திருப்புகழ் 534 கள்ளக் குவால் பை  (வள்ளிமலை)
Thiruppugazh 534 kaLLakkuvAlpai  (vaLLimalai)
Thiruppugazh - 534 kaLLakkuvAlpai - vaLLimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தய்யத்த தாத்த தய்யத்த தாத்த
     தய்யத்த தாத்த ...... தனதான

......... பாடல் .........

கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பை
     துள்ளிக்க னார்க்க ...... யவுகோப

கள்வைத்த தோற்பை பொள்ளுற்ற காற்பை
     கொள்ளைத்து ராற்பை ...... பசுபாச

அள்ளற்பை மாற்பை ஞெள்ளற்பை சீப்பை
     வெள்ளிட்ட சாப்பி ...... சிதமீரல்

அள்ளச்சு வாக்கள் சள்ளிட்டி ழாப்பல்
     கொள்ளப்ப டாக்கை ...... தவிர்வேனோ

தெள்ளத்தி சேர்ப்ப வெள்ளத்தி மாற்கும்
     வெள்ளுத்தி மாற்கு ...... மருகோனே

சிள்ளிட்ட காட்டி லுள்ளக்கி ரார்க்கொல்
     புள்ளத்த மார்க்கம் ...... வருவோனே

வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க
     வல்லைக்கு ளேற்று ...... மிளையோனே

வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த
     வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கள்ளக் குவால் பை தொள்ளைப் புலால் பை ... வஞ்சனை, பொய்
இவைகளின் கூட்டம் நிறைந்த பை, ஓட்டைகளை உடைய மாமிசப்பை,

துள் இக்கனார்க்கு அயவு கோப கள் வைத்த தோல் பை ...
துள்ளுகின்ற மன்மதனுடைய சேட்டைகளினால் தளர்வு, கோபம், களவு
இவைகளுக்கு இருப்பிடமான தோல் பை,

பொள்ளுற்ற கால் பை கொள்ளைத் துரால் பை ... வேகமாக
விரைந்து செல்லும் பலவித காற்றுகள் நிறைந்த பை, யமன் சூறையாடிக்
கொண்டு போவதற்கு அமைந்த செத்தையாகிய பை,

பசு பாச அள்ளல் பை மால் பை ஞெள்ளல் பை சீப் பை ...
ஜீவாத்மா, பந்தம் இவைகளுக்கு இடமாகிய சேற்றுப் பை, ஆசை
மயக்கத்துக்கு இடமாகிய பை, பாவங்களுக்கு இருப்பிடமாகிய பை, சீழ்
சேருகின்ற பை,

வெள்ளிட்ட அசா ... மிகுந்த தளர்ச்சி அடைந்த பை,

பிசிதம் ஈரல் அள்ளச் சுவாக்கள் சள்ளிட்டு இழா பல்
கொள்ளப்படு யாக்கை தவிர்வேனோ
... இறைச்சி, ஈரல் முதலிய
உறுப்புக்களை அள்ளி உண்பதற்கு நாய்கள் குலைத்தும், இழுத்தும்
பற்களால் குதறப்படுகின்ற இந்த உடலை ஒழிக்க மாட்டேனோ?

தெள் அத்தி சேர்ப்ப வெள் அத்தி மாற்கும் வெள் உத்தி
மாற்கும் மருகோனே
... அறிவு நிறைந்த தேவயானையின் தலைவனே,
(ஐராவதம் என்ற) வெள்ளை யானையை உடைய இந்திரனுக்கும்,
வெண்ணிறமான திருப்பாற் கடலில் உறையும் திருமாலுக்கும் மருகனே,

சிள் இட்ட காட்டில் உள்ளக் கிரார் கொல் புள் அத்த மார்க்கம்
வருவோனே
... வண்டுகள் நிறைந்த காட்டில் வசிக்கும் மலை வேடர்கள்
கொல்லும் பறவைகள் உள்ள கடுமையான காட்டு வழியில் வள்ளியின்
பொருட்டு வருகின்றவனே,

வள்ளிச் சன்மார்க்கம் விள் ஐக்கு ... வள்ளி அனுஷ்டித்த நன்னெறி*
என்னும் உபதேசத்தை தமக்கும் சொல்லுக என்று கேட்ட தந்தையாகிய
சிவபெருமானுக்கு

நோக்க வல்லைக்குள் ஏற்றும் இளையோனே ... கண்ணிமைக்கும்
ஒரு க்ஷணப்** பொழுதில் அவருடைய செவியில் ஏற்றிய இளையவனே,

வள்ளிக் குழாத்து வள்ளிக் கல் காத்த வள்ளிக்கு வாய்த்த
பெருமாளே.
... வள்ளிக் கொடிகள் கூட்டமாய் அடர்ந்த வள்ளி
மலைத்*** தினைப்புனத்தில் காவல் புரிந்த வள்ளி அம்மைக்கு
(மணாளனாக) வாய்த்த பெருமாளே.


