திருப்புகழ் 387 கனை கடல் வயிறு  (திருவருணை)
Thiruppugazh 387 kanaikadalvayiRu  (thiruvaruNai)
Thiruppugazh - 387 kanaikadalvayiRu - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனதன தந்த தானன
     தனதன தனதன தந்த தானன
          தனதன தனதன தந்த தானன ...... தநததான

......... பாடல் .........

கனைகடல் வயிறுகு ழம்பி வாய்விட
     வடதம னியகிரி கம்ப மாய்நட
          கணபண விபரித கந்த காளபு ...... யங்கராஜன்

கயிறென அமரர நந்த கோடியு
     முறைமுறை யமுதுக டைந்த நாளொரு
          கதியற வுலகைவி ழுங்கு மேகவொ ...... ழுங்குபோல

வினைமத கரிகளு மெண்டி சாமுக
     கிரிகளு முறுகிட அண்ட கோளகை
          வெடிபட எவரையும் விஞ்சி வேலிடு ...... நஞ்சுபோல

விடுகுழை யளவும ளந்து காமுக
     ருயிர்பலி கவர்வுறு பஞ்ச பாதக
          விழிவலை மகளிரொ டன்பு கூர்வதொ ...... ழிந்திடாதோ

முனைபெற வளையஅ ணைந்த மோகர
     நிசிசரர் கடகமு றிந்து தூளெழ
          முகிலென வுருவமி ருண்ட தாருக ...... னஞ்சமீன

முழுகிய திமிரத ரங்க சாகர
     முறையிட இமையவர் தங்க ளூர்புக
          முதுகிரி யுருவமு னிந்த சேவக ...... செம்பொன்மேரு

அனையன கனவித சண்ட கோபுர
     அருணையி லுறையும ருந்து ணாமுலை
          அபிநவ வனிதைத ருங்கு மாரநெ ...... ருங்குமால்கொண்

டடவியில் வடிவுக ரந்து போயொரு
     குறமகள் பிறகுதி ரிந்த காமுக
          அரியர பிரமபு ரந்த ராதியர் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

கனை கடல் வயிறு குழம்பி வாய்விட ... ஒலிக்கின்ற பாற்கடலின்
உட்புறம் எல்லாம் கலக்கிக் கொண்டு வெளிப்பட,

வட தமனிய கிரி கம்பமாய் நட ... வடக்கே உள்ள பொன்
மலையாகிய மேருவை மத்தாக நட்டு,

கண பண விபரித கந்தகாள புயங்க ராஜன் கயிறு என ...
விபரீதமான நாற்றமுள்ள விஷத்தைக் கொண்ட நாகராஜனாகிய
வாசுகியை கடையும் கயிறாகக் கொண்டு,

அமரர் அநந்த கோடியு(ம்) முறை முறை அமுது கடைந்த
நாள்
... பல கோடி தேவர்களும் வரிசை வரிசையாக அமுதம் கடைந்த
அந்த நாளில்,

ஒரு கதி அற உலகை விழுங்கும் மேக ஒழுங்கு போல ... உய்யும்
வழி ஒன்றும் இல்லாத வகையில் உலகையே விழுங்க வந்த கரிய
மேகத்தின் வரிசை போல எழுந்து,

வினை மத கரிகளும் எண் திசாமுக கிரிகளும் முறுகிட
அண்ட கோளகை வெடிபட
... செயலாற்றும் மத யானைகளும்,
எட்டுத் திசைகளில் உள்ள மலைகளும் சூடேறி வெந்து போக, அண்ட
உருண்டைகள் யாவும் வெடிபட்டுப் போக,

எவரையும் விஞ்சி வேல் இடு நஞ்சு போல ... யாவரையும்
மேலிட்டு வேல் போலப் பரந்து வரும் ஆலகால விஷம் போல,

விடு குழை அளவும் அளந்து காமுகர் உயிர் பலி கவர் உறு ...
தொங்கும் குண்டலம் உள்ள செவிவரையிலும் பாய்ந்து காமம்
கொண்டவர்களுடைய உயிரைக் கவர்வனவும்,

பஞ்ச பாதக விழி வலை மகளிரொடு அன்பு கூர்வது
ஒழிந்திடாதோ
... ஐந்து பாதகங்களுக்கும்* இடம் தருவனவுமான
கண்கள் என்னும் வலையைக் கொண்ட விலைமாதர்கள் மீது காதல்
மிகுவது என்னை விட்டு விலகாதோ?

