திருப்புகழ் 574 எதிரெதிர் கண்டோடி  (விராலிமலை)
Thiruppugazh 574 ethiredhirkaNdOdi  (virAlimalai)
Thiruppugazh - 574 ethiredhirkaNdOdi - virAlimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனனந் தான தாத்த தனதனனந் தான தாத்த
     தனதனனந் தான தாத்த ...... தனதான

......... பாடல் .........

எதிரெதிர்கண் டோடி யாட்கள் களவதறிந் தாசை பூட்டி
     இடறிவிழும் பாழி காட்டு ...... மடமாதர்

இறைவைகொளுங் கூவல் மூத்த கறையொழுகுந் தாரை பார்க்கி
     லிளமைகொடுங் காத லாற்றில் ...... நிலையாத

அதிவிகடம் பீழ லாற்ற அழுகிவிழும் பீற லூத்தை
     அடையுமிடஞ் சீலை தீற்று ...... கருவாயில்

அருவிசலம் பாயு மோட்டை அடைவுகெடுந் தூரை பாழ்த்த
     அளறிலழுந் தாம லாட்கொ ...... டருள்வாயே

விதுரனெடுந் த்ரோண மேற்று எதிர்பொருமம் பாதி யேற்றி
     விரகினெழுந் தோய நூற்று ...... வருமாள

விரவுஜெயன் காளி காட்டில் வருதருமன் தூத னீற்ற
     விஜயனெடும் பாக தீர்த்தன் ...... மருகோனே

மதியணையுஞ் சோலை யார்த்து மதிவளசந் தான கோட்டின்
     வழியருளின் பேறு காட்டி ...... யவிராலி

மலைமருவும் பாதி யேற்றி கடிகமழ்சந் தான கோட்டில்
     வழியருளின் பேறு காட்டு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

எதிர் எதிர் கண்டு ஓடி ஆட்கள் களவு அது அறிந்து ஆசை
பூட்டி இடறி விழும் பாழி காட்டு(ம்) மடமாதர் இறைவை
கொளும் கூவல்
... எதிரில் எதிரில் வருகின்றவர்களைக் கண்டதும் ஓடிச்
சென்று (வருகின்ற) ஆட்களின் நிலையைத் திருட்டுத்தனமாகத் தெரிந்து
கொண்டு அவர்களுக்கு ஆசையை ஊட்டி, தடுக்கி விழும் குகை போன்ற
இடத்தை காட்டுகின்ற இளம் மாதர்களுடைய பெண்குறி (காம நீரை)
இறைப்பதற்கான கூடையைக் கொடுக்கின்ற கிணறு ஆகும்.

மூத்த கறை ஒழுகும் தாரை பார்க்கில் இளமை கொடும் காதல்
ஆற்றில் நிலையாத அதி விகடம் பீழல் ஆற்ற அழுகிவிடும்
பீறல் ஊத்தை அடையும் இடம்
... பழைய கழிவுப் பொருட்கள்
ஒழுகும் துவாரம். ஆராய்ந்து பார்த்தால் இளம் பருவத்துக் கொடிய காதல்
ஆற்றில் நிலைக்க முடியாத மிக்க பயங்கரமான துக்கம் விளைக்கும் சுழல்.
மிகவும் அழுகி விடுகின்ற கிழியுண்ட இடம். அழுக்கு சேரும் இடம்.

சீலை தீற்று(ம்) கரு வாயில் அருவி சலம் பாயும் ஓட்டை
அடைவு கெடும் தூரை பாழ்த்த அளறில் அழுந்தாமல் ஆட்
கொ(ண்)டு அருள்வாயே
... ஆடை மூடுகின்ற, கரு உண்டாகும்
துவார வாசல். அருவி போல் நீர் பாய்கின்ற ஓட்டை. தகுதி அற்ற
அடிப்பாகம் (ஆகிய) பாழ்பட்ட குழைச் சேற்றில் நான் அழுந்தாமல்,
(என்னை) ஆட்கொண்டு அருள்வாயே.

விதுரன் நெடும் த்ரோணம் ஏற்று எதிர் பொரும் அம்பு ஆதி
ஏற்றி விரகின் எழுந்து ஓய நூற்றுவரு(ம்) மாள விரவு ஜெயன்
காளி காட்டில் வரு தருமன் தூதன் நீற்ற விஜயன் நெடும்
பாக தீர்த்தன் மருகோனே
... விதுரன் பெரிய வில்லை எடுத்து,
எதிரியுடன் போர் செய்ய அம்பு முதலிய பாணங்களை அதில் ஏற்றி
சாமர்த்தியத்துடன் எழுந்து போர் புரிதல் ஓயுமாறு, துரியோதனன் ஆகிய
நூறு பேரும் இறக்க உபாயம் செய்த வெற்றி வீரன், துர்க்கை வாழும்
இடும்பை வனத்தில் வாசம் செய்த தருமருடைய தூதுவன், திருநீறு
இட்டுத் தவம் செய்த அருச்சுனனுடைய பெரிய தேரின் பாகனாகிய
பரிசுத்த மூர்த்தி திருமாலின் மருகனே,