* 'வள்ளிச் சன்மார்க்கம்' என்பது யாரொருவர் தன்னை இழந்து ('யான் எனது'
என்பன அற்று) தலைவனை நாடுகிறாரோ அவரை இறைவன் தானே நாடிவந்து
அருள் புரிவார் என்பதாகும். இந்த 'வள்ளிச் சன்மார்க்க' நெறியை முருகன்
சிவபெருமானுக்கு உபதேசித்தார்.


** வல்லை = க்ஷணம். க்ஷணப் பொழுதில் சிவனுக்கு உபதேசித்ததால்,
திருத்தணிகைக்கு திருக்ஷணிகை என்ற பெயரும் உண்டு.


*** வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராயவேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில்,
திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியர் அவதரித்த தலம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.767  pg 1.768  pg 1.769  pg 1.770 
 WIKI_urai Song number: 317 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 534 - kaLLak kuvAl pai (vaLLimalai)

kaLLakku vARpai thoLLaippu lARpai
     thuLLikka nArkka ...... yavukOpa

kaLvaiththa thORpai poLLutRa kARpai
     koLLaiththu rARpai ...... pasupAsa

aLLaRpai mARpai njeLLaRpai seeppai
     veLLitta sAppi ...... sithameeral

aLLacchu vAkkaL caLLitti zhAppal
     koLLappa dAkkai ...... thavirvEnO

theLLaththi sErppa veLLaththi mARkum
     veLLuththi mARku ...... marukOnE

ciLLitta kAtti luLLakki rArkkol
     puLLaththa mArkkam ...... varuvOnE

vaLLicchan mArkkam viLLaikku nOkka
     vallaikku LEtRu ...... miLaiyOnE

vaLLikku zhAththu vaLLikkal kAththa
     vaLLikku vAyththa ...... perumALE.

......... Meaning .........

kaLLak kuvAl pai thoLLaip pulAl pai: This is a bag filled with a bundle of treachery and lies; it is a bag of flesh with a lot of holes;

thuL ikkanArkku ayavu kOpa kaL vaiththa thOl pai: it is a leather bag containing lethargy, anger and stealth, caused by the mischievous and frenzied God of Love (Manmathan) holding a bow of sugarcane;

poLLutRa kAl pai koLLaith thurAl pai: it is a bag filled with many kinds of gases in rapid circulation; it is a bag of rubbish meant to be snatched away and emptied by Yaman (God of Death);

pasu pAsa aLLal pai mAl pai njeLLal pai seep pai: it is a muddy bag containing the soul and other shackles (of attachment); it is a bag of illusions, filled with sins; it is a bag in which puss and mucus accumulate;

veLLitta asA: it is a bag in which utter fatigue prevails;

pisitham eeral aLLac cuvAkkaL saLLittu izhA pal koLLappadu yAkkai thavirvEnO: this bag of my body contains flesh, liver and other parts all of which would be devoured by barking dogs, eagerly biting into, and pulling them apart, with their teeth. Why can I not get rid of such a body?

theL aththi sErppa veL aththi mARkum veL uththi mARkum marukOnE: You are the consort of the highly intelligent damsel, DEvayAnai; and You are the son-in-law of IndrA, master of the white elephant (AirAvadham), and of Lord VishNu who slumbers on the milky ocean!

siL itta kAttil uLLak kirAr kol puL aththa mArkkam varuvOnE: You walked for the sake of VaLLi on a rugged path in a dense forest (of VaLLimalai*) filled with humming beetles and birds which fall prey to the hunters.

vaLLis sanmArkkam* viL aikku: When Your father Lord SivA beseeched You to explain "the righteous way of meditation as practised by VaLLi",

nOkka vallaikkuL EtRum iLaiyOnE: in the twinkling of an eye**, You preached its significance into His ears, Oh Young One!

vaLLik kuzhAththu vaLLik kal kAththa vaLLikku vAyththa perumALE.: You are the beloved consort of the Divine damsel VaLLi who guarded the millet-field in VaLLimalai*** where the creepers called VaLLi are abundant, Oh Great One!


* VaLLi sanmArkkam is the method of meditation in which one contemplates on the Lord with total devotion (selflessly and without any possessiveness) whereupon the Lord comes forward to bless such a devotee; this method of meditation was preached to Lord SivA by Murugan.


** vallai means kshaNam - instant; As Murugan preached to SivA instantaneously, ThiruththaNigai has another name called ThirukshaNigai.


*** VaLLimalai is in North Arcot District 12 miles southeast of Roya VelUr, slightly north of Thiruvallam. This is the hill where VaLLi was found as a baby by the tribe of hunters.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 534 kaLLak kuvAl pai - vaLLimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]