திருப்புகழ் 488 சுரும்பு உற்ற  (சிதம்பரம்)
Thiruppugazh 488 surumbuutRa  (chidhambaram)
Thiruppugazh - 488 surumbuutRa - chidhambaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனந்தத்த தனதான தனந்தத்த தனதான
     தனந்தத்த தனதான ...... தனதான

......... பாடல் .........

சுரும்புற்ற பொழில்தோறும் விரும்புற்ற குயில்கூவ
     துரந்துற்ற குளிர்வாடை ...... யதனாலுந்

துலங்குற்ற மருவாளி விரைந்துற்ற படியால
     தொடர்ந்துற்று வருமாதர் ...... வசையாலும்

அரும்புற்ற மலர்மேவு செழுங்கொற்ற அணையாலு
     மடைந்திட்ட விடைமேவு ...... மணியாலும்

அழிந்துற்ற மடமானை யறிந்தற்ற மதுபேணி
     அசைந்துற்ற மதுமாலை ...... தரவேணும்

கருங்கொற்ற மதவேழ முனிந்துற்ற கலைமேவி
     கரந்துள்ள மடமானி ...... னுடனேசார்

கரும்புற்ற வயல்சூழ பெரும்பற்ற புலியூரில்
     களம்பற்றி நடமாடு ...... மரன்வாழ்வே

இருந்துற்று மலர்பேணி யிடும்பத்தர் துயர்தீர
     இதம்பெற்ற மயிலேறி ...... வருகோவே

இனந்துற்ற வருசூர னுருண்டிட்டு விழவேல்கொ
     டெறிந்திட்டு விளையாடு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சுரும்பு உற்ற பொழில் தோறும் விரும்பு உற்ற குயில் கூவ ...
வண்டுகள் உள்ள சோலைகள் யாவிலும் விரும்பி அங்கே அடைந்துள்ள
குயில்கள் கூவுதலாலும்,

துரந்து உற்ற குளிர் வாடை அதனாலும் ... வெளிப்பட்டு வீசும்
குளிர்ந்த வாடைக் காற்றாலும்,

துலங்கு உற்ற மரு வாளி விரைந்து உற்ற படி ஆல ...
(மன்மதனுடைய) வாசனை பொருந்திய பாணங்களாகிய மலர்கள்
வேகமாக வந்து மேலே பட்டுச் சேர்வதாலும்,

தொடர்ந்து உற்று வரு மாதர் வசையாலும் ... (இவளைப்) பின்
தொடர்ந்து வருகின்ற பெண்களின் வசைப் பேச்சுக்களாலும்,

அரும்பு உற்ற மலர் மேவு செழும் கொற்ற அணையாலும் ...
மலர்ந்தும் மலராத அரும்பு நிலையில் உள்ள மலர்கள் தூவப்பட்டதும்,
வலிமை வாய்ந்த (காமன் தன்) வீரத்தைக் காட்டும் இடமுமான
படுக்கையாலும்,

அடைந்திட்ட விடை மேவு மணியாலும் ... (மேய்ந்த பின்பு) தத்தம்
வீடுகளைச் சேர்ந்தடைய வரும் மாடுகளின் கழுத்தில் கட்டியுள்ள
மணியின் ஓசையாலும்,

அழிந்து உற்ற மட மானை அறிந்து அற்றம் அது பேணி ...
(மனம்) அழிந்துள்ள இள மானாகிய இப் பெண்ணின் விரக வேதனையை
அறிந்து, சமயம் பார்த்து விரும்பி,

அசைந்து உற்ற மது மாலை தர வேணும் ... உன் மார்பில்
அசைந்தாடும் தேன் நிறைந்த மலர் மாலையைத் தந்தருள வேண்டும்.

கரும் கொற்ற மத வேழம் முனிந்து உற்ற க(கா)லை ... கரிய,
வீரம் வாய்ந்த (கணபதியாகிய) மத யானை கோபத்துடன் வந்து எதிர்த்த
அந்த சமயத்தில்,

மேவி கரந்து உள்ள மட மானின் உடனே சார் ... தன்னை நாடி,
தன் பின் ஒளிந்து அடைக்கலம் புகுந்த இள மானாகிய வள்ளியுடன்
சார்ந்தவனே,

கரும்பு உற்ற வயல் சூழ பெரும்பற்ற புலியூரில் களம் பற்றி
நடமாடும் அரன் வாழ்வே
... கரும்புகள் வளர்ந்த வயல்கள் சூழ்ந்த
பெரும்பற்றப் புலியூராகிய சிதம்பரத்தில் மேடையாக பொன்னம்பலத்தைத்
தேர்ந்தெடுத்து நடனம் செய்கின்ற சிவபெருமானுடைய செல்வமே.

