திருப்புகழ் 642 சரத்தே யுதித்தாய்  (கதிர்காமம்)
Thiruppugazh 642 saraththEyudhiththAi  (kadhirgAmam)
Thiruppugazh - 642 saraththEyudhiththAi - kadhirgAmamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
     தனத்தா தனத்தா ...... தனதான

......... பாடல் .........

சரத்தே யுதித்தா யுரத்தே குதித்தே
     சமர்த்தா யெதிர்த்தே ...... வருசூரைச்

சரிப்போன மட்டே விடுத்தா யடுத்தாய்
     தகர்த்தா யுடற்றா ...... னிருகூறாச்

சிரத்தோ டுரத்தோ டறுத்தே குவித்தாய்
     செகுத்தாய் பலத்தார் ...... விருதாகச்

சிறைச்சேவல் பெற்றாய் வலக்கார முற்றாய்
     திருத்தா மரைத்தா ...... ளருள்வாயே

புரத்தார் வரத்தார் சரச்சே கரத்தார்
     பொரத்தா னெதிர்த்தே ...... வருபோது

பொறுத்தார் பரித்தார் சிரித்தா ரெரித்தார்
     பொரித்தார் நுதற்பார் ...... வையிலேபின்

கரித்தோ லுரித்தார் விரித்தார் தரித்தார்
     கருத்தார் மருத்தூர் ...... மதனாரைக்

கரிக்கோல மிட்டார் கணுக்கான முத்தே
     கதிர்க்காம முற்றார் ...... முருகோனே.

......... சொல் விளக்கம் .........

சரத்தே யுதித்தாய் ... நாணல் காட்டிலே பிறந்தவனே (சரவணபவனே),

உரத்தே குதித்தே சமர்த்தாய் ... வலிமையோடு குதித்து
சாமர்த்தியமாய்

எதிர்த்தே வருசூரை ... எதிர்த்துவந்த சூரனை

சரிப்போன மட்டே விடுத்தாய் ... ஒழுங்காக நடந்துகொண்ட
வரைக்கும் விட்டுவைத்தாய்,

அடுத்தாய் ... சரியில்லாத போது அடுத்து வந்து அவனை நெருக்கினாய்,

தகர்த்தாய் உடற்றான் இருகூறா ... உடலை இரு கூறுகள்
ஆகுமாறு பிளந்தாய்,

சிரத்தோடு உரத்தோடு அறுத்தே குவித்தாய் ... தலையையும்
மார்பையும் அறுத்துக் குவித்தாய்,

செகுத்தாய் ... கொன்றெறிந்தாய்,

பலத்தார் விருதாகச் சிறைச்சேவல் பெற்றாய் ... பல மாலைகளை
விருதுகளாகவும், சிறகுடைய சேவல் ஒன்றையும் பரிசாகப் பெற்றாய்,

வலக்காரம் உற்றாய் ... வெற்றியை அடைந்தாய்,

திருத்தாமரைத்தாள் அருள்வாயே ... உனது அழகிய தாமரைப்
பாதங்களைத் தந்தருள்க.

புரத்தார் வரத்தார் ... திரிபுரத்தில் இருந்த வரம்பெற்ற மூன்று
அசுரர்களும்

சரச்சேகரத்தார் ... அம்புக் கூட்டங்கள் கொண்டவர்களாக

பொரத்தான் எதிர்த்தே வருபோது ... சண்டை செய்யவே எதிர்த்து
வரும்போது

பொறுத்தார் பரித்தார் ... முதலில் பொறுமையோடு இருந்தார், பிறகு
போர்க்கோலம் தரித்தார்,

சிரித்தார் எரித்தார் ... பின்பு சிரித்தார், திரிபுரத்தை எரித்தார்,

பொரித்தார் நுதற்பார்வையிலே ... பொரிபடச் செய்தார் தனது
நெற்றிக்கண் பார்வையாலேயே.

