திருப்புகழ் 310 கனக தம்பத்தை  (காஞ்சீபுரம்)
Thiruppugazh 310 kanagathampaththai  (kAnjeepuram)
Thiruppugazh - 310 kanagathampaththai - kAnjeepuramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

......... பாடல் .........

கனகதம் பத்தைச் செச்சையை மெச்சுங்
     கடகசங் கத்துப் பொற்புய வெற்பன்
          கடலுள்வஞ் சித்துப் புக்கதொர் கொக்கும் ...... பொடியாகக்

கறுவுசெஞ் சத்திப் பத்மக ரத்தன்
     குமரனென் றர்ச்சித் தப்படி செப்புங்
          கவிமொழிந் தத்தைக் கற்றற வுற்றும் ...... புவியோர்போய்

குனகியுங் கைக்குக் கற்பக மொப்பென்
     றனகனென் றிச்சைப் பட்டத ளிக்குங்
          குமணனென் றொப்பிட் டித்தனை பட்டிங் ...... கிரவான

குருடுகொண் டத்தச் சத்தம னைத்துந்
     திருடியுஞ் சொற்குத் தக்கதொ டுத்துங்
          குலவியுங் கத்தப் பட்டக லக்கந் ...... தெளியாதோ

சனகனன் புற்றுப் பெற்றம டப்பெண்
     தனிப்பெருங் கற்புச் சக்ரந டத்துந்
          தகையிலங் கைச்சுற் றத்தைமு ழுத்துஞ் ...... சுடவேவெஞ்

சமரசண் டக்கொற் றத்தவ ரக்கன்
     கதிர்விடும் பத்துக் கொத்துமு டிக்குந்
          தனியொரம் பைத்தொட் டுச்சுரர் விக்னங் ...... களைவோனும்

தினகரன் சொர்க்கத் துக்கிறை சுக்ரன்
     சசிதரன் திக்குக் கத்தர கத்யன்
          திசைமுகன் செப்பப் பட்டவ சிட்டன் ...... திரள்வேதஞ்

செகதலஞ் சுத்தப் பத்தியர் சித்தம்
     செயலொழிந் தற்றுப் பெற்றவர் மற்றும்
          சிவனும்வந் திக்கக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கனக தம்பத்தைச் செச்சையை மெச்சும் கடக சங்கத்துப் பொன்
புய வெற்பன்
... பொன்னாலாகிய தூண் போன்றவையும், வெட்சி
மாலை அணிந்தவையும், மெச்சும்படியான வீரவாள் முதலிய கூட்டங்களை
அணிந்தவையுமான அழகிய மலை போன்ற புயங்களை உடையவன்,

கடலுள் வஞ்சித்துப் புக்கது ஒர் கொக்கும் பொடியாகக் கறுவு
செம் சத்திப் பத்ம கரத்தன்
... கடலிலே வஞ்சனை எண்ணத்துடன்
புகுந்து நின்ற ஒப்பற்ற மாமரமாகிய சூரன் அழியும்படிக் கோபித்த
சிவந்த சக்தி வேலை ஏந்திய தாமரைக் கரங்களை உடையவன்,

குமரன் என்று அர்ச்சித்து அப்படி செப்பும் கவி மொழிந்து
அத்தைக் கற்று அற உற்றும்
... குமரன் என்று பூஜித்து, அத்தகைய
பாடல்களைச் சொல்லும் கவிகளைப் பாடி, அவற்றை நன்றாகப் படித்து
அப்பாடல்களில் முற்றும் ஈடுபட்டும்,

புவியோர் போய் குனகியும் கைக்குக் கற்பகம் ஒப்பென்று
அனகன் என்று இச்சைப் பட்டது அளிக்கும் குமணன் என்று
ஒப்பிட்டு
... உலகோர் அறியாமையால் (செல்வந்தரிடம்) போய் கொஞ்சிப்
பேசியும், உமது கைக்கு (கேட்டதைத் தரும்) கற்பகத் தரு தான் நிகரானது
என்றும், நீர் யாதொரு பாவமும் இல்லாதவர் என்றும், யாசிப்போர்
விரும்பியதை எல்லாம் கொடுக்கும் குமண* வள்ளலே என்றும்
உவமைகள் கூறி,

