திருப்புகழ் 100 விந்ததில் ஊறி  (திருச்செந்தூர்)
Thiruppugazh 100 vindhadhilURi  (thiruchchendhUr)
Thiruppugazh - 100 vindhadhilURi - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தன தான தந்தன தான
     தந்தன தான ...... தனதான

......... பாடல் .........

விந்ததி னூறி வந்தது காயம்
     வெந்தது கோடி ...... யினிமேலோ

விண்டுவி டாம லுன்பத மேவு
     விஞ்சையர் போல ...... அடியேனும்

வந்துவி நாச முன்கலி தீர
     வண்சிவ ஞான ...... வடிவாகி

வன்பத மேறி யென்களை யாற
     வந்தருள் பாத ...... மலர்தாராய்

எந்தனு ளேக செஞ்சுட ராகி
     யென்கணி லாடு ...... தழல்வேணி

எந்தையர் தேடு மன்பர்ச காய
     ரெங்கள்சு வாமி ...... யருள்பாலா

சுந்தர ஞான மென்குற மாது
     தன்றிரு மார்பி ...... லணைவோனே

சுந்தர மான செந்திலில் மேவு
     கந்தசு ரேசர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

விந்ததி னூறி வந்தது காயம் ... சுக்கிலத்திலிருந்து ஊறி வந்தது
இந்த உடம்பு.

வெந்தது கோடி ... நெருப்பில் வீழ்ந்து வெந்த உடம்போ
கோடிக்கணக்கானவை.

இனிமேலோ விண்டுவி டாமல் ... இனியாவது உன்னை விட்டு
நீங்காதிருக்கும் பொருட்டு,

உன்பத மேவு விஞ்சையர் போல ... உன் திருவடிகளை விரும்பும்
அறிஞர்களைப் போல

அடியேனும் வந்து விநாச முன்கலி தீர ... யானும் நன்னெறிக்கு
வந்து, பேரழிவாகிய முன்வினைக் கேடு நீங்க,

வண்சிவ ஞானவடிவாகி ... வளமையான சிவஞானத்தின் வடிவை
அடைந்து,

வன்பதம் ஏறி யென்களை யாற ... வலிமையான முக்திப்பதத்தைப்
பெற்று, என் பிறவிக் களைப்பு தீருமாறு

வந்தருள் பாத மலர்தாராய் ... என் முன் வந்து அருள்மயமான
உன் திருப்பதங்களெனும் மலரினைத் தருவாயாக.

எந்தனு ளேக செஞ்சுட ராகி ... எனது உள்ளத்தில் ஒப்பற்ற செழும்
ஜோதியாக விளங்கி,

யென்கணி லாடு தழல்வேணி ... என் கண்களில் நடனம் ஆடுகின்ற,
நெருப்பு நிறமான ஜடாமுடியுடைய

எந்தையர் தேடும் அன்பர்சகாயர் ... எனது தந்தையாரும்,
அன்பினால் தேடும் அடியார்க்கு உதவுகின்றவரும்,

எங்கள் சுவாமி யருள்பாலா ... எங்கள் இறைவனுமாகிய
சிவபெருமான் அருளிய குமரனே,

சுந்தர ஞான மென்குற மாதுதன் ... அழகும், ஞான அறிவும்,
மென்மையும் நிறைந்த குறப்பெண் வள்ளியின்

திரு மார்பில் அணைவோனே ... திருமார்பினைத் தழுவுபவனே,

சுந்தர மான செந்திலில் மேவு ... அழகு மிகுந்த திருச்செந்தூரில்
எழுந்தருளியுள்ள

கந்தசு ரேசர் பெருமாளே. ... கந்தனே, தேவர் தலைவர்களின்
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.246  pg 1.247 
 WIKI_urai Song number: 98 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Thiru P. Shanmugam
திரு பொ. சண்முகம்

Thiru P. Shanmugam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

Song 100 - vindhadhil URi (thiruchchendhUr)

vindhadhin URi vandhadhu kAyam
     vendhadhu kOdi ...... inimElO

viNdu vidAmal un padha mEvu
     vinjayar pOla ...... adiyEnum

vandhu vinAsa mun kali theera
     vaN siva nyAna ...... vadivAgi

vanpadham ERi en kaLaiyARa
     vandharuL pAdha ...... malar thArAy

endhan uLEga sen chudarAgi
     en kaNilAdu ...... thazhal vENi

endhaiyar thEdum anbar sahAyar
     engaLsu wAmi ...... aruL bAlA

sundhara nyAna men kuRa mAdhu
     thanthiru mArbil ...... aNaivOnE

sundhara mAna sendhilil mEvu
     kandha surEsar ...... perumALE.

......... Meaning .........

vindhadhin URi vandhadhu kAyam: This body originated from a speck of a sperm.

vendhadhu kOdi: How many millions of bodies have been burnt down in all?

inimElO viNdu vidAmal: In future, I would not like to be separated from You; and

un padha mEvu vinjayar pOla adiyEnum: I shall follow the path of the wise people who worship Your feet.

vandhu vinAsa mun kali theera: For exhausting the huge burden of my karma in previous births,

vaN siva nyAna vadivAgi: for my acquiring firm and deep Knowledge of SivA,

vanpadham ERi: for attaining eternal bliss,

en kaLaiyARa: and for the removal of my weariness caused by the cycle of birth and death,

vandharuL pAdha malar thArAy: You must kindly manifest before me and grant Your lotus feet!

endhan uLEga sen chudarAgi: He lights up my heart and glows as a singular red flame;

en kaNilAdu thazhal vENi: He always dances in my eyes with His glowing tresses;

endhaiyar thEdum anbar sahAyar: He is my Father; He is a great friend of those who seek Him;

engaL suwAmi aruL bAlA: and He is our Lord SivA. You are His beloved Son!

sundhara nyAna men kuRa mAdhu: She is beautiful, intelligent and extremely soft; She is VaLLi, the damsel of KuRavas;

thanthiru mArbil aNaivOnE: and You embrace her lovely chest!

sundhara mAna sendhilil mEvu: You have Your abode at this nice place, called ThiruchchendhUr,

kandha surEsar perumALE.: Oh KanthA, You are worshipped by the Leaders of DEvAs, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 100 vindhadhil URi - thiruchchendhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]