திருப்புகழ் 282 புருவ நெறித்து  (திருத்தணிகை)
Thiruppugazh 282 puruvaneRiththu  (thiruththaNigai)
Thiruppugazh - 282 puruvaneRiththu - thiruththaNigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தத்தத் தனதன தத்தத்
     தனதன தத்தத் ...... தனதான

......... பாடல் .........

புருவநெ றித்துக் குறுவெயர் வுற்றுப்
     புளகித வட்டத் ...... தனமானார்

பொருவிழி யிற்பட் டவரொடு கட்டிப்
     புரளும சட்டுப் ...... புலையேனைக்

கருவிழி யுற்றுக் குருமொழி யற்றுக்
     கதிதனை விட்டிட் ...... டிடுதீயக்

கயவனை வெற்றிப் புகழ்திகழ் பத்மக்
     கழல்கள்து திக்கக் ...... கருதாதோ

செருவசு ரப்பொய்க் குலமது கெட்டுத்
     திரைகட லுட்கப் ...... பொரும்வேலா

தினைவன முற்றுக் குறவர் மடப்பைக்
     கொடிதன வெற்பைப் ...... புணர்மார்பா

பெருகிய நித்தச் சிறுபறை கொட்டிப்
     பெரிகைமு ழக்கப் ...... புவிமீதே

ப்ரபலமுள் சுத்தத் தணிமலை யுற்றுப்
     ப்ரியமிகு சொக்கப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

புருவம் நெறித்துக் குறு வெயர்வு உற்றுப் புளகித வட்டத் தன
மானார்
... புருவத்தை நெறித்து, சிறு வியர்வை உற்று, புளகிதம் கொண்ட
வட்ட வடிவமான மார்பகத்தை உடைய (பொது) மாதர்களின்

பொரு விழியில் பட்டவரொடு கட்டிப் புரளும் அசட்டுப்
புலையேனை
... பூசலிடும் கண்களில் அகப்பட்டு அவர்களுடன்
(படுக்கையில்) கட்டிப் புரளுகின்ற அசடனாகிய இழிந்த எனக்கு,

கரு வழி உற்றுக் குரு மொழி அற்றுக் கதி தனை விட்டிட்டிடு
தீயக் கயவனை வெற்றிப் புகழ் திகழ் பத்மக் கழல்கள்
துதிக்கக் கருதாதோ
... கருவில் விழும் வழியிலே பொருந்தி, குருவின்
வார்த்தைகளைக் கைவிட்டு, நற்கதி அடைதலை விட்டு விலகி, கொடிய
கீழ் மகனான எனக்கு, (உனது) வெற்றியும், புகழும் விளங்குகின்ற
திருவடித் தாமரைகளைத் துதிக்கும் எண்ணம் தோன்றக் கூடாதோ?

செரு(ம்) அசுரப் பொய்க் குலம் அது கெட்டுத் திரை கடல்
உட்கப் பொரும் வேலா
... போர் செய்யும் அசுரர்களுடய பொய்யான
வாழ்க்கைக் குலம் அழியவும், அலை வீசும் கடல் அஞ்சவும் சண்டை
செய்த வேலனே,

தினை வனம் உற்றுக் குறவர் மடப் பைங்கொடி தன வெற்பைப்
புணர் மார்பா
... வள்ளி மலையில் இருந்த தினைப் புனத்துக்குச்
சென்று, குறவர் குலத்தில் தோன்றிய பைங்கொடியாகிய வள்ளியின்
மார்பாகிய மலையைத் தழுவிய மார்பனே,

பெருகிய நித்தச் சிறு பறை கொட்டிப் பெரிகை முழக்கப் புவி
மீதே ப்ரபலம் உள் சுத்தத் தணி மலை உற்று ப்ரியம் மிகு
சொக்கப் பெருமாளே.
... பெருகி ஒலிக்கின்ற சிறிய பறை நாள்
தோறும் கொட்டி முழக்க, பேரிகை முழக்க, பூமியில் புகழ் உடைய,
பரிசுத்தமான திருத்தணிகை மலையில் வீற்றிருந்து, (அம்மலையின்)
மீது விருப்பம் கொண்டு, அழகு வாய்ந்த பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.719  pg 1.720 
 WIKI_urai Song number: 297 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 282 - puruva neRiththu (thiruththaNigai)

puruvane Riththuk kuRuveyar vutRup
     puLakitha vattath ...... thanamAnAr

poruvizhi yiRpat tavarodu kattip
     puraLuma sattup ...... pulaiyEnaik

karuvizhi yutRuk kurumozhi yatRuk
     kathithanai vittit ...... tidutheeyak

kayavanai vetRip pukazhthikazh pathmak
     kazhalkaLthu thikkak ...... karuthAthO

seruvasu rappoyk kulamathu kettuth
     thiraikada lutkap ...... porumvElA

thinaivana mutRuk kuRavar madappaik
     kodithana veRpaip ...... puNarmArpA

perukiya niththac chiRupaRai kottip
     perikaimu zhakkap ...... puvimeethE

prapalamuL suththath thaNimalai yutRup
     priyamiku sokkap ...... perumALE.

......... Meaning .........

puruvam neRiththuk kuRu veyarvu utRup puLakitha vattath thana mAnAr: These whores, bestowed with round bosom, contract their eye-brows, perspire lightly and become exhilarated;

poru vizhiyil pattavarodu kattip puraLum asattup pulaiyEnai: being ensnared in their combative eyes, I roll over (on the bed) hugging them; I am such a base and foolish person;

karu vazhi utRuk kuru mozhi atRuk kathi thanai vittittidu theeyak kayavanai vetRip pukazh thikazh pathmak kazhalkaL thuthikkak karuthAthO: falling in the path of conception again in a womb, forsaking the right advice of the Master and giving up the pursuit of, and deviating from, the road to salvation, I become very wicked and despicable; why can I not think of praying in contemplation of Your hallowed lotus feet that shine with victory and fame?

seru(m) asurap poyk kulam athu kettuth thirai kadal utkap porum vElA: Destroying the dishonest lineage of the demons who waged the war and terrifying the wavy seas, You fought with Your spear, Oh Lord!

thinai vanam utRuk kuRavar madap paingodi thana veRpaip puNar mArpA: You went up to the field of millet in Mount VaLLimalai in search of VaLLi, the green-creeper-like damsel of the KuRavAs and hugged her mountain-like bosom with Your broad chest, Oh Lord!

perukiya niththac chiRu paRai kottip perikai muzhakkap puvi meethE prapalam uL suththath thaNi malai utRu priyam miku sokkap perumALE.: Everyday little drums are beaten making a loud sound and big drums are banged as You are seated with relish in the unblemished Mount ThiruththaNigai, known famously in this world, Oh Handsome and Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 282 puruva neRiththu - thiruththaNigai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]