இத்தனை பட்டு இங்கு இரவு ஆன குருடு கொண்டு அத்தச்
சத்தம் அனைத்தும் திருடியும் சொற்குத் தக்க தொடுத்தும்
...
இப்படி எல்லாம் வேதனைப்பட்டு இங்கு யாசித்தல் என்கின்ற குருட்டுத்
தன்மையைக் கொண்டு, பொருளும் ஒலியும் பிற எல்லாமும் (பழைய
நூல்களிலிருந்து) திருடியும், தங்கள் சொல்லுக்குத் தகுந்தவாறு
பாடல்களை அமைத்தும்,

குலவியும் கத்தப்பட்ட கலக்கம் தெளியாதோ ... (தங்கள்
பெருமைக்கு) மகிழ்ந்து குலவியும், கத்திக் கூச்சலிடுகின்ற கலக்க அறிவு
தெளிவு அடையாதோ?

சனகன் அன்புற்றுப் பெற்ற மடப் பெண் தனிப் பெரும் கற்புச்
சக்ரம் நடத்தும் தகை இலங்கைச் சுற்றத்தை முழுத்தும்
சுடவே
... ஜனக மன்னன் அன்புடன் பெற்ற அழகிய (சீதையாகிய)
பெண்ணுடைய ஒப்பற்ற பெரிய கற்பு என்னும் சக்கரம் (ஆக்ஞை)
நடைபெற்ற பெருமை வாய்ந்த இலங்கையில் (அரக்கர் குலச்) சுற்றத்தார்
யாவரும் சுடப்பட்டு அழியும்படி,

வெம் சமர சண்டக் கொற்றத்து அவ் அரக்கன் கதிர் விடும்
பத்துக் கொத்து முடிக்கும் தனி ஒர் அம்பைத் தொட்டுச் சுரர்
விக்னம் களைவோனும்
... கொடிய போர் வல்ல, கோபம் கொண்ட,
வீரம் வாய்ந்த அரக்கனாகிய இராவணனுடைய ஒளி வீசும் பத்துக்
கொத்தான முடிகளுக்கும் ஒப்பற்ற ஓர் அம்பைச் செலுத்தி தேவர்களின்
இடர்களை நீக்கிய திருமாலும்,

தினகரன் சொர்க்கத்துக்கு இறை சுக்ரன் சசிதரன் திக்குக்
கத்தர் அகத்(தி)யன் திசை முகன் செப்பப்பட்ட வசிட்டன்
திரள் வேதம்
... சூரியனும், சொர்க்கத்துக்கு இறைவனாகிய
இந்திரனும், சுக்கிரனும், பிறையைச் சூடிய ஈசான்யனும், (எட்டுத்)
திக்கு பாலகர்களும், அகத்திய முனிவரும், பிரமனும், புகழ் பெற்ற
வசிஷ்டரும், கூட்டமான வேதங்களும்,

செகதலம் சுத்தப் பத்தியர் சித்தம் செயல் ஒழிந்து அற்றுப்
பெற்றவர் மற்றும் சிவனும் வந்திக்கக் கச்சியில் நிற்கும்
பெருமாளே.
... லோகத்தினரும், அகத் தூய்மை, புறத் தூய்மை
கொண்ட பக்தர்களும், மனமும் செயலும் ஒடுங்கி ஒழியப் பெற்ற
ஞானிகளும், பின்னும் சிவ பெருமானும் வணங்கி நிற்க
காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.


* தமிழ் வள்ளல்கள் எழுவரில் ஒருவன் குமணன்.
தமிழுக்காக உயிரையே கொடுக்கச் சித்தமானவன்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.11  pg 2.12  pg 2.13  pg 2.14 
 WIKI_urai Song number: 452 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 310 - kanaga thampaththai (kAncheepuram)

kanakatham paththaic checchaiyai mecchum
     kadakasang kaththup poRpuya veRpan
          kadaluLvan jiththup pukkathor kokkum ...... podiyAkak

kaRuvusen jaththip pathmaka raththan
     kumaranen Rarcchith thappadi seppum
          kavimozhin thaththaik katRaRa vutRum ...... puviyOrpOy

kunakiyum kaikkuk kaRpaka moppen
     Ranakanen Ricchaip pattatha Likkum
          kumaNanen Roppit tiththanai patting ...... kiravAna

