திருப்புகழ் 290 மலை முலைச்சியர்  (திருத்தணிகை)
Thiruppugazh 290 malaimulaichchiyar  (thiruththaNigai)
Thiruppugazh - 290 malaimulaichchiyar - thiruththaNigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தத்தன தனன தத்தன
     தனன தத்தன ...... தனதான

......... பாடல் .........

மலைமு லைச்சியர் கயல்வி ழிச்சியர்
     மதிமு கத்திய ...... ரழகான

மயில்ந டைச்சியர் குயில்மொ ழிச்சியர்
     மனது ருக்கிக ...... ளணைமீதே

கலைநெ கிழ்த்தியே உறவ ணைத்திடு
     கலவி யிற்றுவள் ...... பிணிதீராக்

கசட னைக்குண அசட னைப்புகல்
     கதியில் வைப்பது ...... மொருநாளே

குலகி ரிக்குல முருவ விட்டமர்
     குலவு சித்திர ...... முனைவேலா

குறவர் பெற்றிடு சிறுமி யைப்புணர்
     குமர சற்குண ...... மயில்வீரா

தலம திற்புக லமர ருற்றிடர்
     தனைய கற்றிய ...... அருளாளா

தருநி ரைத்தெழு பொழில்மி குத்திடு
     தணிம லைக்குயர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மலை முலைச்சியர் கயல் விழிச்சியர் மதி முகத்தியர் அழகான
மயில் நடைச்சியர் குயில் மொழிச்சியர்
... மலை போன்ற
மார்பகங்களை உடையவர், கயல் மீன் போன்ற கண்களை உடையவர்,
சந்திரனைப் போன்ற முகம் உடையவர், அழகுள்ள மயில் போன்ற
நடையை உடையவர், குயில் போன்ற பேச்சுக்களை உடையவர்,

மனது உருக்கிகள் அணை மீதே கலை நெகிழ்த்தியே உறவு
அணைத்திடு கலவியில் துவள் பிணி தீரா
... மனத்தை
உருக்குபவர், படுக்கையின் மீது ஆடையைத் தளர்த்தி உறவுடன்
அணைகின்ற சேர்க்கை இன்பத்தில் வாடுதலுறும்

நோய் நீங்காத கசடனைக் குண அசடனைப் புகல் கதியில்
வைப்பதும் ஒரு நாளே
... குற்றம் உள்ளவனும், குணம் கெட்ட
முட்டாளுமான என்னை, சொல்லப்படுகின்ற நற் கதியில் கூட்டி
வைப்பதுமான ஒரு நாள் உண்டோ?

குல கிரிக் குலம் உருவ விட்டவர் குலவு சித்திர முனை
வேலா
... சிறந்த கிரவுஞ்ச மலைக் கூட்டத்தில் ஊடுருவச் செலுத்திப்
போர் புரிந்த அழகிய கூரிய வேலாயுதனே,

குறவர் பெற்றிடு சிறுமியைப் புணர் குமர சற்குண மயில் வீரா ...
குறவர்கள் பெற்ற சிறுமியாகிய வள்ளியைக் கூடிய குமரனே, உத்தம
குணமுள்ள மயில் வீரனே,

தலம் அதில் புகல் அமரர் உற்ற இடர் தனை அகற்றிய
அருளாளா
... இப் பூமியில் உள்ளவர்களால் போற்றப்படும்
தேவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தைப் போக்கிய அருள் நிறைந்தவனே,

தரு நிரைத்து எழு பொழில் மிகுத்திடு தணி மலைக்கு உயர்
பெருமாளே.
... மரங்கள் வரிசையாக வளர்ந்து ஓங்கும் சோலைகள்
மிகுந்த திருத்தணிகை மலையில் மேம்பட்டு விளங்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.729  pg 1.730 
 WIKI_urai Song number: 302 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 290 - malai mulaichchiyar (thiruththaNigai)

malaimu laicchiyar kayalvi zhicchiyar
     mathimu kaththiya ...... razhakAna

mayilna daicchiyar kuyilmo zhicchiyar
     manathu rukkika ...... LaNaimeethE

kalaine kizhththiyE uRava Naiththidu
     kalavi yitRuvaL ...... piNitheerAk

kasada naikkuNa asada naippukal
     kathiyil vaippathu ...... morunALE

kulaki rikkula muruva vittamar
     kulavu siththira ...... munaivElA

kuRavar petRidu siRumi yaippuNar
     kumara saRkuNa ...... mayilveerA

thalama thiRpuka lamara rutRidar
     thanaiya katRiya ...... aruLALA

tharuni raiththezhu pozhilmi kuththidu
     thaNima laikkuyar ...... perumALE.

......... Meaning .........

malai mulaicchiyar kayal vizhicchiyar mathi mukaththiyar azhakAna mayil nadaicchiyar kuyil mozhicchiyar: These whores have mountain-like bosom; their eyes are like the kayal fish; their face looks like the moon; their gait is like that of the beautiful peacock; their speech is like the cuckoo's;

manathu urukkikaL aNai meethE kalai nekizhththiyE uRavu aNaiththidu kalaviyil: they simply melt the hearts (of their suitors); on the bed, they loosen their clothes and hug pleasurably;

thuvaL piNi theerA kasadanaik kuNa asadanaip pukal kathiyil vaippathum oru nALE: I am such a debased chap suffering from the disease of reeling under the influence of that carnal pleasure; I am an immoral fool; will there be a day when You will direct me to the famous and righteous path?

kula kirik kulam uruva vittavar kulavu siththira munai vElA: You wielded Your beautiful and sharp spear piercing through the range of great mountains headed by Krouncha, Oh Lord!

kuRavar petRidu siRumiyaip puNar kumara saRkuNa mayil veerA: You united with VaLLi, the little daughter of the KuRavAs, Oh KumarA! You are full of virtues, Oh valorous Lord mounting the peacock!

thalam athil pukal amarar utRa idar thanai akatRiya aruLALA: You are the most compassionate Lord who removed the miseries suffered by the celestials praised by the people of the world.

tharu niraiththu ezhu pozhil mikuththidu thaNi malaikku uyar perumALE.: You are seated with relish in Mount ThiruththaNigai which is filled with many groves consisting of rows and rows of tall trees, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 290 malai mulaichchiyar - thiruththaNigai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]