திருப்புகழ் 528 சாந்தமில் மோகவெரி  (திருவேங்கடம்)
Thiruppugazh 528 sAndhamilmOgaveri  (thiruvEngkadam)
Thiruppugazh - 528 sAndhamilmOgaveri - thiruvEngkadamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தாந்தன தானதன தாந்தன தானதன
     தாந்தன தானதன ...... தனதான

......... பாடல் .........

சாந்தமில் மோகவெரி காந்திய வாவனில
     மூண்டவி யாதசம ...... யவிரோத

சாங்கலை வாரிதியை நீந்தவொ ணாதுலகர்
     தாந்துணை யாவரென ...... மடவார்மேல்

ஏந்திள வார்முளரி சாந்தணி மார்பினொடு
     தோய்ந்துரு காவறிவு ...... தடுமாறி

ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன்வசம்
     யான்தனி போய்விடுவ ...... தியல்போதான்

காந்தளி னானகர மான்தரு கானமயில்
     காந்தவி சாகசர ...... வணவேளே

காண்டகு தேவர்பதி யாண்டவ னேசுருதி
     யாண்டகை யேயிபமின் ...... மணவாளா

வேந்தகு மாரகுக சேந்தம யூரவட
     வேங்கட மாமலையி ...... லுறைவோனே

வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
     வேண்டவெ றாதுதவு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சாந்தமில் மோக எரி காந்தி ... பொறுமை இல்லாத மோகத்தினால்
உண்டாகிய நெருப்பின் சூடு காந்தவும்,

அவாவனில மூண்டு ... ஆசையாகிய பெருங்காற்று மிகுந்து வீசவும்,

அவியாத சமயவிரோத ... ஒரு போதும் ஓயாத, சமய வெறியால்
வாதிட்டுப் பகை கொள்ளச் செய்யும்

சாங்கலை வாரிதியை ... அழிகின்ற மதசாத்திரம் என்னும் பெரும்
சமுத்திரத்தை

நீந்தவொணாது ... நீந்திக் கடக்க முடியாமல்,

உலகர் தாந்துணை யாவரென ... உலகில் மனைவி, மக்கள், சுற்றம்,
இவையே துணையென நம்பியும்,

மடவார் மேல் ஏந்திள வார்முளரி ... பெண்கள் தம் உடல்மீது
அணிந்த மார்க் கச்சுடன், இளம் தாமரையன்ன,

சாந்தணி மார்பினொடு தோய்ந்து உருகா ... சந்தனம் பூசிய,
மார்பினைத் தழுவியும், உள்ளம் உருகியும்,

அறிவு தடுமாறி ஏங்கிட ... புத்தி தடுமாற்றத்தை அடைந்து,
ஏக்கத்தைக் கொண்ட அடியேனுடைய

ஆருயிரை வாங்கிய காலன்வசம் ... அருமையான ஆவியைக்
கவர்ந்து செல்லும் காலனின் வசப்பட்டு

யான்தனி போய்விடுவது இயல்போதான் ... யான் துணையின்றி
தனியே நமனுலகம் ஏகுதல் தகுதியோ?

காந்தளின் ஆனகர ... காந்தள் மலரைப் போன்ற மென்மையான
திருக்கரங்களை உடையவளும்,

மான்தரு கானமயில் காந்த ... மான் ஈன்ற, கானகத்து மயில்
போன்றவளுமான அழகி, வள்ளியின் கணவனே,

விசாக சரவணவேளே ... விசாக நக்ஷத்திரத்தில் ஜோதிப் பிழம்பாக
வெளிப்பட்டவனே, சரவணபவக் கடவுளே,

காண்டகு தேவர்பதி யாண்டவனே ... பார்க்க அழகிய தேவர்
தலைநகர் அமராவதியை மீட்டு ஆண்டவனே,

