திருப்புகழ் 173 பகர்தற்கு அரிதான  (பழநி)
Thiruppugazh 173 pagardhaRkaaridhAna  (pazhani)
Thiruppugazh - 173 pagardhaRkaaridhAna - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனத்தன தான தந்தன தனனத்தன தான தந்தன
     தனனத்தன தான தந்தன ...... தனதான

......... பாடல் .........

பகர்தற்கரி தான செந்தமி ழிசையிற்சில பாட லன்பொடு
     பயிலப்பல காவி யங்களை ......யுணராதே

பவளத்தினை வீழி யின்கனி யதனைப்பொரு வாய் மடந்தையர்
     பசலைத்தன மேபெ றும்படி ...... விரகாலே

சகரக்கடல் சூழு மம்புவி மிசையிப்படி யேதி ரிந்துழல்
     சருகொத்துள மேய யர்ந்துடல் ...... மெலியாமுன்

தகதித்திமி தாகி ணங்கிண எனவுற்றெழு தோகை யம்பரி
     தனிலற்புத மாக வந்தருள் ...... புரிவாயே

நுகர்வித்தக மாகு மென்றுமை மொழியிற்பொழி பாலை யுண்டிடு
     நுவல்மெய்ப்புள பால னென்றிடு ...... மிளையோனே

நுதிவைத்தக ராம லைந்திடு களிறுக்கரு ளேபு ரிந்திட
     நொடியிற்பரி வாக வந்தவன் ...... மருகோனே

அகரப்பொரு ளாதி யொன்றிடு முதலக்கர மான தின்பொருள்
     அரனுக்கினி தாமொ ழிந்திடு ...... குருநாதா

அமரர்க்கிறை யேவ ணங்கிய பழநித்திரு வாவி னன்குடி
     அதனிற்குடி யாயி ருந்தருள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பகர்தற்கு அரிதான செந்தமிழ் இசையில் ... இத்தன்மைத்து என்று
சொல்ல அரியதான செந்தமிழ் இசையில்

சில பாடல் அன்பொடு பயில ... சில பாடல்களை மெய்யன்போடு
கற்றுக்கொள்ள

பல காவியங்களை உணராதே ... பற்பல தமிழ்க் காவியங்களைத்
தெரிந்து கொள்ளாமல்,

பவளத்தினை வீழியின்கனி யதனைப்பொரு ... பவளத்தையும்
வீழிப்பழத்தையும் போன்று

வாய் மடந்தையர் பசலைத்தனமே பெறும் விரகாலே ... சிவந்த
வாயை உடைய பெண்களின் (காமநோயால் ஏற்படும்) நிறமாற்றம்
உண்டாக்கும் விரக வேதனையால்,

சகரக்கடல் சூழும் அம்புவி மிசை ... சகர மைந்தர்களால்
தோண்டப்பட்ட கடலால் சூழப்பட்ட அழகிய பூமியிலே

இப்படியே திரிந்து ... இவ்வண்ணமாகவே மோகவசப்பட்டு
அலைந்து திரிந்து,

உழல் சருகொத்து உளமே அயர்ந்து ... சுழற்காற்றில் அகப்பட்ட
சருகுபோல் மனம் மிகவும் சோர்ந்து,

உடல் மெலியாமுன் ... எனது உடல் மெலிந்து அழிவதற்கு
முன்னாலே,

தகதித்திமி தாகி ணங்கிண என ... 'தகதித்திமி தாகி ணங்கிண'
என்ற தாளத்திற்கு ஏற்ப

உற்றெழு தோகை யம்பரிதனில் ... நடனமிட்டு எழுகின்ற
தோகையுடைய அழகிய குதிரை போன்ற மயில்மீது

அற்புத மாக வந்தருள் புரிவாயே ... அற்புதமாக வந்து திருவருள்
புரிவாயாக.

நுகர்வித்தகமாகும் என்று ... இந்த ஞானப்பாலை அருந்து, இதுதான்
பேறறிவு தரும் என்று

உமை மொழியிற் பொழி பாலை யுண்டிடு ... உமாதேவி சொல்லி
அருளி சுரந்து ஈந்த ஞானப் பாலினை அருந்திய

நுவல்மெய்ப்புள பாலன் ... வேதங்களெல்லாம் போற்றுகின்ற
புகழையுடைய திருக்குமாரன்*

என்றிடும் இளையோனே ... இவன்தான் என ஏத்தும் இளைய
குமாரனே,

நுதிவைத்த கரா மலைந்திடு ... நுனிப்பல் கூர்மையான முதலை
வலியப் போராடிய

களிறுக்கு அருளே புரிந்திட ... கஜேந்திரன் என்ற யானைக்குத்
திருவருள் செய்து காத்திட

நொடியிற் பரிவாக வந்தவன் மருகோனே ... ஒரு நொடியில்
கருணையோடு வந்த திருமாலின் மருமகனே,

