திருப்புகழ் 246 உய்யஞானத்து நெறி  (திருத்தணிகை)
Thiruppugazh 246 uyyagnAnaththuneRi  (thiruththaNigai)
Thiruppugazh - 246 uyyagnAnaththuneRi - thiruththaNigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தய்யனா தத்ததன தய்யனா தத்ததன
     தய்யனா தத்ததன ...... தனதான

......... பாடல் .........

உய்யஞா னத்துநெறி கைவிடா தெப்பொழுது
     முள்ளவே தத்துறைகொ ...... டுணர்வோதி

உள்ளமோ கத்திருளை விள்ளமோ கப்பொருளை
     யுள்ளமோ கத்தருளி ...... யுறவாகி

வையமே ழுக்குநிலை செய்யுநீ திப்பழைய
     வல்லமீ துற்பலச ...... யிலமேவும்

வள்ளியா நிற்புதிய வெள்ளில்தோய் முத்தமுறி
     கிள்ளிவீ சுற்றுமலர் ...... பணிவேனோ

பையரா வைப்புனையு மையர்பா கத்தலைவி
     துய்யவே ணிப்பகிர ...... திகுமாரா

பையமால் பற்றிவளர் சையமேல் வைக்குமுது
     நெய்யனே சுற்றியகு ...... றவர்கோவே

செய்யுமால் வெற்புருவ வெய்யவேல் சுற்றிவிடு
     கையமால் வைத்ததிரு ...... மருகோனே

தெய்வயா னைக்கிளைய வெள்ளையா னைத்தலைவ
     தெய்வயா னைக்கினிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

உய்யஞானத்து நெறி கைவிடாது எப்பொழுதும் ... நான்
கடைத்தேறுவதற்கான ஞான மார்க்கத்தை எப்பொழுதும்
கைவிடாமல் பற்றி,

உள்ள வேதத்துறை கொடு உணர்வோதி ... உள்ள வேத
சாஸ்திரங்களைக் கொண்டு அறிவு தெளிவுற ஓதி,

உள்ள மோகத்து இருளை விள்ள மோகப்பொருளை ...
என்னிடம் உள்ள மயக்க இருளை நீக்க, ஆசை வைக்கவேண்டிய
பொருளாகிய மோக்ஷ இன்பத்தை

உள்ள மோகத்து அருளி யுறவாகி ... கருதும் ஆசை உன்
அருளால் கிடைத்து உன்னுடன் உறவு நெருங்க வேண்டும்.

வையம் ஏழுக்குநிலை செய்யுநீதி ... உலகம் ஏழினையும் நிலை
நிறுத்திக் காக்கும் நீதி கொண்டவனே,

பழைய வல்ல மீது உற்பலசயில மேவும் வள்ளியா ...
பழமையான மலையாகிய திருவல்லத்திலும்*, நீலோத்பல கிரியான
திருத்தணிகை மலையிலும் வாழும் வள்ளி நாயகனே,

நிற்புதிய வெள்ளில்தோய் முத்தமுறி ... உன்னைப் புதிய வில்வ
மரத்திலுள்ள இளம் கொழுந்து இலைகளை

கிள்ளிவீசுற்று மலர் பணிவேனோ ... பறித்து வீசி அர்ச்சித்து உன்
பாத மலர்களைப் பணிய மாட்டேனோ?

பை யராவைப் புனையும் ஐயர்பாகத்தலைவி ... படம் உள்ள நாக
ஆபரணத்தை அணிந்த தலைவர் சிவனார், அவரின்
இடப்பாகத்தில் உள்ள தலைவி பார்வதி,

துய்யவேணிப்பகிரதி குமாரா ... தூய ஜடாமுடியில் உள்ள
பாகீரதியாகிய கங்கை - இம்மூவரின் குமாரனே,

பைய மால் பற்றிவளர் சையமேல் வைக்கு முது நெய்யனே ...
மெதுவாக மோகம் பற்றி (வள்ளி மனத்தில்) வளர்ந்த வள்ளிமலைமீது
முதிர்ந்த நேயம் கொண்டவனே,

சுற்றியகுறவர்கோவே ... சூழ்ந்துள்ள குறவர்களுக்குத் தலைவனாக
ஆனவனே,

செய்யுமால் வெற்புருவ ... மயக்கத்தைச் செய்யும் மாயமான கிரெளஞ்ச
மலையை உருவும்படியாக

வெய்யவேல் சுற்றிவிடு கைய ... வெப்பமான வேலைச் சுழற்றி
விடுத்த கரத்தினனே,

மால் வைத்ததிரு மருகோனே ... திருமால் அன்போடு மார்பில்
வைத்த லக்ஷ்மியின் மருமகனே,

தெய்வயானைக்கிளைய ... தெய்வத்தன்மையுடைய யானைமுகன்
விநாயகனுக்குத் தம்பியே,

வெள்ளையானைத்தலைவ ... வெள்ளையானையாகிய
ஐராவதத்துக்குத் தலைவனே,

தெய்வயா னைக்கினிய பெருமாளே. ... தேவயானைத் தேவிக்கு
இனிய பெருமாளே.


