திருப்புகழ் 378 பரியகைப் பாசம்  (திருவருணை)
Thiruppugazh 378 pariyagaippAsam  (thiruvaruNai)
Thiruppugazh - 378 pariyagaippAsam - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனத் தானனத் தனதனத் தானனத்
     தனதனத் தானனத் ...... தனதான

......... பாடல் .........

பரியகைப் பாசம்விட் டெறியுமக் காலனுட்
     பயனுயிர்ப் போயகப் ...... படமோகப்

படியிலுற் றாரெனப் பலர்கள்பற் றாவடற்
     படரெரிக் கூடுவிட் ...... டலைநீரிற்

பிரியுமிப் பாதகப் பிறவியுற் றேமிகப்
     பிணிகளுக் கேயிளைத் ...... துழல்நாயேன்

பிழைபொறுத் தாயெனப் பழுதறுத் தாளெனப்
     பிரியமுற் றோதிடப் ...... பெறுவேனோ

கரியமெய்க் கோலமுற் றரியினற் றாமரைக்
     கமைவபற் றாசையக் ...... கழலோர்முன்

கலைவகுத் தோதிவெற் பதுதொளைத் தோனியற்
     கடவுள்செச் சேவல்கைக் ...... கொடியோனென்

றரியநற் பாடலைத் தெரியுமுற் றோற்கிளைக்
     கருணையிற் கோபுரத் ...... துறைவோனே

அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற்
     றயருமச் சேவகப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பரியகைப் பாசம்விட்டெறியுமக் காலனுள் ... பருத்ததான
கைக்கயிறாகிய பாசக்கயிறை விட்டு வீசும் அந்த யமனிடத்தே

பயனுயிர்ப் போய் அகப்பட மோக ... இந்தப் பயனுள்ள உயிர் போய்
அகப்பட்டுக் கொள்ள ஆசை வைத்து,

படியில் உற்றாரெனப் பலர்கள்பற்றா ... பூமியில் சுற்றத்தார்
எனப்படும் பலரும் என் உடலைப் பற்றிக் கொண்டு

அடற்படர் எரிக் கூடுவிட்டு ... பலமாகப் படர்ந்து எரியும் நெருப்பில்
இந்த உடலைக் கிடத்திவிட்டு,

அலைநீரிற் பிரியும் இப் பாதகப் பிறவியுற்றே ... தாங்கள் அலை
வீசும் நீரில் குளித்துவிட்டுப் பிரிந்து போகும், பாவத்துக்கு இடம்
தருகின்ற இந்தப் பிறவியை அடைந்தே,

மிகப் பிணிகளுக்கே யிளைத்து உழல்நாயேன் ... மிகுந்த
நோய்களால் இளைத்துத் திரிகின்ற நாயினும் கீழான எனது

பிழைபொறுத் தாயெனப் பழுதறுத்து ஆளென ... குற்றங்களைப்
பொறுத்தவனே என்றும், என் பிழைகளைக் களைந்து
ஆண்டருள்வாய் என்றும்,

பிரியமுற்று ஓதிடப் பெறுவேனோ ... அன்பு கொண்டு நான்
உன்னை ஓதிப் புகழும் பாக்கியத்தைப் பெறுவேனோ?

கரியமெய்க் கோலமுற்ற அரியின் ... கரிய உடலின் நிறம்
கொண்ட திருமாலின்

நற்றாமரைக்கு அமைவ பற்றாசை அக் கழலோர்முன் ... நல்ல
தாமரையை ஒத்த கண்ணையே மலராகக் கொள்வதற்கு* ஆசை கொண்ட
அந்தத் திருவடியை உடையவராம் சிவபிரானின் முன்பு

கலைவகுத்து ஓதி ... கலைகளின் சாரமாம் பிரணவப் பொருளை
எடுத்து உபதேசித்தவன்,

வெற் பதுதொளைத்தோன் ... கிரெளஞ்ச மலையைத் தொளை
செய்தவன்,

இயற் கடவுள்செச் சேவல்கைக் கொடியோனென்று ... தகுதி
வாய்ந்த கடவுள், சிவந்த சேவற் கொடியைக் கையிலே கொண்டவன்
என்றெல்லாம்

அரியநற் பாடலைத் தெரியும் உற்றோற்கிளைக்கு ...
அருமையான நல்ல பாடல்களைத் தெரிந்து கூறும் அடியார்களின்
கூட்டத்துக்காக

