திருப்புகழ் 621 அனங்கன் அம்பு  (கொடுங்குன்றம்)
Thiruppugazh 621 anangkanambu  (kodungkundRam)
Thiruppugazh - 621 anangkanambu - kodungkundRamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனந்த தந்தம் தந்தம் தந்தந் ...... தந்ததான

......... பாடல் .........

அனங்க னம்பொன் றஞ்சுந் தங்குங் ...... கண்களாலே

அடர்ந்தெ ழும்பொன் குன்றங் கும்பங் ...... கொங்கையாலே

முனிந்து மன்றங் கண்டுந் தண்டும் ...... பெண்களாலே

முடங்கு மென்றன் தொண்டுங் கண்டின் ...... றின்புறாதோ

தெனந்தெ னந்தெந் தெந்தெந் தெந்தெந் ...... தெந்தெனானா

செறிந்த டர்ந்துஞ் சென்றும் பண்பின் ...... தும்பிபாடக்

குனிந்தி லங்குங் கொம்புங் கொந்துந் ...... துன்றுசோலை

கொழுங்கொ டுந்திண் குன்றந் தங்குந் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

அனங்கன் அம்பு ஒன்று அஞ்சும் தங்கும் கண்களாலே ...
மன்மதனுடைய பொருந்திய மலர்ப் பாணங்கள் ஐந்தும் தங்குகின்ற
கண்களாலே,

அடர்ந்து எழும் பொன் குன்றம் கும்பம் கொங்கையாலே ...
நெருங்கி எழுந்துள்ள பொன் மலை, குடம் போன்ற மார்பகங்களாலே,

முனிந்து மன்றம் கண்டும் தண்டும் பெண்களாலே ...
கோபித்தும், பொதுச்சபை ஏறியும் தமக்கு உரிய பொருளைக்
கண்டிப்புடன் வசூலிக்கும் விலைமாதர்களால்,

முடங்கும் என்றன் தொண்டும் கண்டு இன்று இன்புறாதோ ...
(உனக்கு நான் செய்யும்) தொண்டு தடைபடுவதை இரக்கத்துடன்
பார்த்து, இன்று (உனது) திருவுள்ளம் இன்பம் அடையாதோ?

தெனந் தெனந் தெந்தெந்தெந் தெந்தெந் தெந்தெனானா ...
தெனந் தெனந் தெந்தெந்தெந் தெந்தெந் தெந்தென் என்ற ஒலிகளைச்
செய்து,

செறிந்து அடர்ந்து சென்றும் பண்பின் தும்பி பாட ... கூடி
நெருங்கிச் சென்று, நல்ல முறையில் வண்டுகள் இசைக்க,

குனிந்து இலங்கும் கொம்பும் கொந்தும் துன்று சோலை ...
வளைந்து விளங்கும் கிளைகளும், பூங்கொத்துகளும் நெருங்கிய
சோலைகள் (சூழ்ந்துள்ள)

கொழும் கொடும் திண் குன்றம் தங்கும் தம்பிரானே. ...
செழுமையான திண்ணிய கொடுங்குன்றம் என்னும் பிரான் மலையில்*
வீற்றிருக்கும் தம்பிரானே.


* கொடுங்குன்றம் என்ற பிரான் மலை ராமநாதபுரம் மாவட்டத்தில் சிவகங்கைக்கு
22 மைல் தூரத்திலுள்ள திருப்பத்தூர் நகருக்கு வடமேற்கே 15 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.1003  pg 1.1004  pg 1.1005  pg 1.1006 
 WIKI_urai Song number: 403 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 621 - anangkan ambu [kodungkundRam (pirAnmalai)]

ananga nampon Ranjum thangum ...... kaNkaLAlE

adarnthe zhumpon kundRam kumpam ...... kongaiyAlE

muninthu manRam kaNdun thaNdum ...... peNkaLAlE

mudangu menRan thoNdum kaNdin ...... RinpuRAthO

thenanthe nanthen thenthen thenthen ...... thenthenAnA

seRintha darnthum cenRum paNpin ...... thumpipAdak

kuninthi langkum kompum konthum ...... thunRusOlai

kozhungko dunthiN kundRam thangum ...... thambirAnE.

......... Meaning .........

anangan ampu onRu anjum thangum kaNkaLAlE: Because of the eyes in which all the five flowery arrows shot by Manmathan (God of Love) linger,

adarnthu ezhum pon kundRam kumpam kongaiyAlE: because of their enlarged bosom close together looking like the golden hill and the pot,

muninthu manRam kaNdum thaNdum peNkaLAlE: and because of the whores angrily getting up on the stage to extract their dues stringently,

mudangum enRan thoNdum kaNdu inRu inpuRAthO: I am distracted from my service to You; will You not look at my plight with compassion and bless me happily?

thenan thenan thenthenthen thenthen then thenAnA: To the tune of "thenan thenan thenthenthen thenthen then then"

seRinthu adarnthu senRum paNpin thumpi pAda: the swarming beetles sing together nicely in unison in

kuninthu ilangum kompum konthum thunRu sOlai: the thick groves where branches are arched beautifully and flowers are bunched together;

kozhum kodum thiN kundRam thangkum thambirAnE.: it is the fertile and sound town of Kodum kundRam* (known as PirAnmalai) which is Your abode, Oh Great One!


* KodungkundRam (PirAn malai) is in RAmanAthapuram District.
It is 15 miles northwest of Thiruppattur, which is 22 miles north of Sivaganga.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 621 anangkan ambu - kodungkundRam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]