திருப்புகழ் 369 கருணை சிறிதும்  (திருவருணை)
Thiruppugazh 369 karuNaisiRidhum  (thiruvaruNai)
Thiruppugazh - 369 karuNaisiRidhum - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

கருணை சிறிதுமில் பறிதலை நிசிசரர்
     பிசித அசனம றவரிவர் முதலிய
          கலக விபரித வெகுபர சமயிகள் ...... பலர்கூடிக்

கலக லெனநெறி கெடமுறை முறைமுறை
     கதறி வதறிய குதறிய கலைகொடு
          கருத அரியதை விழிபுனல் வரமொழி ...... குழறாவன்

புருகி யுனதருள் பரவுவகை வரில்விர
     கொழியி லுலகியல் பிணைவிடி லுரைசெய
          லுணர்வு கெடிலுயிர் புணரிரு வினையள ...... றதுபோக

உதறி லெனதெனு மலமறி லறிவினி
     லெளிது பெறலென மறைபறை யறைவதொ
          ருதய மரணமில் பொருளினை யருளுவ ...... தொருநாளே

தருண சததள பரிமள பரிபுர
     சரணி தமனிய தநுதரி திரிபுர
          தகனி கவுரிப வதிபக வதிபயி ...... ரவிசூலி

சடில தரியநு பவையுமை திரிபுரை
     சகல புவனமு முதவிய பதிவ்ருதை
          சமய முதல்வித னயபகி ரதிசுத ...... சதகோடி

அருண ரவியினு மழகிய ப்ரபைவிடு
     கருணை வருணித தனுபர குருபர
          அருணை நகருறை சரவண குரவணி ...... புயவேளே

அடவி சரர்குல மரகத வனிதையு
     மமரர் குமரியு மனவர தமுமரு
          கழகு பெறநிலை பெறவர மருளிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கருணை சிறிதும் இல் பறி தலை நிசிசரர் ... கருணை என்பதே
சிறிதும் இல்லாது, தலை மயிர் பறிப்பவரும், அரக்கர்களுக்கு ஒப்பானவரும்,

பிசித அசன மறவர் இவர் முதலிய ... புலால் உண்ணும் வேடர்களை
ஒத்தவரும் ஆகிய சமணர் முதலிய

கலக விபரித வெகு பர சமயிகள் பலர் கூடி ... வெகுவான பர
சமய வாதிகள் பலரும் கலகங்கள் செய்தும், விபரீத உணர்ச்சியால்
மாறுபட்டும், ஒன்று சேர்ந்து,

கல கல என நெறி கெட முறை முறை முறை கதறி ... ஆரவாரம்
செய்து நீதி முறை கெட்டு, அவரவர் முறை வரும் போதெல்லாம்
பெருங் கூச்சலிட்டுக் கதறி,

வதறிய குதறிய ... வாயாடி, திட்டி, பண்பு தவறிப் பேசுகின்ற ஒன்றை,

கலை கொடு கருத அரியதை ... கலை நூல்களால் கருதவும்
அரிதான மெய்ப் பொருளை,

விழி புனல் வர மொழி குழறா ... கண்களில் நீர் வர, பேச்சுக் குழறி,

அன்பு உருகி உனது அருள் பரவு வகை வரில் ... அன்புடன்
மனம் உருகி உன் திருவருளைப் போற்றும் மன நிலை வந்தால்,

விரகு ஒழியில் உலக இயல் பிணை விடில் ... தந்திர புத்தி
ஒழிந்தால், உலக சம்பந்தமான கட்டுக்கள் விட்டால்,

உரை செயல் உணர்வு கெடில் ... மனம், வாக்கு, காயம் இம் மூன்றின்
தொழிலும் அழிந்தால்,

உயிர் புணர் இருவினை அளறு அது போக உதறில் ... உயிரைச்
சார்ந்து ஆட்டுவிக்கும் இரண்டு வினைகளாகிய சேறு போகும்படி
உதறி விலக்கினால்,

