திருப்புகழ் 429 திருட்டு வாணிப  (திருவருணை)
Thiruppugazh 429 thiruttuvANiba  (thiruvaruNai)
Thiruppugazh - 429 thiruttuvANiba - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்த தானன தத்தன தத்தன
     தனத்த தானன தத்தன தத்தன
          தனத்த தானன தத்தன தத்தன ...... தனதான

......... பாடல் .........

திருட்டு வாணிப விக்ரம துட்டிகள்
     மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள்
          செகத்து நீலிகள் கெட்டப ரத்தைகள் ...... மிகநாணார்

சிலைக்கு நேர்புரு வப்பெரு நெற்றிக
     ளெடுப்பு மார்பிக ளெச்சிலு தட்டிகள்
          சிரித்து மாநுடர் சித்தமு ருக்கிகள் ...... விழியாலே

வெருட்டி மேல்விழு பப்பர மட்டைகள்
     மிகுத்த பாவிகள் வட்டமு கத்தினை
          மினுக்கி யோலைகள் பித்தளை யிற்பணி ...... மிகநீறால்

விளக்கி யேகுழை யிட்டபு ரட்டிகள்
     தமக்கு மால்கொடு நிற்கும ருட்டனை
          விடுத்து நானொரு மித்திரு பொற்கழல் ...... பணிவேனோ

தரித்த தோகண தக்கண செக்கண
     குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு
          தகுத்த தீதிகு தக்குகு திக்குகு ...... எனதாளந்

தடக்கை தாளமு மிட்டியல் மத்தள
     மிடக்கை தாளமு மொக்கந டித்தொளி
          தரித்த கூளிகள் தத்திமி தித்தென ...... கணபூதம்

அருக்க னாரொளி யிற்ப்ரபை யுற்றிடு
     மிரத்ந மாமுடி யைக்கொடு கக்கழ
          லடக்கை யாடிநி ணத்தையெ டுத்துண ...... அறவேதான்

அரக்கர் சேனைகள் பட்டுவி ழச்செறி
     திருக்கை வேல்தனை விட்டரு ளிப்பொரும்
          அருட்கு காவரு ணைப்பதி யுற்றருள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

திருட்டு வாணிப விக்ரம துட்டிகள் மதத்த ரூபிகள் துர்ச்சன
பொட்டிகள் செகத்து நீலிகள் கெட்ட பரத்தைகள் மிக
நாணார்
... வியாபாரம் செய்வதில் சாமர்த்தியம் கொண்ட துஷ்டைகள்.
ஆணவ சொரூபம் உடையவர்கள். தீய தன்மை கொண்ட பொது மகளிர்.
இவ்வுலகில் மிக்க தந்திரவாதிகள். கெட்டுப் போன வேசியர்கள். மிகவும்
நாணம் அற்றவர்கள்.

சிலைக்கு நேர் புருவப் பெரு நெற்றிகள் எடுப்பு மார்பிகள்
எச்சில் உதட்டிகள் சிரித்து மாநுடர் சித்தம் உருக்கிகள்
விழியாலே வெருட்டி மேல் விழு பப்பர மட்டைகள்
... வில்லைப்
போன்ற புருவத்தையும் சிறந்த நெற்றியையும் முன்னுக்கு விளங்கும்
மார்பையும் உடையவர்கள். எச்சில் நிறைந்த உதட்டை உடையவர்கள்.
சிரிப்பினாலேயே மனிதர்களுடைய மனதை உருக்குபவர்கள்.
கண்களாலே விரட்டி, மேலே விழுகின்ற கூத்தாடும் பயனிலிகள்.

மிகுத்த பாவிகள் வட்ட முகத்தினை மினுக்கி ஓலைகள்
பித்தளையில் பணி மிக நீறால் விளக்கியே குழை இட்ட
புரட்டிகள்
... மிக்க பாபம் செய்தவர்கள். வட்டமான முகத்தை மினுக்கி
காதோலைகளாயுள்ள பித்தளையில் செய்யப்பட்ட ஆபரணங்களை
அதிகமான சாம்பலிட்டு விளக்கம் பெறச் செய்து குண்டலங்களை
அணிந்தவர்கள். மாறுபட்ட பேச்சை உடையவர்கள்.

தமக்கு மால் கொடு நிற்கும் மருள் தனை விடுத்து தான்
ஒருமித்து இரு பொன் கழல் பணிவேனோ
... இத்தகையோர்கள்
மீது காதல் கொண்டு நிற்கும் மயக்கத்தை விட்டு, நான் மனம்
ஒருமைப்பட்டு உனது அழகிய திருவடிகளைப் பணிவேனோ?

தரித்த தோகண தக்கண செக்கண
குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு
தகுத்த தீதிகு தக்குகு திக்குகு என தாளம் தடக் கை
தாளமும் இட்டு இயல் மத்தளம் இடக்கை தாளமும் ஒக்க
...
தரித்த தோகண தக்கண செக்கண
குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு
தகுத்த தீதிகு தக்குகு திக்குகு இந்த வகையான இசைத்
தாளங்களில் பெரிய கைகளால் தாளமும் இட்டு, பொருந்திய
மத்தளம், இடக்கை, தாளம் இவை எல்லாம் ஒருங்கே ஒலிக்க,

