திருப்புகழ் 146 குருதி மலசலம்  (பழநி)
Thiruppugazh 146 kurudhimalasalam  (pazhani)
Thiruppugazh - 146 kurudhimalasalam - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனதன தனன தனதன
     தனன தனதன தனன தனதன
          தனன தனதன தனன தனதன ...... தனதான

......... பாடல் .........

குருதி மலசல மொழுகு நரகுட
     லரிய புழுவது நெளியு முடல்மத
          குருபி நிணசதை விளையு முளைசளி ...... யுடலூடே

குடிக ளெனபல குடிகை வலிகொடு
     குமர வலிதலை வயிறு வலியென
          கொடுமை யெனபிணி கலக மிடுமிதை ...... யடல்பேணி

மருவி மதனனுள் கரிய புளகித
     மணிய சலபல கவடி மலர்புனை
          மதன கலைகொடு குவடு மலைதனில் ...... மயலாகா

மனது துயரற வினைகள் சிதறிட
     மதன பிணியொடு கலைகள் சிதறிட
          மனது பதமுற வெனது தலைபத ...... மருள்வாயே

நிருதர் பொடிபட அமரர் பதிபெற
     நிசித அரவளை முடிகள் சிதறிட
          நெறிய கிரிகட லெரிய வுருவிய ...... கதிர்வேலா

நிறைய மலர்பொழி யமரர் முநிவரும்
     நிருப குருபர குமர சரணென
          நெடிய முகிலுடல் கிழிய வருபரி ...... மயிலோனே

பருதி மதிகனல் விழிய சிவனிட
     மருவு மொருமலை யரையர் திருமகள்
          படிவ முகிலென அரியி னிளையவ ...... ளருள்பாலா

பரம கணபதி யயலின் மதகரி
     வடிவு கொடுவர விரவு குறமக
          ளபய மெனவணை பழநி மருவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

குருதி மலசல மொழுகு நரகுடல் ... ரத்தம், மலம், நீர், இவை
ஒழுகுகின்ற மனிதக் குடலையும்,

அரிய புழுவது நெளியு முடல் ... சிறிய புழுக்கள் நெளியக்கூடிய
உடலையும் கொண்டு,

மத குருபி ... மதம் கொண்ட விகார வடிவம் கொண்டவனாய்,

நிணசதை விளையும் உளைசளி யுடலூடே ... கொழுப்பு, சதை,
ஊறி எழும் சேறு போன்ற சளி இவை உடலினுள்ளே

குடிகளெனபல குடிகை ... குடியிருப்பவர்கள் போல உரிமையுடன்
பலவும் குடிகொண்டு,

வலி கொடுகுமர வலிதலை வயிறு வலியென ... வலியதான
கண்ட வலி (ஒருவகை வலிப்பு நோய்), தலைவலி, வயிற்றுவலி என்று

கொடுமை யெனபிணி கலக மிடுமிதை ... கொடுமையான
நோய்கள் செய்யும் வேதனை மிகுந்த இந்த உடலை,

அடல்பேணி மருவி மதனனுள் கரிய ... மிகவும் விரும்பிய யான்,
மாதருடன் கலந்து, பொறாமையால் மன்மதனின் உள்ளமும் கரிந்து
போகும்படியாக,

புளகித மணி அசல பல கவடி மலர்புனை ... புளகாங்கிதமும்,
மணிகளும் பூண்ட, மலை போன்ற, பல நகைகளை அணிந்த,
மலர்களைப் புனைந்த,

மதன கலைகொடு குவடு மலைதனில் மயலாகா ... மதன
நூல்களில் கூறியபடி, பெருமலையன்ன மார்பகங்களில் மயக்கம்
கொள்ளாமல்,

மனது துயரற வினைகள் சிதறிட ... மனத்தின் துன்பங்கள்
ஒழியவும், வினைகள் சிதறிப் போகவும்,

மதன பிணியொடு கலைகள் சிதறிட ... காமநோயும் காம
சாஸ்திரமும் விலகி நீங்கவும்,

மனது பதமுற வெனது தலைபதம் அருள்வாயே ... என் மனம்
பக்குவப்படவும், எனது தலையில் உனது திருவடிகளைச் சூட்டி
அருள்வாயாக.

நிருதர் பொடிபட அமரர் பதிபெற ... அசுரர்கள் அழிந்து
பொடியாகுமாறும், தேவர்கள் தங்கள் அமராவதிப் பதியைப் பெறுமாறும்,

நிசித அரவளை முடிகள் சிதறிட ... கூர்மையான நாகாஸ்திரம்,
சக்ராயுதம் என்ற பாணங்களின் நுனிகள் சிதறுமாறும்,

நெறிய கிரிகட லெரிய ... மலைகள் நெறிந்து பொடிபடவும்,
கடல்கள் தீப்பற்றி எரியவும்,

உருவிய கதிர்வேலா ... செலுத்திய ஒளிமிகுந்த வேலாயுதத்தை
உடையவனே,

நிறைய மலர்பொழி யமரர் முநிவரும் ... நிரம்பவும் மலர்களைப்
பொழிந்து தேவர்களும் முநிவர்களும்,

நிருப குருபர குமர சரணென ... அரசனே, குருநாதனே, குமரனே,
சரணம் என்று பணிய,

நெடிய முகிலுடல் கிழிய வருபரி மயிலோனே ... பெரிய
மேகத்தின் உடலைக் கிழித்துக் கொண்டு ஊடுருவி வருகின்ற
மயிலை வாகனமாகக் கொண்டவனே,

