திருப்புகழ் 615 கொண்டாடிக் கொஞ்சும்  (தென்சேரிகிரி)
Thiruppugazh 615 koNdAdikkonjum  (thensErigiri)
Thiruppugazh - 615 koNdAdikkonjum - thensErigiriSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தானத் தந்த தனதன
     தந்தானத் தந்த தனதன
          தந்தானத் தந்த தனதன ...... தனதான

......... பாடல் .........

கொண்டாடிக் கொஞ்சு மொழிகொடு
     கண்டாரைச் சிந்து விழிகொடு
          கொந்தாரச் சென்ற குழல்கொடு ...... வடமேருக்

குன்றோடொப் பென்ற முலைகொடு
     நின்றோலக் கஞ்செய் நிலைகொடு
          கொம்பாயெய்ப் புண்ட விடைகொடு ...... பலரோடும்

பண்டாடச் சிங்கி யிடுமவர்
     விண்டாலிக் கின்ற மயிலன
          பண்பாலிட் டஞ்செல் மருளது ...... விடுமாறு

பண்டேசொற் றந்த பழமறை
     கொண்டேதர்க் கங்க ளறவுமை
          பங்காளர்க் கன்று பகர்பொருள் ...... அருள்வாயே

வண்டாடத் தென்றல் தடமிசை
     தண்டாதப் புண்ட ரிகமலர்
          மங்காமற் சென்று மதுவைசெய் ...... வயலூரா

வன்காளக் கொண்டல் வடிவொரு
     சங்க்ராமக் கஞ்சன் விழவுதை
          மன்றாடிக் கன்பு தருதிரு ...... மருகோனே

திண்டாடச் சிந்து நிசிசரர்
     தொண்டாடக் கண்ட வமர்பொரு
          செஞ்சேவற் செங்கை யுடையசண் ...... முகதேவே

சிங்காரச் செம்பொன் மதிளத
     லங்காரச் சந்த்ர கலைதவழ்
          தென்சேரிக் குன்றி லினிதுறை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கொண்டாடிக் கொஞ்சு மொழி கொடு ... புகழ்ந்து பேசி, கொஞ்சிப்
பயிலும் மொழிகளைக் கொண்டும்,

கண்டாரைச் சிந்து விழி கொடு ... தாம் சந்தித்துப் பார்த்தவர்களை
(மனதை) வெட்டி அழிப்பது போன்ற கண் கொண்டும்,

கொந்து ஆரச் சென்ற குழல் கொடு வட மேருக் குன்றோட
ஒப்பு என்ற முலை கொடு
... பூங்கொத்துகள் நிறைந்த கூந்தலைக்
கொண்டும், வடக்கில் உள்ள மேரு மலைக்கு நிகரான மார்பினைக்
கொண்டும்,

நின்று ஓலக்கம் செய் நிலை கொடு கொம்பாய் எய்ப்புண்ட
இடை கொடு
... சபாமண்டபத்தில் நிலைத்து கொலு வீற்றிருப்பது
போன்ற தோரணையைக் கொண்டும், கொடி போல இளைத்துப் போன
மெல்லிய இடுப்பைக் கொண்டும்,

பலரோடும் பண்டு ஆடச் சிங்கி இடும் அவர் விண்டு
ஆலிக்கின்ற மயில் அன பண்பால்
... எல்லாரிடத்தும் பழகும் சரசம்
விளங்க வசப்படுத்தும் பொது மகளிரின் வாய் விட்டுக் கூவுகின்ற மயில்
போன்ற நடிப்பால்,

இட்டம் செல் மருள் அது விடுமாறு ... எனது விருப்பம்
அவர்களிடம் செல்லுகின்ற மயக்கம் நீங்கும்படி,

பண்டே சொல் தந்த பழ மறை கொண்டே தர்க்கங்கள் அற
உமை பங்காளர்க்கு அன்று பகர் பொருள் அருள்வாயே
...
தொன்மை வாய்ந்த சொற்களால் அமைந்த பழைய வேதமொழியைக்
கொண்டு, தர்க்க வாதங்களுக்கு இடமில்லாதபடி, உமையை இடப்
பாகத்தில் கொண்ட சிவபிரானுக்கு முன்பு உபதேசித்தப் பிரணவப்
பொருளை (எனக்கும்) அருள்வாயாக.

வண்டு ஆடத் தென்றல் தடம் மிசை தண்டாது அப் புண்டரிக
மலர் மங்காமல் சென்று மதுவை செய் வயலூரா
... வண்டுகள்
களித்து விளையாட, தென்றல் காற்று வீசும் குளத்தை விட்டு நீங்காது,
தாமரை மலர்கள் வாடிப் போகாமல் அவைகளிடம் போய் தேனைப்
பருகும் வயலூரில் உறைபவனே,

வன் காளக் கொண்டல் வடிவு ஒரு சங்க்ராமக் கஞ்சன் விழ
உதை மன்றாடிக்கு அன்பு தரு திரு மருகோனே
... வலிய கரிய
மேகத்தின் வடிவு உடையவனாய், போர் செய்யும் எண்ணமுடைய கம்சன்
இறந்து விழும்படி தாக்கி உதைத்துப் போராடிய கண்ணபிரானிடம்
அன்பு காட்டும் லக்ஷ்மியின் மருகனே,

