திருப்புகழ் 384 அமுதம் ஊறு சொல்  (திருவருணை)
Thiruppugazh 384 amudhamURusol  (thiruvaruNai)
Thiruppugazh - 384 amudhamURusol - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தானன தானன தானன
     தனன தானன தானன தானன
          தனன தானன தானன தானன ...... தனதான

......... பாடல் .........

அமுத மூறுசொ லாகிய தோகையர்
     பொருளு ளாரையெ னாணையு னாணையெ
          னருகு வீடிது தானதில் வாருமெ ...... னுரைகூறும்

அசடு மாதர்கு வாதுசொல் கேடிகள்
     தெருவின் மீதுகு லாவியு லாவிகள்
          அவர்கள் மாயைப டாமல்கெ டாமல்நி ...... னருள்தாராய்

குமரி காளிவ ராகிம கேசுரி
     கவுரி மோடிசு ராரிநி ராபரி
          கொடிய சூலிசு டாரணி யாமளி ...... மகமாயி

குறளு ரூபமு ராரிச கோதரி
     யுலக தாரிஉதாரிப ராபரி
          குருப ராரிவி காரிந மோகரி ...... அபிராமி

சமர நீலிபு ராரித னாயகி
     மலைகு மாரிக பாலிந னாரணி
          சலில மாரிசி வாயம னோகரி ...... பரையோகி

சவுரி வீரிமு நீர்விட போஜனி
     திகிரி மேவுகை யாளிசெ யாளொரு
          சகல வேதமு மாயின தாயுமை ...... யருள்பாலா

திமித மாடுசு ராரிநி சாசரர்
     முடிக டோறுக டாவியி டேயொரு
          சிலப சாசுகு ணாலிநி ணாமுண ...... விடும்வேலா

திருவு லாவுசொ ணேசர ணாமலை
     முகிலு லாவுவி மானந வோநிலை
          சிகர மீதுகு லாவியு லாவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அமுதம் ஊறு சொல் ஆகிய தோகையர் ... அமுதம் ஊறி வருவது
போல் இனிக்கும் சொற்களைக் கொண்ட மயில் போன்ற பெண்கள்

பொருள் உளாரை என் ஆணை உன் ஆணை ... பொருள் உள்ள
செல்வர்களை "என் மேல் ஆணை உன் மேல் ஆணை

என் அருகு வீடு இது தான் அதில் வாரும் என ... என் வீடு
சமீபத்தில் தான் இருக்கிறது, அங்கே வாரும்" என்று

உரை கூறும் அசடு மாதர் குவாது சொல் கேடிகள் ... பேசுகின்ற
மூட விலைமாதர், குதர்க்கம் பேசும் கேடுறுவோர்,

தெருவின் மீது குலாவி உலாவிகள் ... தெருவில் சரசமாக குலவி
உலவுபவர்கள்,

அவர்கள் மாயை படாமல் கெடாமல் நினது அருள் தாராய் ...
அத்தகையோரது மாயை என் மீது தாக்காமலும், நான் கெடாமலும்
இருக்க உனது திருவருளைத் தந்து அருளுக.

குமரி காளி வராகி மகேசுரி ... குமரி, காளி, வராகி, மகேஸ்வரி,

கவுரி மோடி சுராரி நிராபரி ... கெளரி, மோடி, முதலிய பெயர்களை
உடையவள், தேவர்களுக்குக் கண் போன்றவள், பொய்யிலி,

கொடிய சூலி சுடாரணி யாமளி மகமாயி ... உக்ரமான சூலத்தை
ஏந்தியவள், ஒளி மயத்தவள், சியாமளப் பச்சை நிறம் உடையவள், மகமாயி,

குறளு ரூப முராரி சகோதரி ... வாமன உருவம் கொண்ட
திருமாலின் சகோதரி,

உலக தாரி உதாரி பராபரி ... உலகத்தைத் தரித்துப் புரப்பவள்,
தயாள குணம் உடையவள், முதன்மை பூண்டவள்,

குருபராரி விகாரி நமோகரி அபிராமி ... குருவாகிய சிவனுக்குக்
கண் போன்றவள், வேறுபாடுகளைப் பூண்டவள், வணங்கப்படுபவள்,
அழகுள்ளவள்,

சமர நீலி புராரி தன் நாயகி ... போர் வல்ல துர்க்கை, திரிபுரம்
எரித்த சிவபெருமானின் பத்தினி,

மலை குமாரி கபாலி நல் நாரணி ... இமயவன் புதல்வி, கபாலம்
ஏந்தியவள், நல்ல குணம் வாய்ந்த நாராயணி,

சலில மாரி சிவாய மனோகரி பரை யோகி ... நீர் பொழியும்
மேகம் போன்றவள், சிவ சம்பந்தப்பட்டு விரும்பத்தக்கவள்,
பரா சக்தி, யோகி,

சவுரி வீரி முநீர் விட போஜனி ... வலிமை உள்ளவள், வீரம்
உள்ளவள், பாற்கடலில் எழுந்த ஆலஹால விஷத்தை உண்டவள்,

திகிரி மேவு கையாளி செயாள் ... சக்கரம் ஏந்திய திருக்கரத்தை
உடையவள், இலக்குமி,

ஒரு சகல வேதமும் ஆயின தாய் உமை அருள் பாலா ...
ஒப்பற்ற எல்லா வேதமுமாய் நிறைந்த தாய் உமா தேவி (ஆகிய பார்வதி)
ஈன்றருளிய பாலனே,

திமிதம் ஆடு சுராரி நிசாசரர் ... பேரொலி செய்து போராடிய
தேவர்களின் பகைவர்களாகிய அசுரர்களுடைய

