திருப்புகழ் 350 வம்பறாச்சில  (காஞ்சீபுரம்)
Thiruppugazh 350 vambaRAchchila  (kAnjeepuram)
Thiruppugazh - 350 vambaRAchchila - kAnjeepuramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்த தாத்தன தன்ன தனந்தன
     தத்தத் தத்தத் ...... தனதானா

......... பாடல் .........

வம்ப றாச்சில கன்ன மிடுஞ்சம
     யத்துக் கத்துத் ...... திரையாளர்

வன்க லாத்திரள் தன்னை யகன்றும
     னத்திற் பற்றற் ...... றருளாலே

தம்ப ராக்கற நின்னை யுணர்ந்துரு
     கிப்பொற் பத்மக் ...... கழல்சேர்வார்

தங்கு ழாத்தினி லென்னையு மன்பொடு
     வைக்கச் சற்றுக் ...... கருதாதோ

வெம்ப ராக்ரம மின்னயில் கொண்டொரு
     வெற்புப் பொட்டுப் ...... படமாசூர்

வென்ற பார்த்திப பன்னிரு திண்புய
     வெட்சிச் சித்ரத் ...... திருமார்பா

கம்ப ராய்ப்பணி மன்னு புயம்பெறு
     கைக்குக் கற்புத் ...... தவறாதே

கம்பை யாற்றினி லன்னை தவம்புரி
     கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வம்பறாச்சில கன்னமிடும் ... வம்பு வார்த்தைகள் நீங்காததும், சில
பழைய நூல்களிலிருந்து சொற்களைத் திருடியும்,

சமயத்துக் கத்துத் திரையாளர் ... சமயவாதம் செய்து அலைகடல்
போல கத்தி ஆரவாரிப்பவரின்

வன்கலாத்திரள் தன்னை யகன்று ... வன்மையான கலைக்
கூட்டத்தினின்று விலகி,

மனத்திற் பற்றற்று அருளாலே ... மனத்தில் உள்ள பற்றுக்கள்
அனைத்தும் அறப்பெற்று,

தம் பராக்கு அற ... தம்மைத் தாமே நோக்கியுள்ள அகம்பாவம்
அற்றுப்போய்,

நின்னை யுணர்ந்துருகி ... உன்னையே உணர்ந்து உள்ளம் உருகி,

பொற் பத்மக் கழல்சேர்வார்தம் ... அழகிய தாமரை மலரன்ன
அடிகளைச் சேர்பவர்களுடைய

குழாத்தினில் என்னையும் அன்பொடு ... கூட்டத்தினில்
அடியேனையும் அன்போடு

வைக்கச் சற்றுக் கருதாதோ ... கூட்டிவைக்க உன் திருவுள்ளத்தில்
சற்று நினைக்கலாகாதோ?

வெம்பராக்ரம மின்னயில் கொண்டு ... வெப்பமான ஆற்றலும்,
ஒளியும் மிக்க வேலாயுதத்தைக் கொண்டு

ஒருவெற்புப் பொட்டுப் பட ... ஒப்பற்ற கிரெளஞ்சமலை
பொடிபடும்படிச் செய்து,

மாசூர் வென்ற பார்த்திப ... மாமரமாய் நின்ற சூரனை வென்ற
அரசே,

பன்னிரு திண்புய ... வலிமை மிக்க பன்னிரண்டு தோள்களை
உடையவனே,

வெட்சிச் சித்ரத் திருமார்பா ... வெட்சிமாலையை அணிந்த
அழகிய திருமார்பனே,

கம்ப ராய்ப்பணி மன்னு புயம்பெறுகைக்கு ... ஏகாம்பரேஸ்வரராய்
விளங்கும் சிவபிரானின் பாம்புகள் நிலைத்துள்ள தோள்களைத் தழுவும்
பொருட்டு,

கற்புத் தவறாதே ... கற்பு நிலை தவறாமல்,

கம்பை யாற்றினில் அன்னை தவம்புரி ... கம்பா நதிக்கரையில்
காமாக்ஷி அம்மை தவம் செய்திருந்த*

கச்சிச் சொக்கப்பெருமாளே. ... கச்சி என்ற காஞ்சீபுரத்தில்
அழகாக வீற்றிருக்கும் பெருமாளே.


