திருப்புகழ் 546 கொலை கொண்ட  (மயிலம்)
Thiruppugazh 546 kolaikoNda  (mayilam)
Thiruppugazh - 546 kolaikoNda - mayilamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதந்த தானன தானா தானா
     தனதந்த தானன தானா தானா
          தனதந்த தானன தானா தானா ...... தனதான

......... பாடல் .........

கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோ
     விடமிஞ்சு பாதக வேலோ சேலோ
          குழைகொண்டு லாவிய மீனோ மானோ ...... எனுமானார்

குயில்தங்கு மாமொழி யாலே நேரே
     யிழைதங்கு நூலிடை யாலே மீதூர்
          குளிர்கொங்கை மேருவி னாலே நானா ...... விதமாகி

உலைகொண்ட மாமெழு காயே மோகா
     யலையம்பு ராசியி னூடே மூழ்கா
          வுடல்பஞ்ச பாதக மாயா நோயா ...... லழிவேனோ

உறுதண்ட பாசமொ டாரா வாரா
     எனையண்டி யேநம னார்தூ தானோர்
          உயிர்கொண்டு போய்விடு நாள்நீ மீதா ...... ளருள்வாயே

அலைகொண்ட வாரிதி கோகோ கோகோ
     எனநின்று வாய்விட வேநீள் மாசூ
          ரணியஞ்ச ராசனம் வேறாய் நீறா ...... யிடவேதான்

அவிர்கின்ற சோதிய வாரார் நீள்சீ
     ரனலங்கை வேல்விடும் வீரா தீரா
          அருமந்த ரூபக ஏகா வேறோர் ...... வடிவாகி

மலைகொண்ட வேடுவர் கானூ டேபோய்
     குறமங்கை யாளுட னேமா லாயே
          மயல்கொண்டு லாயவள் தாள்மீ தேவீழ் ...... குமரேசா

மதிமிஞ்சு போதக வேலா ஆளா
     மகிழ்சம்பு வேதொழு பாதா நாதா
          மயிலந்தண் மாமலை வாழ்வே வானோர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கொலை கொண்ட போர் விழி கோலோ வாளோ விடம் மிஞ்சு
பாதக வேலோ சேலோ குறை கொண்டு உலாவிய மீனோ
மானோ எனு(ம்) மானார்
... கொலைத் தொழிலைத் தன்னிடத்தே
அடக்கி உள்ள, சண்டை செய்ய வல்ல கண்கள் அம்போ, வாளோ, விஷம்
நிறைந்து பாவத் தொழிலைச் செய்யவல்ல வேலாயுதமோ, சேல் மீனோ,
குண்டலத்தைத் தொடும் அளவு பாயக்கூடிய மீனோ அல்லது மானோ
என்று சொல்லக் கூடிய மாதர்களின்

குயில் தங்கு மா மொழியாலே நேரே இழை தங்கு நூல்
இடையாலே
... குயிலின் குரல் போல் அமைந்த இனிய பேச்சுக்களாலே,
கண் எதிரே தோன்றும் நூலின் இழை போன்ற மெல்லிய இடையாலே,

மீது ஊர் குளிர் கொங்கை மேருவினாலே நானா விதமாகி ...
மேலே பொருந்தியுள்ள குளிர்ந்த மார்பகம் ஆகும் மேரு மலையாலே,
பல விதமாக மனம் கலங்கி,

உலை கொண்ட மா மெழுகாயே மோகாய் அலை
அம்புராசியின் ஊடே மூழ்கா
... நெருப்பு உலையில் பட்ட நல்ல
மெழுகு போல உருகி, காம மோகம் என்னும் அலை வீசும் கடலினுள்
முழுகி,

உடல் பஞ்ச பாதகமாய் ஆ(ய்) நோயால் அழிவேனோ ...
உடல் பஞ்ச பாதகத்துக்கும்* ஈடாகி, பிணியால் அழிவேனோ?