முடிகள் தோறும் கடாவி இ(ட்)டு ... தலைகளில் எல்லாம்
ஆயுதங்கள் படும்படி செலுத்தி வைத்து,

ஏய் ஒரு சில பசாசு குணாலி நிணாம் உண விடும் வேலா ...
அங்கு கூடிய சில பேய்கள் குணலை என்ற ஆரவாரத்துடன் கூத்தாடி
மாமிசங்களை உண்ணும்படி வேலைச் செலுத்தியவனே,

திரு உலாவு சொணேசர அ(ண்)ணாமலை ... லக்ஷ்மீகரம்
நிறைந்த சோணாசலேஸ்வரது திருவண்ணாமலையில்

முகில் உலாவு விமான நவோ நிலை ... மேகம் உலவும்
கோபுரத்தின் ஒன்பது நிலைகளைக் கடந்து

சிகர மீது குலாவி உலாவிய பெருமாளே. ... கோபுர உச்சியில்
விளக்கமுற்று உலாவிய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.211  pg 2.212  pg 2.213  pg 2.214 
 WIKI_urai Song number: 526 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

Song 384 - amudham URu sol (thiruvaNNAmalai)

amutha mURuso lAkiya thOkaiyar
     poruLu LAraiye nANaiyu nANaiye
          naruku veedithu thAnathil vArume ...... nuraikURum

asadu mAtharku vAthusol kEdikaL
     theruvin meethuku lAviyu lAvikaL
          avarkaL mAyaipa dAmalke dAmalni ...... naruLthArAy

kumari kALi varAhi mahEsuri
     gavuri mOdi surAri nirApari
          kodiya sUli sudAraNi yAmaLi ...... mahamAyi

kuRaLu rUpa murAri sahOdhari
     ulaga dhAri udhAri parApari
          guruparAri vihAri namOhari ...... abirAmi

samara neeli purAritha nAyaki
     malai kumAri kapAlina nAraNi
          salila mAri sivAya manOhari ...... paraiyOgi

savuri veeri muneer vida bOjani
     thigiri mEvu kaiyALi seyAL oru
          sakala vEdhamum Ayina thAyumai ...... aruLbAlA

thimidham Adu surAri nisAcharar
     mudigaL thORu kadAvi yidE oru
          sila pasAsu guNAli niNAmuNa ...... vidumvElA

thiru ulAvu soNesar aNAmalai
     mugil ulAvu vimAna navOnilai
          sikara meedhu kulAvi ulAviya ...... perumALE.

......... Meaning .........

amutha mURuso lAkiya thOkaiyar: The girls, beautiful like peacock, speak sweet words soaked in nectar.

poruLu LAraiye nANaiyu nANaiyenaruku veedithu thAnathil vArumen: They address rich people saying "My duty is your command; my home is close by; why don't you come in?"

uraikURum asadu mAtharku vAthusol kEdikaL: so speak the stupid call girls; also there are some belligerent troublemakers

theruvin meethuku lAviyu lAvikaL: and some openly flirting whores loafing about in the streets.

avarkaL mAyaipa dAmalke dAmalni naruLthArAy: Please protect me from their deceptive actions and preserve my purity by bestowing Your grace on me.

kumari kALi varAhi mahEsuri: She is in the form of a belle; She is KALi; She is VarAgi; She is the Great Goddess;

gavuri mOdi surAri nirApari: She has names like Gowri and Durga (Modi); She is like the eye of the Celestials; She is bereft of any falsehood;

kodiya sUli sudAraNi yAmaLi mahamAyi: She holds a powerful trident in Her hand; She is in the form of an effulgence; She has the complexion of emerald green; She is the Greatest Delusion;

kuRaLu rUpa murAri sahOdhari: She is the sister of the Lord Vishnu who took the dwarf (VAmana) form;

ulaga dhAri udhAri parApari: She is the mother who conceives the universe and protects it; She is compassionate; She is primordial;

guruparAri vihAri namOhari abirAmi: She is like the eye of the Great Master, Lord SivA; She assumes diverse forms; She is worshipped by all; She is exquisitely beautiful;

samara neeli purAritha nAyaki: She is Goddess Durga, a capable warrior; She is the Consort of Lord SivA who burnt down Thiripuram;

malai kumAri kapAlina nAraNi: She is the daughter of HimavAn; She holds the skull in Her hand; She is the virtuous sister of Narayana known as Narayani;

salila mAri sivAya manOhari paraiyOgi: She is like the showering cloud; She is the most desirable one connected with Lord SivA; She is ParA Sakthi (Supreme Energy); She is a Yogi;

savuri veeri muneer vida bOjani: She is extremely strong; She is valorous; She imbibed the evil poison AlakAlam that emerged from the milky ocean;

thigiri mEvu kaiyALi seyAL: She holds a Disc in Her hand; She is Lakshmi;

oru sakala vEdhamum Ayina thAyumai aruLbAlA: She is the unique combination of all the VEdAs; She is Mother UmAdEvi (PArvathi). You are the son delivered by Her!

thimidham Adu surAri nisAcharar: The demons made a loud noise and fought with the celestials;

mudigaL thORu kadAvi yidE oru: on every head of the demons You struck with a weapon

sila pasAsu guNAli niNAmuNa vidumvElA: and made the devils who gathered at the battlefield holler loudly and feed on the corpses; so powerful was Your spear!

thiru ulAvu soNesar aNAmalai: The streets of ThiruvannAmalai of SoNEsar are rich and prosperous;

mugil ulAvu vimAna navOnilai: beyond the nine decks of the tall Temple tower where clouds hover,

sikara meedhu kulAvi ulAviya perumALE.: You move around elegantly on the crest of that tower, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 384 amudham URu sol - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]