எனது எனும் மலம் அறில் ... எனது என்னும் ஆசையாகிய குற்றம்
அற்றுப் போனால்,

அறிவினில் எளிது பெறல் என மறை பறை அறைவது ...
அறிவில் எளிதாகப் பெறுதல் முடியும் என்று வேதங்கள் பறையறைந்து
சொல்லுவதான அதனை,

ஒரு உதயம் மரணம் இல் பொருளினை அருளுவது ஒரு
நாளே
... ஒப்பற்ற, தோற்றமும் முடிவும் இல்லாத பொருளை
அடியேனுக்கு நீ அருள் செய்யும் ஒரு நாள் கிட்டுமா?

தருண சத தள பரிமள பரிபுர சரணி ... என்றும் இளமையோடு
கூடியதாய், தாமரை போன்றதாய், நறு மணம் வீசுவதாய், சிலம்பு
அணிந்ததாயுள்ள திருவடிகளை உடையவள்,

தமனிய தநு தரி திரி புர தகனி ... பொன் மயமான மேருவை
வில்லாக ஏந்தியவள், திரி புரத்தை எரித்தவள்,

கவுரி பவதி பகவதி பயிரவி சூலி ... கெளரி, பார்வதி, பகவதி,
பயிரவி, சூலத்தைக் கையில் ஏந்தியவள்,

சடில தரி அநுபவை உமை திரி புரை ... சடை தரித்தவள்,
போகங்களை நுகர்பவள், உமா தேவி, திரிபுரை,

சகல புவனமும் உதவிய பதிவ்ருதை ... எல்லா உலகங்களையும்
ஈன்றருளிய பதிவிரதை,

சமய முதல்வி தனய பகிரதி சுத ... எல்லா சமயங்களுக்கும்
தலைவியும் ஆன பார்வதியின் மகனே, பாகீரதியின் (கங்கையின்) மகனே,

சத கோடி அருண ரவியினும் அழகிய ப்ரபைவிடு கருணை ...
நூறு கோடி சிவந்த சூரியர்களை விட அழகான ஒளியை வீசும்
கருணையே,

வருணித தனுபர குருபர ... அலங்கார உருவான உடலை
உடையவனே, குருபரனே,

அருணை நகர் உறை சரவண குரவு அணி புய வேளே ...
திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் சரவணனே, குரா மலரை அணிந்த
புயங்களை உடைய தலைவனே,

அடவி சரர் குல மரகத வனிதையும் ... காட்டில் சஞ்சரிக்கும் வேடர்
குலத்து, பச்சை நிறம் உள்ள பெண்ணான வள்ளியும்,

அமரர் குமரியும் அனவரதமும் அருகு அழகு பெற நிலை
பெற
... தேவர் குமரியான தேவயானையும் எப்போதும் இரு பக்கத்திலும்
அழகு விளங்க நிலை பெற்றிருக்க,

வரம் அருளிய பெருமாளே. ... அவர்களுக்கு வரம் தந்தருளிய
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.175  pg 2.176  pg 2.177  pg 2.178 
 WIKI_urai Song number: 511 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 369 - karuNai siRidhum (thiruvaNNAmalai)

karuNai siridhumil paRithalai nisicharar
     pisidha asana maRavar ivar mudhaliya
          kalaga viparitha vegupara samayigal ...... palar kUdi

galagalena neRikeda muRai muRai muRai
     kadhaRi vadhaRiya kudhaRiya kalaikodu
          karudha ariyadhai vizhipunal varamozhi ...... kuzhaRA an

burugi unadharuL paravuvagai varil vira
     gozhiyil ulagiyal piNai vidil uraiseyal
          uNarvu kedil uyir puNar iruvinai aLa ...... Radhu pOga

udhaRil enadhenum alamaRil aRivinil
     eLidhu peRalena maRai paRai aRaivadhor
          udhaya maraNamil poruLinai aruLuvadhu ...... orunALE