பினகரித்தோ லுரித்தார் ... பின்பு (கஜமுகாசுரனான) யானையின்
தோலை உரித்தார்,

விரித்தார் தரித்தார் ... அதனை விரித்து ஆடையாக அணிந்து
கொண்டார்.

கருத்தார் ... (தேவர்கள் கேட்டுக்கொண்டபடி தம்மீது அம்பு எய்யும்)
கருத்தோடு

மருத்தூர் மதனாரை ... தென்றலைத் தேராகக்கொண்டு ஊர்ந்துவந்த
மன்மதனை

கரிக்கோல மிட்டார் ... சாம்பல் அலங்காரமாக ஆக்கிய
பரமசிவனாரின்

கணுக்கான முத்தே ... கண்மணியான முத்தையனே,

கதிர்க்காம முற்றார் முருகோனே. ... கதிர்காமம் என்ற தலத்தில்
சென்று விளங்கிய முருகனே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.1053  pg 1.1054 
 WIKI_urai Song number: 424 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 642 - saraththE yudhiththAi (kadhirgAmam)

saraththE yudhiththAy uraththE kudhiththE
     samarththAy edhirththE ...... varusUrai

sarippOna matte viduththAy aduththAy
     thagarththA yudatrAn ...... irukURA

siraththO duraththO daRuththE kuviththAy
     seguththAy palaththAr ...... virudhAga

siRai sEval petrAy valakkAra mutrAy
     thiruththA maraiththAL ...... aruLvAyE

puraththAr varaththAr sarachchE garaththAr
     poraththAn edhirththE ...... varupOdhu

poRuththAr pariththAr siriththA reriththAr
     poriththAr nudhaRpAr ...... vaiyilEpin

kariththOl uriththAr viriththAr dhariththAr
     karuththAr maruththUr ...... madhanAraik

karikkola mittAr kaNukkAna muththE
     kadhirkAmam utrAr ...... murugOnE.

......... Meaning .........

saraththE udhiththAy: You are born between the reeds (saravaNabava);

uraththE kudhiththE samarththAy edhirththE varusUrai: When SUran jumped into the battlefield strongly and smartly,

sarippOna matte viduththAy: You spared him until he behaved himself;

aduththAy: (when he did not) You approached him and closed in on him;

thagarththA yudatrAn irukURA: then You split his body into two;

siraththO duraththO daRuththE kuviththAy: his head and chest were cut and piled into a heap;

seguththAy: finally, You killed him.

palaththAr virudhAga siRai sEval petrAy: Many garlands of appreciation were showered on You, along with a staff carrying a rooster.

valakkAra mutrAy: Victory greeted You!

thiruththA maraiththAL aruLvAyE: Kindly grant me Your lotus feet!

puraththAr varaththAr sarachchE garaththAr: The asuras at Thiripuram were well armed with boons and arrows;

poraththAn edhirththE varupOdhu: when they came forward to wage a war (with SivA),

poRuththAr pariththAr: SivA was patient at first and later, attired Himself in a war-outfit;

siriththA reriththAr: (without any weapons) he smiled and burnt Thiripuram down

poriththAr nudhaRpAr vaiyilE: with the sparkling fiery eye on His forehead!

pin kariththOl uriththAr: Then, He peeled off the hide of (GajamukAsuran who came as) an elephant;

viriththAr dhariththAr: He spread out the hide and wore it as His robe!

karuththAr maruththUr madhanArai: When Manmathan (Love God) sent by DEvAs, came on the chariot of southerly breeze with an intention to shoot arrows at Him,

karikkola mittAr: He reduced Manmathan into ashes; and that Great SivA

kaNukkAna muththE: adores You as the pearl of His eye!

kadhirkAmam utrAr murugOnE.: You are happily settled in KadhirgAmam, Oh MurugA!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 642 saraththE yudhiththAi - kadhirgAmam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]