உறு தண்ட(ம்) பாசமொடு ஆரா வாரா எனை அண்டியே
நமனார் தூது ஆனோர் உயிர் கொண்டு போய்விடு நாள் நீ
மீ தாள் அருள்வாயே
... கையில் உள்ள தண்டம், பாசக் கயிறு
இவைகளுடன் ஆரவாரம் செய்து வந்து என்னை நெருங்கி, யமனுடைய
தூதுவர்கள் என் உயிரைக் கொண்டு போய் விடும் அந்த நாளில் நீ
உன்னுடைய மேன்மையான திருவடியைத் தந்து அருளுக.

அலை கொண்ட வாரிதி கோகோ கோகோ என நின்று வாய்
விடவே
... அலை வீசும் கடல் கோகோ என்று வாய் விட்டு ஒலித்து
ஓலமிட,

நீள் மா சூர் அணி அம் சராசனம் வேறாய் நீறாயிடவே ...
பெரிய மாமரமாய் நின்ற சூரன் வைத்திருந்த அழகிய வில்லும்
அம்புகளும் வேறுபட்டுத் தூளாகவே,

தான்அவிர்கின்ற சோதிய வார் ஆர் நீள் சீர் அனல் அம் கை
வேல் விடும் வீரா தீரா அருமந்த ரூபக ஏகா
... சுயம்
பிரகாசமான ஜோதியைத் தன்னிடம் கொண்ட, நேர்மை நிறைந்த, பெரிய,
பெருமை வாய்ந்த நெருப்பு உருவத்தில் திருக் கையில் உள்ள வேலைச்
செலுத்திய வீரனே, தீரனே, அருமை வாய்ந்த அழகுள்ள உருவத்தவனே,
ஒப்பற்ற ஒருவனே,

வேறு ஓர் வடிவாகி மலை கொண்ட வேடுவர் கான்
ஊடே போய் குற மங்கையாளுடனே மால் ஆயே
... வேற்று
வடிவமான (வேட) உருவத்துடன் வள்ளிமலையில் வாழும் வேடர்கள்
வசிக்கும் காட்டுக்குள் சென்று, குறப் பெண்ணாகிய வள்ளியின் மேல்
ஆசை கொண்டு,

மயல் கொண்டு உலாய் அவள் தாள் மீதே வீழ் குமரேசா ...
மோக மயக்கத்துடன் உலாவி, அவளுடைய பாதங்களில் மீது வீழ்ந்து
வணங்கிய குமரேசா.

மதி மிஞ்சு போதக வேலா ஆளா மகிழ் சம்புவே தொழு பாதா
நாதா
... அறிவு நிறைந்த ஞான வேலனே, மாணவனாக உபதேசத்தைப்
பெற்று மகிழ்ந்த சிவபிரான் வணங்கும் திருவடியை உடைய நாதனே,

மயிலம் தண் மா மலை வாழ்வே வானோர் பெருமாளே. ...
மயிலம்** என்னும் குளிர்ந்த மலையில் வாழ்பவனே, தேவர்களின்
பெருமாளே.


* ஐவகை பாதகங்கள்:

கொலை, களவு, சூது, கள்ளுண்ணல், குரு நிந்தை.


** மயிலம் அதே பெயருடைய ரயில் நிலையத்துக்கு 3 மைலில் தென் ஆற்காடு
மாவட்டத்தில் விழுப்புரத்துக்கு அருகில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.799  pg 1.800  pg 1.801  pg 1.802 
 WIKI_urai Song number: 328 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 546 - kolai koNda (mayilam)

kolaikoNda pOrvizhi kOlO vALO
     vidaminju pAthaka vElO sElO
          kuzhaikoNdu lAviya meenO mAnO ...... enumAnAr

kuyilthangu mAmozhi yAlE nErE
     yizhaithangu nUlidai yAlE meethUr
          kuLirkongai mEruvi nAlE nAnA ...... vithamAki

ulaikoNda mAmezhu kAyE mOkA
     yalaiyampu rAsiyi nUdE mUzhkA
          vudalpanja pAthaka mAyA nOyA ...... lazhivEnO

uRuthaNda pAsamo dArA vArA
     enaiyaNdi yEnama nArthU thAnOr
          uyirkoNdu pOyvidu nALnee meethA ...... LaruLvAyE