மதி அணையும் சோலை ஆர்த்தும் அதி வள சந்தான
கோட்டின் வழி அருளி இன் பேறு காட்டிய விராலி மலை
மருவும்
... சந்திரன் தழுவும்படி உயர்ந்துள்ள சோலைகளோடு கூடிய,
அதிக வளப்பம் உள்ள சந்தானம் என்னும் மரம் போல, தன்னை
வழிபட்டோர்க்கு விரும்பியவற்றை வழங்கும் விராலி மலையில்*
வீற்றிருப்பவனே,

பாதி ஏற்றி கடி கமழ் சந்தான கோட்டில் வழி அருளின் பேறு
காட்டு(ம்) பெருமாளே.
... பாதி தூரம் வரை அன்பர்களை வரச்
செய்து, அங்கு தெய்வ மணம் கமழும் சந்தான கோடு என்னும் இடத்தில்
எழுந்தருளி இருந்து கொண்டு, அவர்கள் இச்சித்தவற்றை அருளும்
பெருமாளே.


விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில்
மணப்பாறைக்கு அருகே உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.881  pg 1.882  pg 1.883  pg 1.884 
 WIKI_urai Song number: 356 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 574 - ethiredhir kaNdOdi (virAlimalai)

ethirethirkaN dOdi yAtkaL kaLavathaRin thAsai pUtti
     idaRivizhum pAzhi kAttu ...... madamAthar

iRaivaikoLung kUval mUththa kaRaiyozhukun thArai pArkki
     liLamaikodung kAtha lAtRil ...... nilaiyAtha

athivikadam peezha lAtRa azhukivizhum peeRa lUththai
     adaiyumidam seelai theetRu ...... karuvAyil

aruvicalam pAyu mOttai adaivukedun thUrai pAzhththa
     aLaRilazhun thAma lAtko ...... daruLvAyE

vithuranedun thrONa mEtRu ethirporumam pAthi yEtRi
     virakinezhun thOya nUtRu ...... varumALa

viravujeyan kALi kAttil varutharuman thUtha neetRa
     vijayanedum pAka theerththan ...... marukOnE

mathiyaNaiyunj cOlai yArththu mathivaLasan thAna kOttin
     vazhiyaruLin pERu kAtti ...... yavirAli

malaimaruvum pAthi yEtRi kadikamazhsan thAna kOttil
     vazhiyaruLin pERu kAttu ...... perumALE.

......... Meaning .........

ethir ethir kaNdu Odi AtkaL kaLavu athu aRinthu Asai pUtti idaRi vizhum pAzhi kAttu(m) madamAthar iRaivai koLum kUval: Whenever they run into men coming from the opposite direction, they assess their situation stealthily and begin to flirt with them. They provoke a lot of passion in them and lead to the cave-like place in their body where one falters. The genitals revealed by these young women are nothing but an irrigational basket to fetch water from the well within.

mUththa kaRai ozhukum thArai pArkkil iLamai kodum kAthal AtRil nilaiyAtha athi vikadam peezhal AtRa azhukividum peeRal Uththai adaiyum idam: It is an outlet through which old sludges are discharged. If one does some research into the subject, it would be seen as a whirlpool that causes terrible misery in the so-called evil river of love in the early stages of youth. It is a tear in the body that is set to rot very badly. It is the spot where all dirt accumulates.

seelai theetRu(m) karu vAyil aruvi calam pAyum Ottai adaivu kedum thUrai pAzhththa aLaRil azhunthAmal At ko(N)du aruLvAyE: It is a clothed part of the body covering the gateway to the conception of a foetus. It is a hole from which liquids gush out like a waterfall. It is the worthless bottom-part of the body consisting of mushy mud, and I do not wish to be mired in that ruinous muck; and for that, You have to take me over and bless me, Oh Lord!

vithuran nedum thrONam EtRu ethir porum ampu Athi EtRi virakin ezhunthu Oya nUtRuvaru(m) mALa viravu jeyan kALi kAttil varu tharuman thUthan neetRa vijayan nedum pAka theerththan marukOnE: When Vidhuran took up the big bow and entered the battlefield, armed with weapons like arrows to fight with the enemy (PANdavAs), He cleverly achieved victory by deluding him into giving up the fight, ensuring that the hundred kauravAs headed by DhuriyOdhanan were killed; He is the messenger of Dharman who lived in the forest of idumbai where Goddess Durga was present; He is the charioteer driving the large chariot of Arjunan who performed penance wearing the holy ash on his forehead; He is the unblemished Lord KrishNA (Lord VishNu); and You are His nephew, Oh Lord!

mathi aNaiyum sOlai Arththum athi vaLa santhAna kOttin vazhi aruLi in pERu kAttiya virAli malai maruvum: In this place, the groves have tall trees on which the moon hovers; among those trees is the most fertile tree called santhAnam which is a wish-yielding one; like that tree, You also yield the wishes of the devotees who worship You, and You are seated in this mount VirAlimalai*, Oh Lord!

pAthi EtRi kadi kamazh santhAna kOttil vazhi aruLin pERu kAttu(m) perumALE.: Without making Your devotees come all the way to the top, You let them climb half the distance up to the spot, called SanthAna kOdu, where a divine fragrance prevails, and at that very spot You are seated showering Your blessings on the devotees and granting them their wishes, Oh Great One!


VirAlimalai is located 20 miles from Tiruchi on the route to Madhurai, near MaNappARai.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 574 ethiredhir kaNdOdi - virAlimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]