திருப்புகழ் 644 பாரவித முத்த  (கதிர்காமம்)
Thiruppugazh 644 pAravidhamuththa  (kadhirgAmam)
Thiruppugazh - 644 pAravidhamuththa - kadhirgAmamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானதன தத்தத்த தானதன தத்தத்த
     தானதன தத்தத்த ...... தனதான

......... பாடல் .........

பாரவித முத்தப்ப டீரபுள கப்பொற்ப
     யோதர நெருக்குற்ற ...... இடையாலே

பாகளவு தித்தித்த கீதமொழி யிற்புட்ப
     பாணவிழி யிற்பொத்தி ...... விடுமாதர்

காரணிகு ழற்கற்றை மேல்மகர மொப்பித்த
     காதில்முக வட்டத்தி ...... லதிமோக

காமுகன கப்பட்ட வாசையைம றப்பித்த
     கால்களைம றக்கைக்கும் ...... வருமோதான்

தேரிரவி யுட்கிப்பு காமுதுபு ரத்திற்றெ
     சாசிரனை மர்த்தித்த ...... அரிமாயன்

சீர்மருக அத்யுக்ர யானைபடும் ரத்நத்ரி
     கோணசயி லத்துக்ர ...... கதிர்காம

வீரபுன வெற்பிற்க லாபியெயி னச்சிக்கு
     மேகலையி டைக்கொத்தி ...... னிருதாளின்

வேரிமழை யிற்பச்சை வேயிலரு ணக்கற்றை
     வேல்களில கப்பட்ட ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பாரவித முத்தப் படீர புளகப் பொன் பயோதர நெருக்கு
உற்ற இடையாலே
... பாரமானதும், முத்து மாலை அணிந்ததும்,
சந்தனம் பூசியதும், புளகாங்கிதம் கொண்டதும், அழகியதுமான
மார்பகங்களாலும், நெருங்கி மெலிதாக உள்ள இடையாலும்,

பாகு அளவு தித்தித்த கீத மொழியில் புட்ப பாண விழியில்
பொத்தி விடு(ம்) மாதர்
... சர்க்கரைப் பாகு போல் இனிக்கும் இசை
மொழியாலும், (மன்மதனுடைய) மலர்ப் பாணம் போல் தைக்கும்
கண்களாலும், காம மயக்கால் மூடி விடுகின்ற விலைமாதர்களின்

கார் அணி குழல் கற்றை மேல் மகரம் ஒப்பித்த காதில் முக
வட்டத்தில் அதி மோக காமுகன்
... மேகம் போன்ற கூந்தல்
கட்டினாலும், மகர மீன் போன்ற (குண்டல அலங்காரம் உள்ள)
காதினாலும், முக மண்டலத்தாலும் அதிக மோகம் கொண்ட
காமுகனாகிய நான்

அகப்பட்ட ஆசையை மறப்பித்த கால்களை மறக்கைக்கும்
வருமோ தான்
... சிக்கிக் கிடந்த காம இச்சையை அடியோடு மறக்கச்
செய்த உனது திருவடிகளை என்னால் மறக்கவும் கூடுமோ?

தேரில் ரவி உட்கிப் புகா முது புரத்தில் தெசாசிரனை
மர்த்தித்த அரி மாயன் சீர் மருக
... தேரில் எழுந்தருளும் சூரியன்
(ராவணனுக்கு) அஞ்சி உள்ளே புகாத பழைய ஊராகிய இலங்கையில்
பத்து தலைகளை உடைய ராவணனை கலக்கிப் பிசைந்த மாயோனாகிய
திருமாலின் சீரான மருகனே,

அத்யுக்ர யானை படும் ரத்ந த்ரி கோண சயிலத்து உக்ர
கதிர்காம வீர
... மிக வலிமையான யானைகள் எதிர்ப்படும், ரத்தினங்கள்
கிடைக்கும் திருக்கோண மலையிலும், உக்கிரமான கதிர்காமத்திலும்
வீற்றிருக்கும் வீரனே,