kurudukoN daththac chaththama naiththum
     thirudiyum soRkuth thakkatho duththum
          kulaviyum kaththap pattaka lakkan ...... theLiyAthO

sanakanan putRup petRama dappeN
     thanipperum kaRpuc chakrana daththun
          thakaiyilan gaicchut Raththaimu zhuththum ...... sudavEvem

samarasaN dakkot Raththava rakkan
     kathirvidum paththuk koththumu dikkun
          thaniyoram paiththot tucchurar vignam ...... kaLaivOnum

thinakaran sorkkath thukkiRai sukran
     sasitharan thikkuk kaththara kathyan
          thisaimukan seppap pattava sittan ...... thiraLvEtham

sekathalam suththap paththiyar siththam
     seyalozhin thatRup petRavar matRum
          sivanumvan thikkak kacchiyil niRkum ...... perumALE.

......... Meaning .........

kanaka thampaththaic checchaiyai mecchum kadaka sangaththup pon puya veRpan: "You have gorgeous mountainous shoulders that look like golden pillars, decorated with vetchi garland and by a bunch of weapons like Your celebrated and triumphant sword;

kadaluL vanjiththup pukkathu or kokkum podiyAkak kaRuvu sem saththip pathma karaththan: You have the lotus-like hand that held the reddish and powerful spear which annihilated with rage the demon SUran hiding in the sea, lurking with a treacherous motive, in the disguise of a unique mango tree;

kumaran enRu arcchiththu appadi seppum kavi mozhinthu aththaik katRu aRa utRum: Oh KumarA!" - so saying, people worship You, singing poems about Your glory, and immerse themselves in those songs with full understanding of their meaning;

puviyOr pOy kunakiyum kaikkuk kaRpakam oppenRu anakan enRu icchaip pattathu aLikkum kumaNan* enRu oppittu: Yet, the same people of this earth, out of sheer ignorance, approach (rich) persons, speaking to them in a flattering manner, comparing their hand to the (wish-yielding) kaRpaga tree and declaring that they are unblemished and that they are like the great philanthropist-king KumaNan* who fulfilled the desires of alm-seekers;

iththanai pattu ingu iravu Ana kurudu koNdu aththac chaththam anaiththum thirudiyum soRkuth thakka thoduththum: going through such miseries in their blind pursuit of begging, they steal words and meters from poems (of old texts) and compose songs to match their words;

kulaviyum kaththappatta kalakkam theLiyAthO: and then they scream in raptures (of self-importance); will such muddled intellect never become clear?

sanakan anputRup petRa madap peN thanip perum kaRpuc chakram nadaththum thakai ilangaic chutRaththai muzhuththum sudavE: As the reign of matchless chastity of SeethA, the beautiful and dear daughter of King Janakan, ruled in the famous kingdom of LankA, the kins of all demons were scorched in fire;

vem samara saNdak kotRaththu av arakkan kathir vidum paththuk koththu mudikkum thani or ampaith thottuc churar vignam kaLaivOnum: as the mighty and angry demon RAvaNan, capable of fierce warfare, was killed with his ten dazzling and crowned heads severed in a bunch by the unique arrow of Lord Rama who removed the miseries of the celestials; that Lord VishNu, along with

thinakaran sorkkaththukku iRai sukran sasitharan thikkuk kaththar akath(thi)yan thisai mukan seppappatta vasittan thiraL vEtham: the Sun, IndrA, the Lord of the celestial land, Sukran, EesAnyan who wears a crescent moon on His hair, the protectors of the (eight) cardinal directions, Sage Agasthiyar, Lord BrahmA, the famous sage Vasishtar, the whole lot of VEdAs,

sekathalam suththap paththiyar siththam seyal ozhinthu atRup petRavar matRum sivanum vanthikkak kacchiyil niRkum perumALE.: the people of this world, the devotees who have purity of mind and body, the realisors of the eternal bliss who have conquered their mind and actions and Lord SivA as well are all assembled to worship You in Kanchipuram which is Your abode, Oh Great One!


* KumaNan is one of the seven philanthropist-kings of Tamil NAdu; he offered his life for the sake of Tamil language.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 310 kanaga thampaththai - kAnjeepuram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]