முனை பெற வளைய அணைந்த மோகர நிசிசரர் கடகம்
முறிந்து தூள் எழ
... போர் முனையில் இடம் பெற்று வளைவாகச்
சூழ்ந்து போர் ஆரவாரம் செய்யும் அசுரர்களின் சேனை முறிபட்டுப்
பொடியாக,

முகில் என உருவம் இருண்ட தாருகன் அஞ்ச ... மேகம்
போலக் கறுத்த உருவம் கொண்ட தாரகாசுரன் பயப்படும்படி,

மீன(ம்) முழுகிய திமிர தரங்க சாகர(ம்) முறை இட
இமையவர் தங்கள் ஊர் புக
... மீன்கள் வசிக்கின்றதும், அலை
வீசுவதுமான கடல் ஓலம் இட, தேவர்கள் தங்கள் ஊர் போய்ச் சேர,

முது கிரி உருவ முனிந்த சேவக ... பழைய (கிரவுஞ்ச)
மலையில் வேல் ஊடுருவிச் செல்லும்படியாகக் கோபித்த வல்லவனே,

செம்பொன் மேரு அனையன கனவித சண்ட கோபுர ... செம்
பொன் மேருமலைக்குச் சமமான பெருமை கொண்ட வலிய கோபுரங்களை
உடைய

அருணையில் உறையும் அருந்து உணா முலை அபிநவ
வனிதை தரும் குமார
... திருவண்ணாமலையில் வீற்றிருக்கும்,
பிடித்துப் பருகுதல் இல்லாத உண்ணாமுலை அம்மை, புதியவளாகிய
தேவி பார்வதி ஈன்ற குமரனே,

நெருங்கு மால் கொண்டு அடவியில் வடிவு கரந்து போய் ஒரு
குற மகள் பிறகு திரிந்த காமுக
... அளவு கடந்த ஆசை கொண்டு
காட்டில் உனது உண்மை வடிவத்தை மறைத்துச் சென்று, ஒப்பற்ற குறப்
பெண்ணான வள்ளியின் பின்பே திரிந்த காமுகனே,

அரி அரன் பிரம புரந்தர் ஆதியர் தம்பிரானே. ... திருமால்,
ருத்திரன், பிரமன், இந்திரன் ஆகிய தேவர்களுக்குத் தலைவனே.


விலைமாதரின் விழிகளுக்கு ஆலகால விஷத்தை உவமை சொல்லவந்த கவிஞர்,
முதல் ஒன்பது அடிகளில் பாற்கடலைக் கடைந்த வரலாற்றைக் கூறுகிறார்.


* ஐவகை பாதகங்கள்:

கொலை, களவு, சூது, கள்ளுண்ணல், குரு நிந்தை.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.217  pg 2.218  pg 2.219  pg 2.220 
 WIKI_urai Song number: 529 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 387 - kanai kadal vayiRu (thiruvaNNAmalai)

kanaikadal vayiRuku zhampi vAyvida
     vadathama niyakiri kampa mAynada
          kaNapaNa viparitha kantha kALapu ...... yangarAjan

kayiRena amarara nantha kOdiyu
     muRaimuRai yamuthuka daintha nALoru
          kathiyaRa vulakaivi zhungu mEkavo ...... zhungupOla

vinaimatha karikaLu meNdi sAmuka
     kirikaLu muRukida aNda kOLakai
          vedipada evaraiyum vinji vElidu ...... nanjupOla

vidukuzhai yaLavuma Lanthu kAmuka
     ruyirpali kavarvuRu panja pAthaka
          vizhivalai makaLiro danpu kUrvatho ...... zhinthidAthO

munaipeRa vaLaiya aNaintha mOkara
     nisisarar kadakamu Rinthu thULezha
          mukilena vuruvami ruNda thAruka ...... nanjameena