சுருதி யாண்டகையே ... வேதங்களால் துதிக்கப்பெறும் சிறந்த வீரனே,

இபமின் மணவாளா ... ஐராவத யானை போற்றி வளர்த்த மின் கொடி
போன்ற தேவயானையின் மணவாளனே,

வேந்த குமார குக ... அரசனே, என்றும் இளையவனே, இதய
குகையில் உறைபவனே,

சேந்த மயூர ... செம்மையான பண்பு நிறைந்தவனே, மயில் வாகனனே,

வட வேங்கட மாமலையில் உறைவோனே ... வட எல்லையில்
உள்ள திருவேங்கட மாமலையில் வாழ்பவனே,

வேண்டிய போதடியர் ... உன் அடியார்கள் விரும்பிய போதெல்லாம்

வேண்டிய போகமது வேண்ட ... அவர்கள் விரும்பிக் கேட்ட போக
பாக்கியங்களை உன்னிடம் விண்ணப்பிக்க,

வெறாது உதவு பெருமாளே. ... வெறுக்காமல் அவர்களுக்குத்
தந்து அருள் புரிகின்ற பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.595  pg 1.596  pg 1.597  pg 1.598 
 WIKI_urai Song number: 247 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 528 - sAndhamil mOgaveri (thiruvEngkadam)

sAnthamil mOhaveri kAnthiya vavanila
     mUNda viyAdha samaya ...... virOdha

sAngalai vAridhiyai neendhavo NAdhulagar
     thAnthuNai yAvarena ...... madavArmEl

EndhiLa vArmuLari sAndhaNi mArbinodu
     thOyndhurugA aRivu ...... thadumARi

Engida Aruyirai vAngiya kAlanvasam
     yAnthani pOyviduva ...... dhiyalpOthAn

kAndhaLi nAnakara mAntharu kAnamayil
     kAntha visAka sara ...... vaNavELE

kANdaku dhEvarpadhi ANdava nEsurudhi
     ANdakai yEyibamin ...... maNavALA

vEndha kumAra guha sEndha mayUra vada
     vEnkada mAmalaiyil ...... uRaivOnE

vENdiya pOdhadiyar vENdiya bOgamadhu
     vENdave Radhudhavu ...... perumALE.

......... Meaning .........

sAnthamil mOhaveri kAnthi: Without peace of mind, I was possessed by lust, scorching me like fire.

avavanila mUNdu: Desire, like a cyclone, was playing havoc in my mind.

aviyAdha samaya virOdha sAngalai vAridhiyai: Never-ending disputes in the name of religion making it a doomed one, but big as an ocean,

neendhavoNAdhu: could never be crossed by me.

ulagar thAnthuNai yAvarena: I believed that in this world wife, children, family and friends are the only support!

madavArmEl EndhiLa vArmuLari sAndhaNi mArbinodu thOyndhurugA: Indulging in the pleasures of women, thinking about embracing their pretty young lotus-like bosoms, splashed with vermillion and sandal paste,

aRivu thadumARi Engida: I lost my balance of judgement and became very desperate.

Aruyirai vAngiya kAlanvasam: In the end, my precious life was being snatched away by Yaman (Death-God),

yAnthani pOyviduva dhiyalpOthAn: and I was left all alone without anyone by my side. Is this a fitting end to me?

kAndhaLi nAnakara: She has soft arms like the daffodils (kAnthaL);

mAntharu kAnamayil: She was delivered by Lakshmi in the disguise of a deer; She looks like a peahen;

kAntha: She is VaLLi, and You are Her consort!

visAka saravaNavELE: You manifested as a Luminous Light on a VishAkA day, Oh SaravaNabhava,

kANdaku dhEvarpadhi ANdavanE: You redeemed the beautiful City, AmarAvathi, DEvAs' Capital, and ruled!

surudhi ANdakaiyE: All the scriptures praise You as the most valorous one!

yibamin maNavALA: You are the consort of DEvayAnai, who is bright as a creeper of lightning, and who was reared by AirAvatham, the White Elephant of IndrA!

vEndha kumAra guha: Oh King! Oh youthful KumArA! Oh GuhA, who always dwells in the cave of my heart!

sEndha mayUra: Oh Virtuous One, with Peacock as Your vehicle!

vada vEnkada mAmalaiyil uRaivOnE: You reside in the holy mountain of ThiruvEngkadam, in the Northern Frontier!

vENdiya pOdhadiyar vENdiya bOgamadhu: Whenever Your devotees seek whatever boons they desire from You,

vENda veRadhudhavu perumALE.: You grant them ungrudgingly and exactly as they sought, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 528 sAndhamil mOgaveri - thiruvEngkadam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]