன்
... படம் கொண்ட பாம்பைப் போன்ற
நுண்ணிய இடையை உடைய விலைமாதர்கள் சாவகாசமாகச் செய்து
கொள்ளும் அலங்காரங்களை விரும்பி அற்பமான பையன் என்னும்படி
ஓடி மோகம் மிக்க காமக் கடலில் விழுகின்ற, தனித்து நிற்கும் நாய்
போன்றவனாகிய நான்

உய்ய ஒரு காலம் ஐய உபதேசம் உள் உருக நாடும்படி பேசி
உள்ளதும் இ(ல்)லாதும் அல்ல(லா)த அவிரோத உல்ல(லா)ச
விநோதம் தருவாயே
... பிழைப்பதற்கு ஒரு காலத்தில், ஐயனே, உமது
உபதேசத்தை என் மனம் உருகி விரும்பும்படி ஓதி, உள்ளது என்றும்
இல்லாதது என்றும், (இவை இரண்டும்) அல்லாததும் மாறுபாடு
இல்லாததும், உள்ளக் களிப்பை தருவதும் ஆகிய வியப்பைத் தந்து
அருளுக.

வையம் முழுது ஆளும் ஐய குமரேச வள்ளி படர் கானம் புடை
சூழும் வள்ளி மலை வாழும் வள்ளி மணவாளா
... உலகம்
முழுவதும் ஆள்கின்ற ஐயனே, குமரேசனே, வள்ளிக் கொடி படர்ந்துள்ள
காடுகள் பக்கத்தில் சூழ்ந்துள்ள வள்ளி மலையில் வாழ்கின்ற வள்ளி
நாயகியின் கணவனே,

மை உததி ஏழும் கனல் மூள வெய்ய நிருதேசர் சையமுடன்
வீழ வெல்ல அயில் விநோதம் புரிவோனே
... கரிய கடல்கள்
ஏழிலும் நெருப்பு எழ, கொடிய அசுரத் தலைவர்கள் (அவர்கள் இருந்த
கிரவுஞ்சம், ஏழு கிரி ஆகிய) மலைகளுடன் மாண்டு விழ, வெற்றி
கொண்ட வேலாயுதத்துடன் திருவிளையாடல் புரிந்தவனே,

வெள்ளி மணி மாடம் மல்கு திரு வீதி வெள்ளி நகர் மேவும்
பெருமாளே.
... வெண்ணிறத்து அழகிய மாடங்கள் நிறைந்த,
லக்ஷ்மிகரம் பொருந்திய வெள்ளி நகரில்* வீற்றிருக்கும் பெருமாளே.


* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கில் 22 மைலில் உள்ள வேப்பகுண்டா
ரயில் நிலையத்தினின்று மேற்கே 10 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.588  pg 2.589 
 WIKI_urai Song number: 667 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 663 - paiyaravu pOlu (veLLigaram)

paiyaravu pOlu noyyaidai mAthar
     paiyavaru kOlan ...... thanainAdip

paiyalena vOdi maiyalmiku mOka
     pavvamisai veezhun ...... thaninAyEn

uyyavoru kAla maiyavupa thEsa
     muLLuruka nAdum ...... padipEsi

uLLathumi lAthu mallathavi rOtha
     ullasavi nOthan ...... tharuvAyE

vaiyamuzhu thALu maiyakuma rEsa
     vaLLipadar kAnam ...... pudaicUzhum

vaLLimalai vAzhum vaLLimaNa vALa
     maiyuthathi yEzhung ...... kanalmULa

veyyaniru thEsar saiyamudan veezha
     vellayilvi nOtham ...... purivOnE

veLLimaNi mAda malkuthiru veethi
     veLLinakar mEvum ...... perumALE.

......... Meaning .........

pai aravu pOlum noyya idai mAthar paiya varu kOlam thanai nAdip paiyal ena Odi maiyal miku mOka pavvam misai veezhum thani nAyEn: Their slender waist is like a serpent with its hood raised; like a silly youth who is enamoured of the ornaments worn by these whores at a leisurely pace, I run after them to sink in the sea of passion and stand like a lonely dog;

uyya oru kAlam aiya upathEsam uL uruka nAdumpadi pEsi uLLathum i(l)lAthum alla(a)tha avirOtha ulla(a)sa vinOtham tharuvAyE: in order that I survive one of these days, Oh Lord, please impart Your teaching to me attracting my mind and melting it and also kindly grant me the wonderful knowledge to discriminate between existence and non-existence and to discern the principle that differs from those two and that does not undergo any change but gives me mental bliss!

vaiyam muzhuthu ALum aiya kumarEsa vaLLi padar kAnam pudai cUzhum vaLLi malai vAzhum vaLLi maNavALA: Oh Lord, You rule the entire world! Oh Lord KumarA, You are the consort of the Goddess VaLLi who lives in VaLLimalai surrounded by forests full of creepers called vaLLi!

mai uthathi Ezhum kanal mULa veyya niruthEsar saiyamudan veezha vella ayil vinOtham purivOnE: The seven dark seas caught fire and the evil leaders of the demons were destroyed along with their mountains (Krouncha and the seven mountains) when You sportingly battled with Your triumphant spear, Oh Lord!

veLLi maNi mAdam malku thiru veethi veLLi nakar mEvum perumALE.: This prosperous town VeLLikaram* is surrounded by white and gorgeous fortress walls, and You are seated here, Oh Great One!


* VeLLikaram is located 22 miles north of ArakkONam and 12 miles west of VEppakuNdA railway station.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 663 paiyaravu pOlu - veLLigaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]