muzhukiya thimiratha ranga sAkara
     muRaiyida imaiyavar thanga LUrpuka
          muthukiri yuruvamu nintha sEvaka ...... semponmEru

anaiyana kanavitha saNda kOpura
     aruNaiyi luRaiyuma runthu NAmulai
          apinava vanithaitha rungku mArane ...... rungumAlkoN

dadaviyil vadivuka ranthu pOyoru
     kuRamakaL piRakuthi rintha kAmuka
          ariyara piramapu rantha rAthiyar ...... thambirAnE.

......... Meaning .........

kanai kadal vayiRu kuzhampi vAyvida: The roaring milky ocean was agitated and its insides were stirred up;

vada thamaniya kiri kampamAy nada: the golden mountain MEru in the north was planted as the central rod;

kaNa paNa viparitha kanthakALa puyanga rAjan kayiRu ena: the cobra king VAsuki, possessing poison with a terrible stench, was used as the churning rope;

amarar anantha kOdiyu(m) muRai muRai amuthu kadaintha nAL: countless millions of celestials took turn, row after row, in churning the ocean in pursuit of nectar; on that day,

oru kathi aRa ulakai vizhungum mEka ozhungu pOla: a huge dark cloud rose as if to swallow the entire world leaving no possible escape route;

vinai matha karikaLum eN thisAmuka kirikaLum muRukida aNda kOLakai vedipada: the active and wild elephants and the mountains in the eight cardinal directions were all roasted in the heat while the planetary globes exploded;

evaraiyum vinji vEl idu nanju pOla: and the terrible AlakAla poison overpowered everyone and spread like a piercing spear.

vidu kuzhai aLavum aLanthu kAmukar uyir pali kavar uRu: The eyes of the whores are like that poison; they stretch right up to the ears where the ear-rings are hanging; they are capable of taking the lives of passionate lovers;

panja pAthaka vizhi valai makaLirodu anpu kUrvathu ozhinthidAthO: they give room for committing the five heinous crimes*; these eyes are the nets spread out by the whores; will the obsession for such whores never leave me?

munai peRa vaLaiya aNaintha mOkara nisisarar kadakam muRinthu thUL ezha: In the battlefront, the armies of the demons, who surrounded in a circular array making a loud noise, were all smashed to pieces;

mukil ena uruvam iruNda thArukan anja: the demon ThArakA, who was dark as the black cloud, was terrified;

meena(m) muzhukiya thimira tharanga sAkara(m) muRai ida imaiyavar thangaL Ur puka: the wavy seas full of fish were agitated, making an imploring noise, and the celestials were able to return to their paradise;

muthu kiri uruva munintha sEvaka: when You showed Your valour, with rage, by powerfully wielding the spear that pierced through the old mount Krouncha, Oh Lord!

sempon mEru anaiyana kanavitha saNda kOpura: There are many sturdy temple-towers that are famous like the Mount MEru of a reddish-golden colour in

aruNaiyil uRaiyum arunthu uNA mulai apinava vanithai tharum kumAra: ThiruvaNNAmalai where the Goddess is seated, bright and fresh, in the name of UNNAmulai Amman (meaning, the Mother whose breasts could never be held by hand for imbibing); You are the son of that DEvi PArvathi!

nerungu mAl koNdu adaviyil vadivu karanthu pOy oru kuRa makaL piRaku thirintha kAmuka: With extreme passion, You roamed in the forest, disguising Your real figure, in pursuit of VaLLi, the matchless damsel of the KuRavAs, Oh Lover!

ari aran pirama puranthar Athiyar thambirAnE.: You are the Lord of VishNu, SivA, BrahmA, IndrA and other celestials, Oh Great One!


In the first nine lines of the song, the Poet describes the churning of the milky ocean from which the evil poison AlakAlam emerged before obtaining the nectar. His purpose was to equate AlakAlam to the eyes of the whores.


* Five heinous sins (crimes) are:

murder, stealing, lying, drunkenness and abuse of the teacher.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 387 kanai kadal vayiRu - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]