திருப்புகழ் 569 பாதாள மாதி லோக  (விராலிமலை)
Thiruppugazh 569 pAdhALamAdhilOga  (virAlimalai)
Thiruppugazh - 569 pAdhALamAdhilOga - virAlimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானான தான தான தனதன
     தானான தான தான தனதன
          தானான தான தான தனதன ...... தனதான

......... பாடல் .........

பாதாள மாதி லோக நிகிலமு
     மாதார மான மேரு வெனவளர்
          பாடீர பார மான முலையினை ...... விலைகூறிப்

பாலோடு பாகு தேனெ னினியசொ
     லாலேய நேக மோக மிடுபவர்
          பாதாதி கேச மாக வகைவகை ...... கவிபாடும்

வேதாள ஞான கீனன் விதரண
     நாதானி லாத பாவி யநிஜவன்
          வீணாள்ப டாத போத தவமிலி ...... பசுபாச

வ்யாபார மூடன் யானு முனதிரு
     சீர்பாத தூளி யாகி நரகிடை
          வீழாம லேசு வாமி திருவருள் ...... புரிவாயே

தூதாள ரோடு காலன் வெருவிட
     வேதாமு ராரி யோட அடுபடை
          சோராவ லாரி சேனை பொடிபட ...... மறைவேள்விச்

சோமாசி மார்சி வாய நமவென
     மாமாய வீர கோர முடனிகல்
          சூர்மாள வேலை யேவும் வயலியி ...... லிளையோனே

கூதாள நீப நாக மலர்மிசை
     சாதாரி தேசி நாம க்ரியைமுதல்
          கோலால நாத கீத மதுகர ...... மடர்சோலை

கூராரல் தேரு நாரை மருவிய
     கானாறு பாயு மேரி வயல்பயில்
          கோனாடு சூழ்வி ராலி மலையுறை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பாதாளம் ஆதி லோக நிகிலமும் ஆதாரமான மேரு என
வளர் பாடீர பாரமான முலையினை விலை கூறி
... பாதாளம்
முதலிய உலகம் எல்லாவற்றுக்கும் ஆதாரமான மேரு மலை போல்
வளர்ந்துள்ள, சந்தனம் அணிந்த பருத்த மார்பகத்தை விலை பேசி,

பாலோடு பாகு தேன் என இனிய சொ(ல்)லாலே அநேக
மோகம் இடுபவர்
... பால், சர்க்கரை, தேன் இவை போன்ற இனிப்பான
சொற்களால் நிரம்ப காம மோகத்தைத் தருபவர்களாகிய
விலைமாதர்களுடைய

பாத(ம்) ஆதி கேசமாக வகை வகை கவி பாடும் வேதாளன்
ஞான கீனன் விதரண நா தான் இலாத பாவி அநிஜவன்
...
கால் முதல் கூந்தல் வரை உள்ள உறுப்புக்களை பல விதமான
கவிதைகளைப் பாடும் நான் பேயன், ஞானம் குறைந்தவன், விவேகமுள்ள
நாக்கே இல்லாத பாவி, உண்மை இல்லாதவன்,

வீண் நாள் படாத போத தவம் இலி பசுபாச வ்யாபார மூடன்
யானும் உனது இரு சீர் பாத தூளியாகி நரகு இடை
வீழாமலே சுவாமி திருவருள் புரிவாயே
... வாழ்நாள் வீணாள்
ஆகாமல் காக்கும் அறிவும் தவமும் இல்லாதவன், உயிரைப் பற்றியும்,
உலகைப் பற்றியும் பேசிப் பொழுது போக்கும் பதி ஞானம் இல்லாத
மூடன், இத்தகைய குணங்களை உடைய நானும் உன்னுடைய இரண்டு
சிறப்பு வாய்ந்த பாதங்களின் தூளியாகும் பேறு பெற்று, அதனால் நரகில்
விழாமல், சுவாமியே, திருவருள் புரிவாயாக.

தூதாளர் ஓடு காலன் வெருவிடவேதா முராரி ஓட அடு
படைசோரா வலாரி சேனை பொடி பட
... தன்னுடைய
தூதர்களோடு யமன் அஞ்சி ஓடவும், பிரமனும் திருமாலும் அஞ்சி
ஓடவும், கொல்ல வல்ல படைகள் சோர்ந்து போய் இந்திரனுடைய சேனை
பொடிபட்டு அழியவும்,

மறை வேள்வி சோமாசிமார் சிவாய நம என மா மாய வீர
கோரமுடன் இகல் சூர் மாள வேலை ஏவும் வயலியில்
இளையோனே
... வேத வேள்விகள், சோம யாகம் செய்யும் பெரியோர்கள்
பஞ்சாக்ஷரத்தை ஓதித் துதித்து நிற்கவும், பெரிய மாயங்களும் வீரமும்
கோரமும் பொருந்தி போர் செய்த சூரன் இறக்கும்படி வேலாயுதத்தைச்
செலுத்திய, வயலூரில் வீற்றிருக்கும் இளையோனே,

கூதாள நீப நாக மலர் மிசை சாதாரி தேசி நாமக்ரியை முதல்
கோலால நாத கீத மதுகரம் அடர் சோலை
... கூதாளப் பூ,
கடப்ப மலர், சுரபுன்னை மலர் இவைகளின் மீது சாதாரி (பந்துவராளி),
தேசி (தேஷ்), நாமக்ரியை (நாதநாமக்கிரியை) முதலான ஆடம்பரமான
ராக இசைகளைப் பாடும் வண்டுகள் நிறைந்த சோலைகளும்,

கூர் ஆரல் தேரு(ம்) நாரை மருவிய கான் ஆறு பாயும் ஏரி
வயல் பயில் கோனாடு சூழ் விராலி மலை உறை
பெருமாளே.
... நிரம்ப ஆரல் மீன்களைக் கொத்தும் நாரைகள்
பொருந்திய காட்டாறுகள் பாய்கின்றனவும், ஏரிகளும் வயல்களும்
நெருங்கியுள்ள கோனாடு* என்னும் நாட்டில் உள்ள விராலி மலையில்
வீற்றிருக்கும் பெருமாளே.


* கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு,
காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது.
இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில்
மணப்பாறைக்கு அருகே உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.861  pg 1.862  pg 1.863  pg 1.864  pg 1.865  pg 1.866 
 WIKI_urai Song number: 351 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 569 - pAdhALa mAdhi lOga (virAlimalai)

pAthALa mAthi lOka nikilamu
     mAthAra mAna mEru venavaLar
          pAdeera pAra mAna mulaiyinai ...... vilaikURip

pAlOdu pAku thEne niniyaso
     lAlEya nEka mOka midupavar
          pAthAthi kEsa mAka vakaivakai ...... kavipAdum

vEthALa njAna keenan vitharaNa
     nAthAni lAtha pAvi yanijavan
          veeNALpa dAtha pOtha thavamili ...... pasupAsa

vyApAra mUdan yAnu munathiru
     seerpAtha thULi yAki narakidai
          veezhAma lEsu vAmi thiruvaruL ...... purivAyE

thUthALa rOdu kAlan veruvida
     vEthAmu rAri yOda adupadai
          sOrAva lAri sEnai podipada ...... maRaivELvi

sOmAsi mArsi vAya namavena
     mAmAya veera kOra mudanikal
          cUrmALa vElai yEvum vayaliyi ...... liLaiyOnE

kUthALa neepa nAka malarmisai
     sAthAri thEsi nAma kriyaimuthal
          kOlAla nAtha keetha mathukara ...... madarsOlai

kUrAral thEru nArai maruviya
     kAnARu pAyu mEri vayalpayil
          kOnAdu cUzhvi rAli malaiyuRai ...... perumALE.

......... Meaning .........

pAthALam Athi lOka nikilamum AthAramAna mEru ena vaLar pAdeera pAramAna mulaiyinai vilai kURi: They negotiate a price for their bosom, smeared with the paste of sandalwood, which looks like Mount MEru that is the pivotal mountain for all worlds including the nether-world;

pAlOdu pAku thEn ena iniya so(l)lAlE anEka mOkam idupavar: their speech is sweet like the milk, sugar and honey with which words these whores provoke extreme passion;

pAtha(m) Athi kEsamAka vakai vakai kavi pAdum vEthALan njAna keenan vitharaNa nA thAn ilAtha pAvi anijavan: describing poetically their organs right from the foot to their head, I am possessed by the devil; I lack true knowledge; I am a sinner whose tongue has no sense of discrimination; I am totally untruthful;

veeN nAL padAtha pOtha thavam ili pasupAsavyApAra mUdan yAnum unathu iru seer pAtha thULiyAki naraku idai veezhAmalE suvAmi thiruvaruL purivAyE: I do not possess either the intelligence or penance to use my living days without wasting them; I am a fool who whiles away time by merely talking about life and other earthly matters without the consciousness of the Divine; despite all these shortcomings, will I too be blessed with the privilege of becoming a speck on Your two hallowed feet, Oh Lord, thereby being graciously saved from falling into hell?

thUthALar Odu kAlan veruvidavEthA murAri Oda adu padaisOrA valAri sEnai podi pada: Terrified Yaman (God of Death) fled along with his messengers; Brahma and Lord VishNu also ran away in fear; the otherwise powerful and deadly army of IndrA became weary, and was shattered to pieces;

maRai vELvi sOmAsimAr sivAya nama ena mA mAya veera kOramudan ikal cUr mALa vElai Evum vayaliyil iLaiyOnE: the venerable sages, who perform penances and the SOma Yagna (sacrifice to the Moon) defined in the scriptures, stood there chanting the five-lettered ManthrA (NamasivAya) as the demon SUran, who fought the war in many mystic ways demonstrating his valour and ferocity, was killed by the Spear wielded by You, Oh Young Lord seated in VayalUr!

kUthALa neepa nAka malar misai sAthAri thEsi nAmakriyai muthal kOlAla nAtha keetha mathukaram adar sOlai: The groves in this place are full of many flowers like kUthALam, kadappa and gamboge (surapunnai) around which the beetles hum musically in various majestic melodies like sAdhAri (PanthuvarALi), thEsi (Desh) and nAmakriyai (NAthanAmakriyai);

kUr Aral thEru(m) nArai maruviya kAn ARu pAyum Eri vayal payil kOnAdu cUzh virAli malai uRai perumALE.: the storks around the wild river flowing here peck plenty of lamprey (Aral) fish; many lakes and paddy-fields abound in a cluster in this country called kOnAdu* in which is situated the mountain, VirAlimalai, and You are seated here, Oh Great One!


* KOnAdu is the region west of Mount eRumbeesar, east of MathiRkarai, south of River KAvEri and north of PirAnmalai; VirAlimalai is in this area, situated 20 miles from Tiruchi on the route to Madhurai, near MaNappARai.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 569 pAdhALa mAdhi lOga - virAlimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]