திருப்புகழ் 450 கைத்தருண சோதி  (சிதம்பரம்)
Thiruppugazh 450 kaiththaruNajOdhi  (chidhambaram)
Thiruppugazh - 450 kaiththaruNajOdhi - chidhambaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்ததன தான தத்ததன தான
     தத்ததன தான ...... தனதான

......... பாடல் .........

கைத்தருண சோதி யத்திமுக வேத
     கற்பகச கோத்ரப் ...... பெருமாள்காண்

கற்புசிவ காமி நித்யகலி யாணி
     கத்தர்குரு நாதப் ...... பெருமாள்காண்

வித்துருப ராம ருக்குமரு கான
     வெற்றி யயில் பாணிப் ...... பெருமாள்காண்

வெற்புளக டாக முட்குதிர வீசு
     வெற்றிமயில் வாகப் ...... பெருமாள்காண்

சித்ரமுக மாறு முத்துமணி மார்பு
     திக்கினினி லாதப் ...... பெருமாள்காண்

தித்திமிதி தீதெ னொத்திவிளை யாடு
     சித்திரகு மாரப் ...... பெருமாள்காண்

சுத்தவிர சூரர் பட்டுவிழ வேலை
     தொட்டகவி ராஜப் ...... பெருமாள்காண்

துப்புவளி யோடு மப்புலியுர் மேவு
     சுத்தசிவ ஞானப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கைத்தருண சோதி ... துதிக்கை உடைய, இளமை வாய்ந்த,
ஒளிமயமான,

அத்திமுக வேத கற்பக ... யானைமுகமுடைய, வேதப்பொருளான
கற்பக* விநாயகனின்

சகோத்ரப் பெருமாள்காண் ... இளைய சகோதரப் பெருமான் நீதான்.

கற்பு சிவகாமி நித்யகலியாணி ... கற்பரசி சிவகாமசுந்தரியும்,
நித்திய கல்யாணியுமான

கத்தர்குரு நாதப் பெருமாள்காண் ... பார்வதியின் தலைவரான
சிவனாரின் குருநாதப் பெருமான் நீதான்.

வித்துருப ராமருக்கு மருகான ... மழைத்துளி பெய்யும் மேகத்து
வண்ணனான இராமருக்கு மருமகனாகி

வெற்றி அயில் பாணிப் பெருமாள்காண் ... வெற்றி
வேலாயுதத்தைக் கரத்தில் ஏந்திய பெருமான் நீதான்.

வெற்புள கடாகம் உட்குதிர வீசு ... மலைகள் உள்ள
அண்டகோளங்கள் அஞ்சும்படி தோகையை வீசும்

வெற்றிமயில் வாகப் பெருமாள்காண் ... வெற்றி மயிலை
வாகனமாகக் கொண்ட பெருமான் நீதான்.

சித்ரமுகம் ஆறு முத்துமணி மார்பு ... அழகிய முகங்கள் ஆறும்,
முத்துமாலைகள் அணிந்த மார்பும்,

திக்கினில் இலாதப் பெருமாள்காண் ... வேறு எந்தத் திசையிலும்
காணமுடியாத பேரழகுப் பெருமான் நீதான்.

தித்திமிதி தீதென ஒத்திவிளையாடு ... தித்திமிதி தீது என
தாளமிட்டு விளையாடுகின்ற

சித்திரகுமாரப் பெருமாள்காண் ... அழகிய குமாரப்பெருமான்
நீதான்.

சுத்தவிர சூரர் பட்டுவிழ வேலை தொட்ட ... சுத்த வீரனே,
சூரர்கள் அழியும்படி வேலைச் செலுத்தியவனும்,

கவி ராஜப் பெருமாள்காண் ... சிறந்த கவியரசனாகியவனும்
ஆன பெருமான் நீதான்.

துப்புவளி யோடும் அப்புலியுர் மேவு ... தூயவளான வள்ளியுடன்
அந்தப் புலியூர் (சிதம்பரம்) தலத்தில் மேவி,

சுத்தசிவ ஞானப் பெருமாளே. ... சுத்த சிவஞான உருவான
பெருமாளே.


* சிதம்பரத்தில் மேற்கு கோபுரத்தின் வாயிலில் வீற்றிருக்கும் கணபதிக்கு கற்பக
விநாயகர் எனப் பெயர்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.361  pg 2.362 
 WIKI_urai Song number: 591 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 450 - kaiththaruNa jOdhi (chidhambaram)

kaiththaruNa jothi yaththimuka vEtha
     kaRpagasa gOthrap ...... perumALkAN

kaRpusiva kAmi nithyakali yANi
     kaththarguru nAthap ...... perumALkAN

viththurupa rAma rukkumaru kAna
     vetRiyayil pANip ...... perumALkAN

veRpuLaka tAka mutkuthira veesu
     vetRimayil vAgap ...... perumALkAN

chithramuka mARu muththumaNi mArbu
     thikkini lAthap ...... perumALkAN

thithimithi theethe noththiviLai yAdu
     chiththiraku mArap ...... perumALkAN

suththavira sUrar pattuvizha vElai
     thottakavi rAjap ...... perumALkAN

thuppuvaLi yOdu mappuliyur mEvu
     suththasiva gnAnap ...... perumALE.

......... Meaning .........

kaiththaruNa jothi: He has a trunk; He is youthful; He is luminous;

yaththimuka vEtha: He has an elephant's face; He is the substance of all VEdAs (scriptures);

kaRpagasa: His name is KaRpaga VinAyagar*;

gOthrap perumALkAN: and You are His younger brother, Oh Great One!

kaRpusiva kAmi nithyakali yANi: She is SivagAmi, the queen of chastity, and Nithya KalyaNi (Harbinger of good for ever);

kaththarguru nAthap perumALkAN: and You are the Master of Her consort, Lord SivA, Oh Great One!

viththurupa rAma rukkumaru kAna: You are the nephew of Rama, whose complexion is like the dark rainy clouds!

vetRiyayil pANip perumALkAN: You hold in Your hand the victorious Spear, Oh Great One!

veRpuLaka tAka mutkuthira veesu: Making the mountainous planets tremble with fear, as it sweeps its feathers furiously;

vetRimayil vAgap perumALkAN: is Your victorious Peacock, Oh Great One!

chithramuka mARu muththumaNi mArbu: Those lovely six faces and the vast bejewelled chest of Yours

thikkini lAthap perumALkAN: can never be seen in any other part of this Universe, Oh Great One!

thithimithi theethe noththiviLai yAdu: Dancing to the beat of the sound "thithimithi theethe ",

chiththiraku mArap perumALkAN: You are the most handsome Son of the Lord, Oh Great One!

suththavira: You are a true warrior, Oh valorous One!

sUrar pattuvizha vElai thotta: You threw Your Spear so powerfully as to destroy the demons (sUrar)!

kavi rAjap perumALkAN: You also excel in poetry being a King of Poems, Oh Great One!

thuppuvaLi yOdu mappuliyur mEvu: Along with Your purest consort, VaLLi, You reside in PuliyUr (Chidhambaram),

suththasiva gnAnap perumALE.: and You are the Pure Saivite Knowledge itself, Oh Great One!


* On the western side of the temple in Chidhambaram, there is a shrine for VinAyagar, known as KaRpaga VinAyagar.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 450 kaiththaruNa jOdhi - chidhambaram


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]