திருப்புகழ் 262 குயில் ஒன்று  (திருத்தணிகை)
Thiruppugazh 262 kuyilondRu  (thiruththaNigai)
Thiruppugazh - 262 kuyilondRu - thiruththaNigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனந் தனனத் தனனந் தனனத்
     தனனந் தனனத் ...... தனதான

......... பாடல் .........

குயிலொன் றுமொழிக் குயினின் றலையக்
     கொலையின் பமலர்க் ...... கணையாலே

குளிருந் தவளக் குலசந்த் ரவொளிக்
     கொடிகொங் கையின்முத் ...... தனலாலே

புயல்வந் தெறியக் கடனின் றலறப்
     பொருமங் கையருக் ...... கலராலே

புயமொன் றமிகத் தளர்கின் றதனிப்
     புயம்வந் தணையக் ...... கிடையாதோ

சயிலங் குலையத் தடமுந் தகரச்
     சமனின் றலையப் ...... பொரும்வீரா

தருமங் கைவனக் குறமங் கையர்மெய்த்
     தனமொன் றுமணித் ...... திருமார்பா

பயிலுங் ககனப் பிறைதண் பொழிலிற்
     பணியுந் தணிகைப் ...... பதிவாழ்வே

பரமன் பணியப் பொருளன் றருளிற்
     பகர்செங் கழநிப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

குயில் ஒன்று மொழிக் குயில் நின்று அலைய ... குயில் போன்ற
பேச்சுக்களை உடையவளாகிய இவள் குயிலின் சோக கீதத்தால் செய்வது
அறியாமல் நின்று வேதனையுற்று அலைவதாலும்,

கொலை இன்ப மலர்க் கணையாலே ... கொலையே புரியவல்ல
இன்ப நீலோத்பல மலராகிய (மன்மதனது ஐந்தாவது) பாணத்தாலும்,

குளிரும் தவளக் குல சந்த்ர ஒளிக் கொடி கொங்கையின்
முத்து அனலாலே
... குளிர்ந்துள்ள, வெண்ணிறமான சிறந்த நிலாவின்
ஒளிக் கொடி போன்ற இவளுடைய மார்பின் மீதுள்ள முத்து மாலை
(பொரிபடுமாறு வீசும்) நெருப்பாலும்,

புயல் வந்து எறி அக்கடல் நின்று அலற ... புயல் காற்று வந்து
வீசும் அந்தக் கடல் விடாது நின்று செய்யும் பேரொலியாலும்,

பொரும் மங்கையர் உக்க அலராலே ... கூடி நின்ற பெண்கள்
தூற்றுகின்ற வசை மொழியாலும்,

புயம் ஒன்ற மிகத் தளர்கின்ற தனிப் புயம் வந்து அணையக்
கிடையாதோ
... உனது புயத்தைக் கூட (விரும்பி) மிகவும் தளர்கின்ற,
தனிமையில் இருக்கும் (இவளுக்கு) உன் தோள் வந்து அணைப்பதற்குக்
கிட்டாதோ?

சயிலம் குலையத் தடமும் தகரச் சமன் நின்று அலைய பொரும்
வீரா
... கிரெளஞ்ச மலை அழிய, மற்ற ஏழு கிரிகளும் உடைபட்டு அழிய,
யமன் நின்று (அங்குமிங்கும்) அலையும்படி சண்டை செய்த வீரனே,

தரு மங்கை வனக் குற மங்கையர் மெய்த் தனம் ஒன்றும்
அணித் திரு மார்பா
... (கேட்டதை அளிக்கும்) கற்பக மரங்கள் உள்ள
விண்ணுலகத்தில் வளர்ந்த தேவயானை, வள்ளிமலைக் காட்டிலே வளர்ந்த
குறப் பெண்ணாகிய வள்ளி (ஆகிய இருவரின்) சிறந்த மார்பகங்கள்
பொருந்தும் அழகிய மார்பை உடையவனே,

பயிலும் ககனப் பிறை தண் பொழிலில் பணியும் தணிகைப்
பதி வாழ்வே
... ஆகாயத்தில் பொருந்தும் நிலவானது குளிர்ந்த
சோலைகளின் உயர்ந்த மரங்களுக்குக் கீழாக விளங்கும் திருத்தணியில்
வாழ்கின்ற செல்வமே,

பரமன் பணியப் பொருள் அன்று அருளி பகர் செம் கழநிப்
பெருமாளே.
... சிவபெருமான் வணங்க அன்று அருளுடன் (பிரணவப்
பொருளை) போதித்தவனும், செங்கழுநீர்ப் பூ தினமும் மலரும் தணிகை
மலையில் வீற்றிருப்பவனுமான பெருமாளே.


இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது. குயில், நிலவு,
மன்மதன், மலர் அம்பு, அலைகடல், மாதர்களின் வசை முதலியவை தலைவனின்
பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.683  pg 1.684  pg 1.685  pg 1.686 
 WIKI_urai Song number: 284 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 262 - kuyil ondRu (thiruththaNigai)

kuyilon Rumozhik kuyinin Ralaiyak
     kolaiyin pamalark ...... kaNaiyAlE

kuLirun thavaLak kulacanth ravoLik
     kodikon gaiyinmuth ...... thanalAlE

puyalvan theRiyak kadanin RalaRap
     poruman gaiyaruk ...... kalarAlE

puyamon Ramikath thaLarkin Rathanip
     puyamvan thaNaiyak ...... kidaiyAthO

sayilang kulaiyath thadamun thakara
     samanin Ralaiyap ...... porumveerA

tharuman gaivanak kuRaman gaiyarmeyth
     thanamon RumaNith ...... thirumArbA

payilung kakanap piRaithaN pozhiliR
     paNiyun thaNigaip ...... pathivAzhvE

paraman paNiyap poruLan RaruLiR
     pakarseng kazhanip ...... perumALE.

......... Meaning .........

kuyil ondRu mozhik kuyil ninRu alaiya: She has cuckoo's sweet voice but she is roaming about in agony in the wayside listening to the heartrending cooing of the cuckoo;

kolai inpa malark kaNaiyAlE: because of the menacing (fifth) arrow of flower (blue lily) shot by Manmathan (God of Love) an arrow that could kill,

kuLirum thavaLak kula canthra oLik kodi kongaiyin muththu analAlE: because of the fiery rays of the cool, pale and beautiful moon that scorch the pearl beads of the chain on the bosom of this bright creeper-like girl,

puyal vanthu eRi akkadal ninRu alaRa: because of the stormy wind constantly tossing the waves in the sea making a loud noise,

porum mangaiyar ukka alarAlE: and because of stinging gossip by all the women surrounding her,

puyam onRa mikath thaLarkinRa thanip puyam vanthu aNaiyak kidaiyAthO: she feels very weak and lonely, longing to hug Your shoulders; is she to be denied the pleasure of embracing You?

sayilam kulaiyath thadamum thakara saman ninRu alaiya porum veerA: Oh valorous One, You fought so fiercely that the mount Krouncha was destroyed, the seven hills were shattered and Yaman (God of Death) ran about hither and thither!

tharu mangai vanak kuRa mangaiyar meyth thanam onRum aNith thiru mArpA: DEvayAnai, the damsel of the celestials who grew under the shade of the (wish-yielding) kaRpaga trees, and VaLLi, the damsel of the kuRavAs who lived in the forest of VaLLimalai - both of them hugged Your hallowed chest with their bosom!

payilum kakanap piRai thaN pozhilil paNiyum thaNigaip pathi vAzhvE: The moon in the sky appears below the branches of the tall trees in the cool groves of ThiruththaNigai which is Your abode, Oh my Treasure!

paraman paNiyap poruL anRu aruLi pakar sem kazhanip perumALE.: As He prostrated at Your feet, You graciously preached to Lord SivA the significance of the PraNava ManthrA; and You are the Lord of ThiruththaNigai where red lily blossoms everyday, Oh Great One!


This song is based on the Nayaka-Nayaki Bhavam, where the poet expresses the pang of separation of the heroine from the hero, Murugan.
The cuckoo, the moonlight, waves of the sea, the God of Love Manmathan, His arrows of flowers and the gossip-mongering women are a few of the things that aggravate the agony of separation.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 262 kuyil ondRu - thiruththaNigai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]