* காஞ்சீபுரத்தில் கம்பா நதிக்கரையில் காமாக்ஷி தேவி சிவபிரானின் இடது
பாகத்தைப் பெறுவதற்காக கடுந்தவம் செய்தாள். தேவியின் திறத்தை உலகுக்குத்
தெரிவிக்க எண்ணி சிவனார் கம்பா நதியில் பெரு வெள்ளத்தை ஏற்படுத்தினார்.
லிங்கம் வெள்ளத்தில் கரையுமே எனக்கருதி தேவி லிங்கத்தைத் தழுவ, லிங்கத்தில்
தேவியின் வளைத் தழும்பும், மார்த் தழும்பும் தோன்றின. ஈசன் தேவிக்குத் தன்
இடப்பாகத்தை ஈந்தான் - கச்சி புராணம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.121  pg 2.122  pg 2.123  pg 2.124 
 WIKI_urai Song number: 492 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 350 - vambaRAchchila (kAnjeepuram)

vampa RAcchila kanna midunjchama
     yaththuk kaththuth ...... thiraiyALar

vanka lAththiraL thannai yakanRuma
     naththiR paRRaR ...... RaruLAlE

thampa rAkkaRa ninnai yuNarnthuru
     kippoR pathmak ...... kazhalsErvAr

thangu zhAththini lennaiyu manpodu
     vaikkach chaRRuk ...... karuthAthO

vempa rAkrama minnayil koNdoru
     veRpup pottup ...... padamAchUr

venRa pArththipa panniru thiNpuya
     vetchich chithrath ...... thirumArpA

kampa rAyppaNi mannu puyampeRu
     kaikkuk kaRputh ...... thavaRAthE

kampai yARRini lannai thavampuri
     kachchich chokkap ...... perumALE.

......... Meaning .........

vampa RAcchila kanna midum: These people indulge in loose talk and quote words stolen from archaic books;

chamayaththuk kaththuth thiraiyALar: and on religious issues, they argue loudly like the roaring wavy sea.

vanka lAththiraL thannai yakanRu: I want to get away from the crowd of such rude artists.

manaththiR paRRaRRu: My mind should become totally detached.

aruLAlE thampa rAkkaRa ninnai yuNarnthu: Those who experience You by Your grace after conquering their egoism;

urukippoR pathmak kazhalsErvAr: those who melt in their devotion and prostrate at Your lovely lotus feet;

thangu zhAththini lennaiyu manpodu: it is in their company, from now on, I should kindly be

vaikkach chaRRuk karuthAthO: placed; will You not show me even the slightest consideration for that?

vempa rAkrama minnayil koNdu: With Your spear, possessing extraordinary strength and sparkling like lightning,

oru veRpup pottup pada: the matchless Mount Krouncha was crushed into powder;

mAchUr venRa pArththipa: and the demon, SUran, who took the disguise of a mango tree, was conquered by You, Oh Lord!

panniru thiNpuya: You have twelve strong shoulders!

vetchich chithrath thirumArpA: Your hallowed chest is adorned with the garland of vetchi flowers!

kampa rAyppaNi mannu puyampeRukaikku: In order to embrace the shoulders of EgAmbarEswar (SivA), adorned with serpents,

kaRputh thavaRAthE kampai yARRini lannai thavampuri: She, the Divine Mother (KAmakshi) of great chastity, performed penance on the banks of the River Kampai*

kachchich chokkap perumALE.: in this place, Kachchi (kAnjeepuram), where You reside enchantingly, Oh Great One!


* In KAnchipuram, on the banks of River Kampai, PArvathi, as KAmAkshi, performed intense penance to gain the left part of SivA's body. In order for the world to witness Devi's commitment, SivA inundated the river with an enormous flood which began to wash away the earthen linga worshipped by Devi. To protect the linga, KAmAkshi embraced the linga with all Her might, leaving the marks of Her bangle and bosoms on the linga. Lord SivA thereupon granted the left half of His body to DEvi - KAnchi PurANam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 350 vambaRAchchila - kAnjeepuram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]