நடித்து ஒளி தரித்த கூளிகள் தத்திமி தித்தென கண பூதம்
அருக்கனார் ஒளியில் ப்ரபை உற்றிடும் இரத்ந மா முடியைக்
கொ(ண்)டு உகக் கழல் அடக் கையாடி நிணத்தை எடுத்து
உ(ண்)ண
... அதற்குத் தகுந்தவாறு நடனம் செய்து ஒளி கொண்ட
பேய்கள், தத்திமி தித்தெனக் கூட்டமான பூதங்கள் சூரியனுடைய ஒளி
போல பிரகாசிக்கும் ரத்தினத்தால் ஆன கிரீடங்களைக் கொண்டு (அவை
சிந்தும்படியாக) கழற்சிக் காய்களாகக் கொண்டு விளையாடி மாமிசங்களை
எடுத்து உண்ணும்படி,

அறவே தான் அரக்கர் சேனைகள் பட்டு விழச் செறி திருக்கை
வேல் தனை விட்டு அருளிப் பொரும் அருள் குகா அருணைப்
பதி உற்று அருள் பெருமாளே.
... அடியோடு அற்றுப் போய்
அரக்கருடைய சேனைகள் அழிந்து விழ திருக்கையில் கொண்டுள்ள
வோலாயுதத்தைச் செலுத்தி அருளி, சண்டை செய்தருளிய குகனே,
திருவண்ணாமலை நகரில் வீற்றிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.309  pg 2.310  pg 2.311  pg 2.312 
 WIKI_urai Song number: 570 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 429 - thiruttu vANiba (thiruvaNNAmalai)

thiruttu vANipa vikrama thuttikaL
     mathaththa rUpikaL thurcchana pottikaL
          sekaththu neelikaL kettapa raththaikaL ...... mikanANAr

silaikku nErpuru vapperu netRika
     Leduppu mArpika Lecchilu thattikaL
          siriththu mAnudar siththamu rukkikaL ...... vizhiyAlE

verutti mElvizhu pappara mattaikaL
     mikuththa pAvikaL vattamu kaththinai
          minukki yOlaikaL piththaLai yiRpaNi ...... mikaneeRAl

viLakki yEkuzhai yittapu rattikaL
     thamakku mAlkodu niRkuma ruttanai
          viduththu nAnoru miththiru poRkazhal ...... paNivEnO

thariththa thOkaNa thakkaNa sekkaNa
     kukukku kUkuku kukkuku kukkuku
          thakuththa theethiku thakkuku thikkuku ...... enathALan

thadakkai thALamu mittiyal maththaLa
     midakkai thALamu mokkana diththoLi
          thariththa kULikaL thaththimi thiththena ...... kaNapUtham

arukka nAroLi yiRprapai yutRidu
     mirathna mAmudi yaikkodu kakkazha
          ladakkai yAdini Naththaiye duththuNa ...... aRavEthAn

arakkar sEnaikaL pattuvi zhaccheRi
     thirukkai vElthanai vittaru Lipporum
          arutku kAvaru Naippathi yutRaruL ...... perumALE.

......... Meaning .........

thiruttu vANipa vikrama thuttikaL mathaththa rUpikaL thurcchana pottikaL sekaththu neelikaL ketta paraththaikaL mika nANAr: These wicked women are very clever in trading. They are arrogant. These whores are evil. They are the most manipulative people on this earth. They are utterly shameless and rotten prostitutes.

silaikku nEr puruvap peru netRikaL eduppu mArpikaL ecchil uthattikaL siriththu mAnudar siththam urukkikaL vizhiyAlE verutti mEl vizhu pappara mattaikaL: Their eye-brows are like the bow on the prominent forehead and their breasts are protruding. Their lips are always moist with saliva. They are capable of melting the hearts of men merely with their smile. These vain dancers intimidate with their eyes, falling all over the men.

mikuththa pAvikaL vatta mukaththinai minukki OlaikaL piththaLaiyil paNi mika neeRAl viLakkiyE kuzhai itta purattikaL: They are the worst sinners. They show off their round faces after polishing their swinging ear-studs made of brass with ash, making them glitter. Their speech is full of contradiction.

thamakku mAl kodu niRkum maruL thanai viduththu thAn orumiththu iru pon kazhal paNivEnO: When shall I give up my delusory passion for such whores and contemplate on Your hallowed feet with concentration?

thariththa thOkaNa thakkaNa sekkaNa kukukku kUkuku kukkuku kukkuku thakuththa theethiku thakkuku thikkuku ena thALam thadak kai thALamum ittu iyal maththaLam idakkai thALamum okka: Keeping beats with large hands to the meter "thariththa thOkaNa thakkaNa sekkaNa kukukku kUkuku kukkuku kukkuku thakuththa theethiku thakkuku thikkuku" and on percussion instruments such as a fitting maththaLam, the drum that is played with the left hand and cymbals, all of them sounding in unison,

nadiththu oLi thariththa kULikaL thaththimi thiththena kaNa pUtham arukkanAr oLiyil prapai utRidum irathna mA mudiyaik ko(N)du ukak kazhal adak kaiyAdi niNaththai eduththu u(N)Na: the bright devils danced in accordance with that sound; a multitude of fiends also danced to the beat of "thaththimi thithth", throwing into the air the crowns (of the demons), that were embedded with gems radiating like the sun's rays, as if those were dice of molucca (kazhaRchi kAy) used in the game and then devoured the flesh;

aRavE thAn arakkar sEnaikaL pattu vizhac cheRi thirukkai vEl thanai vittu aruLip porum aruL kukA aruNaip pathi utRu aruL perumALE.: the entire armies of the demons were annihilated when You wielded the spear from Your hallowed hand and fought in the battlefield, Oh Guha! You are seated in this town, ThiruvaNNAmalai, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 429 thiruttu vANiba - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]