alaikoNda vArithi kOkO kOkO
     enaninRu vAyvida vEneeL mAcU
          raNiyamcha rAsanam vERAy neeRA ...... yidavEthAn

avirkinRa sOthiya vArAr neeLsee
     ranalamkai vElvidum veerA theerA
          arumantha rUpaka EkA vEROr ...... vadivAki

malaikoNda vEduvar kAnU dEpOy
     kuRamangai yALuda nEmA lAyE
          mayalkoNdu lAyavaL thALmee thEveezh ...... kumarEsA

mathiminju pOthaka vElA ALA
     makizhsampu vEthozhu pAthA nAthA
          mayilanthaN mAmalai vAzhvE vAnOr ...... perumALE.

......... Meaning .........

kolai koNda pOr vizhi kOlO vALO vidam minju pAthaka vElO sElO kuRai koNdu ulAviya meenO mAnO enu(m) mAnAr: The eyes of these whores are comparable to the arrow or the sword, inherent with killing instinct, or the sinful spear filled with poison, or the sEl (fish), or the fish capable of swinging right up to, and touching, the swaying earstuds or the deer;

kuyil thangu mA mozhiyAlE nErE izhai thangu nUl idaiyAlE: falling for their sweet speech sounding like the cooing of the cuckoo, their barely visible slender waist, thin like a piece of thread,

meethu Ur kuLir kongai mEruvinAlE nAnA vithamAki: and their prominently showing cool bosom that looks like the mount MEru, my mind has been disturbed in several ways;

ulai koNda mA mezhukAyE mOkAy alai ampurAsiyin UdE mUzhkA: I have melted down like the good wax put into the furnace and am deeply drowned in the sea where waves of desparate passion toss about;

udal panja pAthakamAy A(y) nOyAl azhivEnO: my body having committed the five heinous sins*, am I supposed to die through affliction of diseases?

uRu thaNda(m) pAsamodu ArA vArA enai aNdiyE namanAr thUthu AnOr uyir koNdu pOyvidu nAL nee mee thAL aruLvAyE: On that day when the messengers of Yaman (God of Death) close in on me raising an uproar, armed with the mace and the rope of bondage, to take my life, kindly grant me Your hallowed feet!

alai koNda vArithi kOkO kOkO ena ninRu vAy vidavE: The wavy sea roared aloud sounding "kO kO";

neeL mA cUr aNi am sarAsanam vERAy neeRAyidavE: and the elegant bow and arrows held by the demon SUran, standing in the disguise of a mango tree, were shattered to pieces;

thAnavirkinRa sOthiya vAr Ar neeL seer anal am kai vEl vidum veerA theerA arumantha rUpaka EkA: when You wielded from Your hand the long and famous, fiery spear that has an inherent effulgence, symbolic of justice, Oh Valiant One! You are very brave, endearing and handsome, Oh Matchless One!

vERu Or vadivAki malai koNda vEduvar kAn UdE pOy kuRa mangaiyALudanE mAl AyE: In the disguise of a hunter You went into the forest of Mount VaLLimalai where hunters lived and fell in love with VaLLi, the damsel of the KuRavAs;

mayal koNdu ulAy avaL thAL meethE veezh kumarEsA: roaming about with deep passion for her, You prostrated at the feet of that VaLLi, Oh Lord KumarA!

mathi minju pOthaka vElA ALA makizh sampuvE thozhu pAthA nAthA: You are full of True Knowledge, Oh Lord with the spear! He happily learnt from You as a student, and that Lord SivA prostrates at Your hallowed feet, Oh Master!

mayilam thaN mA malai vAzhvE vAnOr perumALE.: You are seated in the cool mountain of Mayilam** and You are the Lord of the celestials, Oh Great One!


* Five heinous sins (crimes) are:

murder, stealing, lying, drunkenness and abuse of the teacher.


** Mayilam is located 3 miles from the railway station bearing its name, near Vizhuppuram, in South Arcot District.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 546 kolai koNda - mayilam


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]