அகரப்பொருள் ஆதி யொன்றிடு ... அகரம், உகரம், மகரம் ஆகிய
எழுத்துக்கள் அடங்கியதும்,

முதல் அக்கரமானதின் பொருள் ... எல்லா மந்திரங்களுக்கும்
முதல் அக்ஷரமாக இருப்பதுமான ஓம் என்னும் பிரணவ
மந்திரத்தின் தத்துவத்தை

அரனுக்கு இனிதா மொழிந்திடு குருநாதா ... சிவபெருமானுக்கு
இனிமையாக உபதேசித்த குருநாதனே,

அமரர்க்கு இறையே வணங்கிய ... தேவர்களுக்குத் தலைவனாகிய
இந்திரன் வழிபட்டுப் போற்றிய

பழநித் திருவாவினன்குடி அதனில் ... பழநி மலைக்கடியில் உள்ள
திருவாவினன்குடித் தலத்தில்

குடியாய் இருந்தருள் பெருமாளே. ... நீங்காது வாசம் செய்து
அடியார்களுக்கு அருளும் பெருமாளே.


* உமாதேவியின் ஞானப்பாலாகிய சிவஞானத் திரு அமுதை
உண்டதால் முருகனை ஞான பண்டிதன் என்பர்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.276  pg 1.277  pg 1.278  pg 1.279 
 WIKI_urai Song number: 109 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 173 - pagardhaRka aridhAna (pazhani)

pagardhaRkari dhAna senthamizh isaiyiRchila pAdal anbodu
     payilappala kAvi yangaLai ...... uNarAdhE

pavaLaththinai veezhi inkani adhanaipporu vAyma dandhaiyar
     pasalaiththana mEpe Rumpadi ...... viragAlE

sagarakkadal sUzhum ambuvi misaiyippadi yEthi rindhuzhal
     sarugoththuLa mEa yarndhudal ...... meliyAmun

thagathiththimi dhAgi NangiNa enavutrezhu thOgai ampari
     thanilaRbutha mAga vandharuL ...... purivAyE

nugarviththaga mAgum endrumai mozhiyiRpozhi pAlai uNdidu
     nuvalmeyppuLa bAlan endridum ...... iLaiyOnE

nudhivaiththaka rAma laindhidu kaLirukaru LEpu rindhida
     nodiyiRpari vAga vandhavan ...... marugOnE

agarapporu LAdhi ondridu mudhalakkara mAna dhinporuL
     aranukkini dhAmo zhindhidu ...... gurunAthA

amararkkiRai yEva Nangiya pazhaniththiru Avi nankudi
     adhaniR udi yAyi rundharuL ...... perumALE.

......... Meaning .........

pagardhaRkari dhAna senthamizh isaiyiR sila pAdal anbodu payila: In order that I could ardently learn to sing a few songs in Tamil whose beauty is beyond description,

pala kAviyangaLai uNarAdhE: I never bothered to study several epics in that language.

pavaLaththinai veezhi inkani adhanaipporu vAy madandhaiyar: Instead, I thought only about the beautiful mouths of maidens, red like coral and the veezhi fruit;

pasalaith thanamE peRumpadi viragAlE: and my lust for them caused my skin to change its colour!

sagarak kadal sUzhum ambuvi misai: In this beautiful world surrounded by oceans dug out by Sagara's sons,

ippadiyE thirindhuzhal sarugothth: I do not want to roam about like this as a dry leaf caught in a cyclone.

uLamE ayarndhudal meliyAmun: Before I lose heart and go down in my health,

thaga thiththimi dhAgi NangiNa ena: dancing in accordance with the meter "thaga thiththimi dhAgi NangiNa",

utrezhu thOgai ampari thanil: mounted on the lovely horse-like peacock with soaring plumes,

aRbuthamAga vandharuL purivAyE: You must come before me wonderfully and bestow grace on me!

nugar viththaga mAgum endrumai: UmAdEvi told You "Drink this Milk of Wisdom; this will give You Great Knowledge";

mozhiyiR pozhi pAlai uNdidu: with those words She gave You Her milk and You became GnAna Pandithan (Wizard of Knowledge); and

nuval meyppuLa bAlan endridum iLaiyOnE: all scriptures praise You as Her Great Son, Oh Young One!

nudhi vaiththa karA malaindhidu: When the crocodile with sharp teeth attacked

kaLiruk aruLE purindhida nodiyiR parivAga vandhavan marugOnE: the elephant, GajEndran, Lord Vishnu came down instantly to save the elephant; and You are His nephew!

agarap poruLAdhi ondridu: The three letters a, u and m combine to form this PraNava ManthrA,

mudhal akkaramAnadhin poruL: and it is the foremost syllable of any ManthrA, which is OM, and its significance

aranuk inidhA mozhindhidu gurunAthA: was preached sweetly to Lord SivA, by You, Oh Master!

amararkkiRaiyE vaNangiya: IndrA, the Lord of all DEvAs, worshipped this place which is

pazhanith thiru Avinankudi: ThiruvAvinankudi, at the foothills of Mount Pazhani;

adhaniR kudiyAy irundharuL perumALE.: and You have taken up Your residence over there to shower grace on Your devotees, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 173 pagardhaRka aridhAna - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]