பருதி மதிகனல் விழிய சிவனிடம் மருவும் ... சூரியன், சந்திரன்,
அக்கினி இவற்றை விழியாகக் கொண்ட சிவபிரானின் இடப்பக்கத்தில்
இருப்பவளும்,

ஒருமலை யரையர் திருமகள் ... ஒப்பற்ற மலையரசனான
ஹிமவானின் திருமகளாக வந்தவளும்,

படிவ முகிலென அரியினிளையவள் அருள்பாலா ... தன்
வடிவம் மேகம்போல் கருத்த திருமாலின் தங்கையானவளுமான
பார்வதி தேவி அருளிய குழந்தையே,

பரம கணபதி யயலின் மதகரி வடிவு கொடுவர ... பரம்
பொருளாகிய கணபதி அருகில் மதயானை உருவம் எடுத்து வர,

விரவு குறமகள் அபய மெனஅணை ... உடனிருந்த குறமகள்
வள்ளி அபயம் என அடைக்கலம் புகுந்து தழுவ,

பழநி மருவிய பெருமாளே. ... பழநியில் வசிக்கின்ற பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.424  pg 1.425  pg 1.426  pg 1.427 
 WIKI_urai Song number: 176 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 146 - kurudhi malasalam (pazhani)

kuruthi malasala mozhuku narakuda
     lariya puzhuvathu neLiyu mudalmatha
          kurupi niNasathai viLaiyu muLaisaLi ...... yudalUdE

kudika Lenapala kudikai valikodu
     kumara valithalai vayiRu valiyena
          kodumai yenapiNi kalaka midumithai ...... yadalpENi

maruvi mathananuL kariya puLakitha
     maNiya salapala kavadi malarpunai
          mathana kalaikodu kuvadu malaithanil ...... mayalAkA

manathu thuyaraRa vinaikaL sithaRida
     mathana piNiyodu kalaikaL sithaRida
          manathu pathamuRa venathu thalaipatha ...... maruLvAyE

niruthar podipada amarar pathipeRa
     nisitha aravaLai mudikaL sithaRida
          neRiya kirikada leriya vuruviya ...... kathirvElA

niRaiya malarpozhi yamarar munivarum
     nirupa gurupara kumara saraNena
          nediya mukiludal kizhiya varupari ...... mayilOnE

paruthi mathikanal vizhiya sivanida
     maruvu morumalai yaraiyar thirumakaL
          padiva mukilena ariyi niLaiyava ...... LaruLbAlA

parama kaNapathi yayalin mathakari
     vadivu koduvara viravu kuRamaka
          Lapaya menavaNai pazhani maruviya ...... perumALE.

......... Meaning .........

kuruthi malasala mozhuku narakudal: The human intestines, filled up with blood, faeces and urine,

ariya puzhuvathu neLiyu mudal: with little worms swarming about, constitute this body.

matha kurupi: It is filled with rage and its shape is ugly.

niNasathai viLaiyum uLaisaLi yudalUdE: Fat, flesh, and gushing mucus occupy this body

kudikaLenapala kudikai: as if they are its permanent tenants.

vali kodukumara valithalai vayiRu valiyena: Various aches and pains such as throat ache, head ache and stomach ache

kodumai yenapiNi kalaka midumithai: afflict this body severely, causing considerable agony.

adalpENi maruvi mathananuL kariya: I nourish this body strongly and cohabit with women to the point that even the God of Love, Manmathan, burns with jealousy.

puLakitha maNi asala pala kavadi malarpunai: Wearing gems with exhilaration, a variety of jewels and flowers, these mountain-like breasts

mathana kalaikodu kuvadu malaithanil mayalAkA: are huge and beautiful as defined in erotic books. Lest I indulge in those crests in carnal delusion,

manathu thuyaraRa vinaikaL sithaRida: and for my mind to rid itself of the misery, for my deeds (good and bad) to be shattered,

mathana piNiyodu kalaikaL sithaRida: for my passionate fever and the erotic skills to be destroyed,

manathu pathamuRa venathu thalaipatham aruLvAyE: and in order that my mind matures perfectly, kindly place Your feet on my head and bless me!

niruthar podipada amarar pathipeRa: To crush the demons into powder, to restore their land to DEvAs,

nisitha aravaLai mudikaL sithaRida: to smash the heads of weapons like nAgAsthra (the serpent-powered weapon) and chakrAyutha (the disc),

neRiya kirikada leriya vuruviya kathirvElA: to shatter the Mount (Krouncha) and to burn the seas, You wielded Your luminous spear!

niRaiya malarpozhi yamarar munivarum: The celestials and sages worship You with plenty of flowers, saying

nirupa gurupara kumara saraNena: "Oh Your Majesty, Supreme Master and KumarA, we surrender to You"

nediya mukiludal kizhiya varupari mayilOnE: The large cloud is pierced through by Your speeding vehicle, the Peacock!

paruthi mathikanal vizhiya sivanidam maruvum: She is concorporate on the left side of the body of SivA who has three eyes, namely, the Sun, the Moon and the Fire (Agni);

orumalai yaraiyar thirumakaL: She is the daughter of the King Himavan of the matchless Mount Himalayas;

padiva mukilena ariyi niLaiyava LaruLbAlA: She is the younger sister of Vishnu whose complexion is that of dark cloud; You are the child of that PArvathi!

parama kaNapathi yayalin mathakari vadivu koduvara: Ganapathy, the Supreme God, took the form of a raging elephant and came near vaLLi

viravu kuRamakaL apaya menavaNai: who was scared and rushed to embrace You seeking refuge.

pazhani maruviya perumALE.: You have Your abode in Pazhani, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 146 kurudhi malasalam - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]