திருப்புகழ் 275 தொக்கறாக் குடில்  (திருத்தணிகை)
Thiruppugazh 275 thokkaRAkkudil  (thiruththaNigai)
Thiruppugazh - 275 thokkaRAkkudil - thiruththaNigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்தனாத் தனன தத்தனாத் தனன
     தத்தனாத் தனன ...... தனதான

......... பாடல் .........

தொக்கறாக் குடில சுத்தமேற் றசுக
     துக்கமாற் கடமு ...... மலமாயை

துற்றகாற் பதலை சொற்படாக் குதலை
     துப்பிலாப் பலச ...... மயநூலைக்

கைக் கொளாக் கதறு கைக்கொளாக் கையவ
     லப்புலாற் றசைகு ...... ருதியாலே

கட்டுகூட் டருவ ருப்புவேட் டுழல
     சட்டவாக் கழிவ ...... தொருநாளே

அக்கராப் பொடியின் மெய்க்கிடாக் குரவர்
     அர்ச்சியாத் தொழுமு ...... நிவனாய

அப்பபோர்ப் பனிரு வெற்பபூத் தணியல்
     வெற்பபார்ப் பதிந ...... திகுமாரா

இக்கணோக் குறில்நி ருத்தநோக் குறுத
     வத்தினோர்க் குதவு ...... மிளையோனே

எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ
     டெத்தினார்க் கெளிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தொக்கறாக் குடில் அசுத்தமேற்ற ... தோல் நீங்காத குடிசையும்,
அழுக்கைக் கொண்டதும்,

சுக துக்கமாற் கடம் ... சுகம், துக்கம், ஆசை இவற்றைத் தன்னுள்
கொண்ட குடமும்,

முமலமாயை ... மும்மலம் (ஆணவம், கன்மம், மாயை) என்றிவை

துற்றகாற் பதலை ... நெருக்கமாய் வைத்த காற்றடைத்த பானையும்,

சொற்படாக் குதலை துப்பிலாப் பலசமயநூலை ... மிழற்றும்
மழலை போன்று பொருள் விளங்காத வார்த்தைகள் உள்ள பல சமய
நூல்களை

கைக் கொளாக் கதறு கைக்கொள் ஆக்கை ... கைக்கொண்டு
வீண் கூச்சலை மேற்கொண்டதுமான இந்த உடம்பை,

அவலப் புலாற் றசை குருதியாலே ... துன்பத்துக்கு இடமான
மாமிச பிண்டம், சதை, ரத்தம், இவற்றால்

கட்டுகூட்டு அருவருப்பு ... கட்டப்பட்ட கலப்பும் மிக
வெறுக்கத்தக்க பொருளானதுமான இந்த உடம்பை,

வேட்டுழல சட்டவாக்கு அழிவது ஒருநாளே ... விரும்பித்
திரிகிற எனக்கு, அடியோடு வாக்கு அழிந்து போகும் (மெளனநிலை
கூடும்) ஒருநாள் ஏற்படுமோ?

அக்கு அராப் பொடியின் மெய்க்கு இடாக் குரவர் ... எலும்புகள்,
பாம்புகள், திருநீறு, இவற்றைத் தம் உடம்பில் அணிந்துள்ள நம்
தந்தையாம் சிவபிரான்

அர்ச்சியாத் தொழு முநிவனாய அப்ப ... மலர்களால் அர்ச்சித்துத்
தொழுத ஞானியான அப்பனே,

போர்ப் பனிரு வெற்ப ... போருக்கு எப்போதும் ஆயத்தமாய்
உள்ள பன்னிரண்டு மலைகள் போன்ற புயத்தோனே,

பூத் தணியல் வெற்ப ... குவளை மலர் பூக்கின்ற திருத்தணிகை
மலையோனே,

பார்ப்பதி நதி குமாரா ... பார்வதிக்கும் கங்கைக்கும் குமரனே,

இக்கண் நோக்குறில் நிருத்தநோக்குறு ... இந்தப் பூமியில்
பார்வை என்று ஒன்று இருந்தால் அது உன் திருநடனத்தைப்
பார்க்கும் பார்வையே. அந்தப் பார்வையை உடைய

தவத்தினோர்க்கு உதவும் இளையோனே ... தவசீலர்களுக்கு
உதவும் இளையவனே,

எத்திடார்க்கு அரிய முத்த ... உன்னை வணங்காதவர்களுக்கு
அரியவனாகி, பாசங்களிலிருந்து நீங்கியவனே,

பாத்தமிழ்கொடு எத்தினார்க்கு எளிய பெருமாளே. ... தமிழ்ப்
பாக்களால் உன்னைத் துதிப்போர்க்கு எளிமையாய் இருக்கும்
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.633  pg 1.634 
 WIKI_urai Song number: 264 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 275 - thokkaRAk kudil (thiruththaNigai)

thokkaRAk kudila suththamER Rasuka
     thukkamAR kadamu ...... malamAyai

thuRRakAR pathalai soRpadAk kuthalai
     thuppilAp palasa ...... mayanUlaik

kaik koLAk kathaRu kaikkoLAk kaiyava
     lappulAR Rasaiku ...... ruthiyAlE

kattukUt taruva ruppuvEt tuzhala
     sattavAk kazhiva ...... thorunALE

akkarAp podiyin meykkidAk kuravar
     arcciyAth thozhumu ...... nivanAya

appapOrp paniru veRpapUth thaNiyal
     veRpapArp pathina ...... thikumArA

ikkaNOk kuRilni ruththanOk kuRutha
     vaththinOrk kuthavu ...... miLaiyOnE

eththidArk kariya muththa pAth thamizhko
     deththinArk keLiya ...... perumALE.

......... Meaning .........

thokkaRAk kudil asuththamERRa: The body is a cottage with an unpeeled skin. It contains a lot of muck.

suka thukkamAR kadam: It is a vessel holding pleasure, misery and desire.

mumalamAyai thuRRakAR pathalai: It is a pot filled with compressed air and the three slags namely, arrogance, karma and delusion.

soRpadAk kuthalai thuppilAp palasamayanUlai kaik koLA: It accepts the meaningless works of several religions consisting of asinine words of gibberish and

kathaRu kaikkoL Akkai: resorts to excessive shouting and screaming.

avalap pulAR Rasai kuruthiyAlE kattukUttu: It is a mishmash made up of woeful flesh, muscles and blood.

aruvaruppu vEttuzhala: Even though I roam around hankering after such a despicable body,

sattavAkku azhivathu orunALE: will there be a day when my speech totally ceases (and silence prevails)?

akku arAp podiyin meykku idAk kuravar: He is our Father wearing bones, serpents and holy ash on His body;

arcciyAth thozhu munivanAya appa: You are the wise sage-like master worshipped by that SivA with flowers.

pOrp paniru veRpa: You have twelve shoulders like the mountains, always ready for war!

pUth thaNiyal veRpa: Your abode is Mount ThiruththaNigai where blue lilies blossom!

pArppathi nathi kumArA: You are the son of PArvathi and River Ganga!

ikkaN nOkkuRil niruththa nOkku: If there is a singular vision in this world, that is the vision of Your dancing posture;

uRuthavaththinOrkku uthavum iLaiyOnE: that vision is possible only to those who have performed penance, and You are for ever helpful to them, Oh Youthful One!

eththidArkku ariya muththa: You are beyond the reach of those who fail to worship You, Oh detached one from all attachments!

pAththamizhkodu eththinArkku eLiya perumALE.: For those who worship You with Tamil songs, You are very easily accessible, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 275 thokkaRAk kudil - thiruththaNigai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]