இருந்து உற்று மலர் பேணி இடும் பத்தர் துயர் தீர ... இருந்து
பொருந்தி மலர்களை விரும்பி இட்டுப் பூஜிக்கும் அடியார்களின்
துயரம் தீர,

இதம் பெற்ற மயில் ஏறி வரு கோவே ... இன்பம் தரும் மயிலின்
மீது ஏறி வருகின்ற அரசனே,

இனம் துற்ற வரு சூரன் உருண்டிட்டு விழ வேல் கொ(ண்)டு
எறிந்திட்டு விளையாடு(ம்) பெருமாளே.
... சுற்றத்தாருடன்
நெருங்கி வந்த சூரன் தரையில் உருண்டு புரண்டு விழ, வேல் கொண்டு
வீசி எறிந்து விளையாடும் பெருமாளே.


இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது. குயில்,
வாடைக்காற்று, மன்மதன், மலர் அம்புகள், மாதர் வசைச் சொல், மலர் மஞ்சம்,
மாடுகளின் மணி முதலியவை தலைவனின் பிரிவுத் துயரை மிகவும்
அதிகமாக்கும் பொருட்கள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.469  pg 2.470 
 WIKI_urai Song number: 629 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 488 - surumbu utRa (chidhambaram)

churumputRa pozhilthORum virumputRa kuyilkUva
     thuranthutRa kuLirvAdai ...... yathanAlum

thulangutRa maruvALi virainthutRa padiyAla
     thodarnthutRu varumAthar ...... vasaiyAlum

arumputRa malarmEvu sezhunkotRa aNaiyAlum
     adainthitta vidaimEvu ...... maNiyAlum

azhinthutRa madamAnai yaRinthatRa mathupENi
     asainthutRa mathumAlai ...... tharavENum

karunkotRa mathavEzha muninthutRa kalaimEvi
     karanthuLLa madamAni ...... nudanEsAr

karumputRa vayalchUzha perumpatRa puliyUril
     kaLampatRi nadamAdu ...... maranvAzhvE

irunthutRu malarpENi yidumpaththar thuyartheera
     ithampetRa mayilERi ...... varukOvE

inanthutRa varucUra nuruNdittu vizhavElko
     deRinthittu viLaiyAdu ...... perumALE.

......... Meaning .........

churumpu utRa pozhil thORum virumpu utRa kuyil kUva: Because of the cooing of the cuckoos that love to gather in the groves where beetles swarm,

thuranthu utRa kuLir vAdai athanAlum: because of the gusty and chilly northerly wind,

thulangu utRa maru vALi virainthu utRa padi Ala: because of the impact on her body of the rapid, fragrant and flowery arrows wielded by Manmathan (the God of Love),

thodarnthu utRu varu mAthar vasaiyAlum: because of the scandal-mongering abuse of the women who pursue her,

arumpu utRa malar mEvu sezhum kotRa aNaiyAlum: because of the just-blossomed flowers sprinkled all over her bed which is the playground of Manmathan, powerfully showing off his valour,

adainthitta vidai mEvu maNiyAlum: and because of the sound of the little bells tied around the necks of the bulls returning home (after the day's grazing)

azhinthu utRa mada mAnai aRinthu atRam athu pENi: this deer-like damsel suffers from the agony of separation; understanding her plight and looking for the opportune moment,

asainthu utRa mathu mAlai thara vENum: will You not kindly grant her the nectar-dripping fresh garland swaying on Your chest?

karum kotRa matha vEzham muninthu utRa ka(a)lai: When GaNapathi appeared menacingly as the dark, triumphant and raging elephant,

mEvi karanthu uLLa mada mAnin udanE sAr: the young deer-like belle, VaLLi, sought Your refuge and hid behind You; and You made her Your consort!

karumpu utRa vayal chUzha perumpatRa puliyUril kaLam patRi nadamAdum aran vAzhvE: You are the treasure of a child of Lord SivA who chose the golden stage for His cosmic dance in PerumpatRa PuliyUr (Chidhambaram) which is surrounded by paddy fields filled with sugarcanes!

irunthu utRu malar pENi idum paththar thuyar theera: To remove the miseries of those devotees who worship You ardently by offering flowers in an orderly manner,

itham petRa mayil ERi varu kOvE: You appear before them mounted on Your comfortable peacock, Oh Lord!

inam thutRa varu cUran uruNdittu vizha vEl ko(N)du eRinthittu viLaiyAdu(m) perumALE.: When the demon SUran surged forward aggressively, accompanied by his clan, You wielded the Spear and knocked him down, like a child's play, making him roll over the ground, Oh Great One!


This song is based on the Nayaka-Nayaki Bhavam, where the poet expresses the pang of separation from the hero, Murugan.
The cuckoos, chilly northerly wind, the God of Love Manmathan, His flowery arrows, the scandal-mongering women, flowery bed and the bells around bulls' necks are a few of the things that aggravate the agony of separation.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 488 surumbu utRa - chidhambaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]