அருணையிற் கோபுரத்து உறைவோனே ... திருவண்ணாமலையில்
கோபுரத்தில் வீற்றிருப்பவனே,

அடவியிற் றோகைபொற் றடமுலைக்கு ஆசையுற்று ... காட்டில்
வசித்த மயில் போன்ற வள்ளியின் பெரு மார்பைத் தழுவ ஆசை கொண்டு,

அயரும் அச் சேவகப் பெருமாளே. ... தளர்ச்சி அடைந்த அந்தப்
பராக்ரமப் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.197  pg 2.198  pg 2.199  pg 2.200 
 WIKI_urai Song number: 520 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 378 - pariyagaip pAsam (thiruvaNNAmalai)

pariyakaip pAsamvit teRiyumak kAlanut
     payanuyirp pOyakap ...... padamOkap

padiyilut RArenap palarkaLpat RAvadaR
     padarerik kUduvitt...... talaineeriR

piriyumip pAthakap piRaviyut REmikap
     piNikaLuk kEyiLaith ...... thuzhalnAyEn

pizhaipoRuth thAyenap pazhuthaRuth thALenap
     piriyamut ROthidap ...... peRuvEnO

kariyameyk kOlamut Rariyinat RAmaraik
     kamaivapat RAsaiyak ...... kazhalOrmun

kalaivakuth thOthiveR pathuthoLaith thOniyaR
     kadavuLchech cEvalkaik ...... kodiyOnen

RariyanaR pAdalaith theriyumut RORkiLaikku
     aruNaiyiR kOpurath ...... thuRaivOnE

adaviyit ROkaipot Radamulaik kAsaiyut
     Rayarumach cEvakap ...... perumALE.

......... Meaning .........

pariyakaip pAsamvitteRiyumak kAlanuL: Yama, the God of Death, wields a thick rope from his hand (to snatch my life);

payanuyirp pOy akappada mOka: and I willingly fell prey to that Yama and lodged my useful life with him.

padiyil utRArenap palarkaLpatRA: The so-called relatives of mine on this earth caught hold of my body firmly;

adaRpadar erik kUduvittu: and laid it on a funeral pyre burning intensely.

alaineeriR piriyum ip pAthakap piRaviyutRE: Later they all departed after taking a dip in the wavy water. I took such a sinful birth!

mikap piNikaLukkE yiLaiththu uzhalnAyEn: I, the lowly dog, was debilitated with many diseases and roamed about aimlessly.

pizhaipoRuth thAyenap pazhuthaRuththu ALena: Saying "Please forgive my sins and protect by severing me from all defects!"

piriyamutRu Othidap peRuvEnO: will I have the fortune of chanting Your glory with love?

kariyameyk kOlamutRa ariyin: "Vishnu, who has the complexion of dark cloud,

natRAmaraikku amaiva patRAsai ak kazhalOrmun: offered His lotus eye* which was desired by Lord SivA wearing the anklets;

kalaivakuththu Othi: to that SivA, You preached the essence of all arts, namely, the PraNava ManthrA;

veR pathuthoLaiththOn: You pierced (with Your spear) Mount Krouncha;

iyaR kadavuLchech cEvalkaik kodiyOnenRu: and You are the real Almighty holding the staff with the reddish Rooster!" - with these words,

ariyanaR pAdalaith theriyum utRORkiLaikku: Your devotees sing Your glory in rare poems; for them and for the sake of their entire families,

aruNaiyiR kOpuraththu uRaivOnE: You shower Your blessings seated at the temple towers of ThiruvaNNAmalai!

adaviyit ROkaipot Radamulaikku AsaiyutRu ayarum: You lovingly embrace the bosoms of VaLLi, the peacock-like damsel of the jungle, to the point of fatigue!

ach cEvakap perumALE.: You are the most valorous, Oh Great One!


* Once, in Thiriveezhimizhalai, Vishnu worshipped SivA offering daily 1,000 lotus flowers. One day, to test Vishnu's commitment, Sive hid a lotus flower. Vishnu realized that He was short of one flower and offered His own eye, which was lotus-like. SivA was touched by Vishnu's devotion and blessed Him with the ChakrA (which is Sudharsana) - This story is in Vishnu PurANam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 378 pariyagaip pAsam - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]