திண்டாடச் சிந்து நிசிசரர் தொண்டு ஆடக்கண்ட அமர் பொரு
செம் சேவல் செம் கை உடைய சண்முக தேவே
... சிதறுண்ட
அசுரர்கள் திண்டாடும் படியாகவும், அடிமை பூணும்படியாகவும்
செய்து, அவர்களுடன் சண்டை செய்த செந்நிறமான வேலைச்
செங்கையில் உடைய சண்முகத் தேவனே,

சிங்காரச் செம் பொன் மதிள் அது அலங்காரச் சந்த்ர கலை
தவழ்
... அழகிய செம்பொன் மதிலின் அலங்காரம் கொண்டதாய்,
அதனைச் சந்திரனுடைய கதிர்கள் தழுவுவதான

தென் சேரிக் குன்றில் இனிது உறை பெருமாளே. ...
தென்சேரிகிரி* மலையில் இன்பத்துடன் வீற்றிருக்கும் பெருமாளே.


* செஞ்சேரிமலை என்று இப்போது வழங்கப்படும் இத்தலம் கோயமுத்தூர்
மாவட்டத்தில் பல்லடத்துக்கு தெற்கே 12 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.987  pg 1.988  pg 1.989  pg 1.990 
 WIKI_urai Song number: 397 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 615 - koNdAdik konjum (thensErigiri)

koNdAdik konju mozhikodu
     kaNdAraic chinthu vizhikodu
          konthArac chenRa kuzhalkodu ...... vadamEruk

kunROdop penRa mulaikodu
     ninROlak kamchey nilaikodu
          kompAyeyp puNda vidaikodu ...... palarOdum

paNdAdac chingi yidumavar
     viNdAlik kinRa mayilana
          paNpAlit tanjel maruLathu ...... vidumARu

paNdEsot Rantha pazhamaRai
     koNdEthark kanga LaRavumai
          pangALark kanRu pakarporuL ...... aruLvAyE

vaNdAdath thenRal thadamisai
     thaNdAthap puNda rikamalar
          mangAmaR chenRu mathuvaisey ...... vayalUrA

vankALak koNdal vadivoru
     sangrAmak kanjan vizhavuthai
          manRAdik kanpu tharuthiru ...... marukOnE

thiNdAdac chinthu nisisarar
     thoNdAdak kaNda vamarporu
          chenjEvaR chengai yudaiyasaN ...... mukathEvE

singArac chempon mathiLatha
     langArac chanthra kalaithavazh
          thensErik kunRi linithuRai ...... perumALE.

......... Meaning .........

koNdAdik konju mozhi kodu: With a flattering speech, they flirt with teasing and tantalising words;

kaNdAraic chinthu vizhi kodu: whoever they see, they tear their heart apart with their eyes;

konthu Arac chenRa kuzhal kodu vada mEruk kunROda oppu enRa mulai kodu: their hair is bedecked with a bunch of flowers; their bosom is comparable to the mount MEru in the north;

ninRu Olakkam sey nilai kodu kompAy eyppuNda idai kodu: with their majestic appearance as if they are seated in a stately court and with their slender waist like a creeper,

palarOdum paNdu Adac chingi idum avar viNdu AlikkinRa mayil ana paNpAl: and dancing like a peacock that shrieks aloud, these whores flirt amorously with everyone;

ittam sel maruL athu vidumARu: lest my desire is channelled towards them in a delusory way,

paNdE sol thantha pazha maRai koNdE tharkkangaL aRa umai pangALarkku anRu pakar poruL aruLvAyE: kindly teach me the same PraNava ManthrA that You preached, using primordial VEdic words in a manner beyond arguments, to Lord SivA on whose left side UmAdEvi is concorporate!

vaNdu Adath thenRal thadam misai thaNdAthu ap puNdarika malar mangAmal senRu mathuvai sey vayalUrA: Swarming merrily without leaving the lotus pond where the southerly breeze blows gently, the beetles imbibe honey from freshly blossomed lotus that never droop; such a pond is in VayalUr where You are seated, Oh Lord!

van kALak koNdal vadivu oru sangrAmak kanjan vizha uthai manRAdikku anpu tharu thiru marukOnE: He has the complexion of dense and dark cloud; He attacked and kicked the confrontational Kamsan with whom He fought until his death; He is Lord KrishNa who is the beloved of Goddess Lakshmi; and You are Her nephew, Oh Lord!

thiNdAdac chinthu nisisarar thoNdu AdakkaNda amar poru sem sEval sem kai udaiya saNmuka thEvE: The stranded demons were all taken as slaves after the red spear in Your reddish hand blew them apart, Oh Lord ShanmukhA!

singArac chem pon mathiL athu alangArac chanthra kalai thavazh: Beautiful golden-red wall surrounds this town like an ornament, and the moon's rays embrace it in

then sErik kunRil inithu uRai perumALE.: ThensEri giri* where You are seated with relish on the hill, Oh Great One!


* SenchErimalai is the present name of this town in Coimbatore District, located 12 miles south of Palladam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 615 koNdAdik konjum - thensErigiri

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]