tharuNa sathadhaLa parimaLa paripura
     charaNi dhamaniya dhanudhari thiripura
          dhahani gavuri bavathi bagavathi ...... bayiravi sUli

jatiladhari anubavai umai thiripurai
     sakala buvanamum udhaviya pathivruthai
          samaya mudhalvi thanaiya bagirathi sutha ...... sathakOdi

aruNa raviyinum azhagiya prabai vidu
     karuNai varuNitha dhanupara gurupara
          aruNai nagaruRai saravaNa kuravaNi ...... buyavELE

atavi charar kula marakatha vanithaiyum
     amarar kumariyum anavarathamum arugu
          azhagu peRa nilai peRa varam aruLiya ...... perumALE.

......... Meaning .........

karuNai siridhumil paRithalai nisicharar: Totally lacking compassion, those demon-like folks resort to plucking hairs;

pisidha asana maRavar ivar mudhaliya: those are like hunters devouring meat; people like those ChamaNas,

kalaga viparitha vegupara samayigal palar kUdi: and various other religious zealots, gather together to indulge in rebellious acts, demonstrating extremism and controversy;

galagalena neRikeda muRai muRai muRai kadhaRi: they shout immoral slogans of jargon and become raucous whenever their turn comes for speech;

vadhaRiya kudhaRiya kalaikodu karudha ariyadhai: they argue endlessly, using abusive language about something that cannot be discerned even by classic texts.

vizhipunal varamozhi kuzhaRA anburugi: Shedding tears with stuttering speech and a melting heart,

unadharuL paravugai varil: if I could attain the mental state to praise Your glory,

viragozhiyil ulagiyal piNai vidil: if my deceitful thinking is eradicated, if my attachment to materialistic things of this world is severed,

uraiseyal uNarvu kedil: if my speech, action and thought are all frozen,

uyir puNar iruvinai aLaRadhu poga udhaRil: if I can shake off the sludges of two kinds of deeds that govern my life,

enadhenum alamaRil: If the slag in me of possessiveness is removed,

aRivinil eLidhu peRalena maRai paRai aRaivadhu: then I can easily see the vision in my wisdom as asserted emphatically by the vEdAs;

orudhaya maraNamil poruLinai aruLuvadhu orunALE: will there be a day when You will kindly let me behold that matchless vision which has no beginning or end?

tharuNa sathadhaLa parimaLa paripura charaNi: Her fragrant lotus feet are for ever youthful, adorned by anklets;

dhamaniya dhanudhari thiripura dhahani: She took in Her hand the golden Mount Meru as a bow and burnt down Thiripuram;

gavuri bavathi bagavathi bayiravi sUli: She is Gowri, PArvathi, Bhagavathi, Bhairavi and one holding the trident in Her hand;

jatiladhari anubavai umai thiripurai: She has matted hair; She has experienced all kinds of bliss; She is Goddess UmA; She is ThiripurA!

sakala buvanamum udhaviya pathivruthai: She has created the entire universe; She is devoted to Her Consort;

samaya mudhalvi thanaiya bagirathi sutha: She presides over all religions; and You are the son of that PArvathi! You are also the son of Bhagirathi (River Gangai)!

sathakOdi aruNa raviyinum azhagiya prabai vidu karuNai: You are Compassion personified, dazzling with a brilliant radiance greater than that of millions of red suns!

varuNitha dhanupara gurupara: You have a highly decorated body, Oh Supreme Master!

aruNai nagaruRai saravaNa kuravaNi buyavELE: You are seated in ThiruvaNNAmalai, Oh Saravanabava! Your shoulders are adorned with garlands of KurA flowers, Oh Great Leader!

atavi charar kula marakatha vanithaiyum: VaLLi, the emerald-green complexioned damsel of the hunters in the forest,

amarar kumariyum: and DEvayAnai, the daughter of the celestials,

anavarathamum arugu azhagu peRa nilai peRa varam aruLiya perumALE.: were both blessed by You to remain for ever on either side of You with exquisite beauty, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 369 karuNai siRidhum - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]