* திருவல்லம் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 8 மைலில் நீவா
நதிக்கரையில் உள்ளது. திருத்தணிகையும், வள்ளிமலையும் அருகில் உள்ளன.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.661  pg 1.662  pg 1.663  pg 1.664 
 WIKI_urai Song number: 274 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 246 - uyyagnAnaththu neRi (thiruththaNigai)

uyyanjA naththuneRi kaividA theppozhuthu
     muLLavE thaththuRaiko ...... duNarvOthi

uLLamO kaththiruLai viLLamO kapporuLai
     yuLLamO kaththaruLi ...... yuRavAki

vaiyamE zhukkunilai seyyunee thippazhaiya
     vallamee thuRpalasa ...... yilamEvum

vaLLiyA niRputhiya veLLilthOy muththamuRi
     kiLLivee cuRRumalar ...... paNivEnO

paiyarA vaippunaiyu maiyarpA kaththalaivi
     thuyyavE Nippakira ...... thikumArA

paiyamAl paRRivaLar caiyamEl vaikkumuthu
     neyyanE suRRiyaku ...... RavarkOvE

seyyumAl veRpuruva veyyavEl suRRividu
     kaiyamAl vaiththathiru ...... marukOnE

theyvayA naikkiLaiya veLLaiyA naiththalaiva
     theyvayA naikkiniya ...... perumALE.

......... Meaning .........

uyyanjA naththuneRi kaividA theppozhuthum: I always want to pursue the route to True Knowledge that will make me prosper.

uLLavE thaththuRaikoduNarvOthi: I want to chant the contemporary scriptures to enlighten my intellect.

uLLamO kaththiruLai viLLamO kapporuLai yuLLamO kaththaruLi: To dispel the delusory darkness in my mind, I must seek Your grace for the most desirable and blissful liberation.

uRavAki: My relationship with You must be strengthened.

vaiyamE zhukkunilai seyyuneethi: You protect the seven worlds steadily by Your equitable dispensation of justice!

pazhaiya vallamee thuRpalasayilamEvum vaLLiyA: Oh Consort of VaLLi, You relish being seated at the ancient mount in Thiruvallam* and at Mount ThiruththaNigai, famous for its blue lilies!

niRputhiya veLLilthOy muththamuRi kiLLi veecuRRu: Shall I be able to pluck the tender leaves of fresh Vilwa trees and place them

malar paNivEnO: in obeisance at Your lotus feet?

paiyarA vaippunaiyu maiyar pAkaththalaivi: He (Lord SivA) is the Leader wearing a hooded serpent; She (PArvathi) is seated on the left side of His body;

thuyyavE Nippakirathi kumArA: River Ganga (BhAgeerathi) is held by Him in His immaculate tresses; and You are the son of all the three!

paiyamAl paRRivaLar caiyamEl vaikkumuthu neyyanE: Love blossomed gradually (in VaLLi's mind) in Mount VaLLimalai, and You fell in intense love with that Mount!

suRRiyaku RavarkOvE: You became the leader of all the hunters who surrounded You!

seyyumAl veRpuruva veyyavEl suRRividu kaiya: To pierce the mystical mount Krouncha, You wielded the red-hot spear with a spinning force from Your hand!

mAl vaiththathiru marukOnE: You are the nephew of Lakshmi held dearly by Vishnu in His heart!

theyvayA naikkiLaiya veLLaiyA naiththalaiva: You are the younger brother of the Divine Elephant, VinAyagA; You are the master of the white elephant, AirAavatham;

theyvayA naikkiniya perumALE.: and You are the beloved consort of DEvayAnai, Oh Great One!


* Thiruvallam is 7 miles east of Katpadi Railway Station on the banks of Neeva River. ThiruththaNigai and VaLLimalai are close by.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 246 uyyagnAnaththu neRi - thiruththaNigai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]