புன வெற்பில் கலாபி எனச் சிக்கு மேகலை இடைக் கொத்தில்
இரு தாளின்
... தினைப் புனம் உள்ள வள்ளி மலையில் மயில் போன்ற
வேடப் பெண் வள்ளியின் மேகலை அணிந்த இடையின் கொத்திலும்,
இரண்டு பாதங்களிலும்,

வேரி மழையில் பச்சை வேயில் அருணக் கற்றை வேல்களில்
அகப்பட்ட பெருமாளே.
... வாசனை தங்கிய மேகம் போன்ற
கூந்தலிலும், பசுமையான மூங்கிலை ஒத்த தோள்களிலும், சிவந்த
கிரணங்களைக் கொண்ட வேல் போன்ற கண்களிலும் சிக்கிக் கொண்ட
பெருமாளே.


* ராவணனுக்குப் பயந்து, அவனது ஆணைப்படி சூரியன் இலங்கை நகர்
வழியாகத் தன் தேரைச் செலுத்தாமல் இருந்தான்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.1057  pg 1.1058 
 WIKI_urai Song number: 426 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 644 - pAravitha (kadhirgAmam)

pAravitha muththappa deerapuLa kappoRpa
     yOthara nerukkutRa ...... idaiyAlE

pAkaLavu thiththiththa keethamozhi yiRputpa
     pANavizhi yiRpoththi ...... vidumAthar

kAraNiku zhaRkatRai mElmakara moppiththa
     kAthilmuka vattaththi ...... lathimOka

kAmukana kappatta vAsaiyaima Rappiththa
     kAlkaLaima Rakkaikkum ...... varumOthAn

thEriravi yutkippu kAmuthupu raththitRe
     sAsiranai marththiththa ...... arimAyan

seermaruka athyukra yAnaipadum rathnathri
     kONasayi laththukra ...... kathirkAma

veerapuna veRpiRka lApiyeyi nacchikku
     mEkalaiyi daikkoththi ...... niruthALin

vErimazhai yiRpacchai vEyilaru NakkatRai
     vElkaLila kappatta ...... perumALE.

......... Meaning .........

pAravitha muththap padeera puLakap pon payOthara nerukku utRa idaiyAlE: Their beautiful and exhilarating breasts are heavy, wearing a string of pearls and smeared with sandalwood paste; their tight waistline is slender;

pAku aLavu thiththiththa keetha mozhiyil putpa pANa vizhiyil poththi vidu(m) mAthar: their musical speech is sweet like the molten jaggery; their eyes impinge like the flowery arrows of Manmathan (God of Love); with all these, the whores provoke passion and trap their suitors;

kAr aNi kuzhal katRai mEl makaram oppiththa kAthil muka vattaththil athi mOka kAmukan: by their tuft of hair looking like the dark cloud, their ears wearing the swinging studs looking like the makara fish and their round faces, I have been exceedingly enchanted;

akappatta Asaiyai maRappiththa kAlkaLai maRakkaikkum varumO thAn: the locked-in obsessive passion of mine has been totally eradicated by Your hallowed feet, and how could I ever forget those feet?

thEril ravi utkip pukA muthu puraththil thesAsiranai marththiththa ari mAyan seer maruka: In the old country of LankA, the Sun was scared to enter and drive his chariot* (being terrified of RAvaNan); He bewildered that RAvaNan of ten heads and chopped him to pieces; and You are the famous nephew of that mystic Lord VishNu, Oh Lord!

athyukra yAnai padum rathna thri kONa sayilaththu ukra kathirkAma veera: There are ferocious elephants roaming about in ThirukkONamalai and hot KadhirgAmam where precious gems could be found, and You have chosen those places as Your abode, Oh valorous One!

puna veRpil kalApi enac chikku mEkalai idaik koththil iru thALin vEri mazhaiyil pacchai vEyil aruNak katRai vElkaLil akappatta perumALE.: VaLLi, the peacock-like damsel of the hunters, lives in the millet-field of Mount VaLLimali; and You have been ensnared by her waistline wearing the mEkalai (waistband), by her two petite feet, by her fragrant cloud-like hair, by her soft shoulders like green bamboo and by her spear-like eyes with reddish rays, Oh Great One!


* On the command of RAvaNan, the terrified sun never used to drive his chariot through the city of LankA.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 644 pAravidha muththa - kadhirgAmam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]