திருப்புகழ் 44 கனங்கள் கொண்ட  (திருச்செந்தூர்)
Thiruppugazh 44 kanangkaLkoNda  (thiruchchendhUr)
Thiruppugazh - 44 kanangkaLkoNda - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த
     தந்த தந்த தந்த தந்த ...... தனதான

......... பாடல் .........

கனங்கள் கொண்ட குந்த ளங்க ளுங்கு லைந்த லைந்து விஞ்சு
     கண்க ளுஞ்சி வந்த யர்ந்து ...... களிகூரக்

கரங்க ளுங்கு விந்து நெஞ்ச கங்க ளுங்க சிந்தி டுங்க
     றங்கு பெண்க ளும்பி றந்து ...... விலைகூறிப்

பொனின்கு டங்க ளஞ்சு மென்த னங்க ளும்பு யங்க ளும்பொ
     ருந்தி யன்பு நண்பு பண்பு ...... முடனாகப்

புணர்ந்து டன்பு லர்ந்து பின்க லந்த கங்கு ழைந்த வம்பு
     ரிந்து சந்த தந்தி ரிந்து ...... படுவேனோ

அனங்க னொந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண்தி
     றந்தி ருண்ட கண்டர் தந்த ...... அயில்வேலா

அடர்ந்த டர்ந்தெ திர்ந்து வந்த வஞ்ச ரஞ்ச வெஞ்ச மம்பு
     ரிந்த அன்ப ரின்ப நண்ப ...... உரவோனே

சினங்கள் கொண்டி லங்கை மன்சி ரங்கள் சித்த வெஞ்ச ரந்தெ
     ரிந்த வன்ப ரிந்த இன்ப ...... மருகோனே

சிவந்த செஞ்ச தங்கை யுஞ்சி லம்பு தண்டை யும்பு னைந்து
     செந்தில் வந்த கந்த எங்கள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கனங்கள் கொண்ட குந்தளங்களும் குலைந்து அலைந்து
விஞ்சும் கண்களும் சிவந்து அயர்ந்து
... மேகம் போன்ற கூந்தலும்
குலைந்து அலைந்து, விளங்கும் கண்கள் சிவந்து சோர்வுற்று,

களி கூரக் கரங்களும் குவிந்து நெஞ்சகங்களும் கசிந்திடும்
கறங்கும் பெண்களும் பிறந்து விலை கூறி
... மகிழ்ச்சி மிகுந்து
கைகளும் கூப்பி நெஞ்சத்தினுள்ளே உணர்ச்சி பெருகித் திரிகின்ற
பெண்கள் மீது மயல் உண்டாகி, (அவர்களுடன் கூட) விலை பேசி,

பொ(ன்)னின் குடங்கள் அஞ்சு(ம்) மென்தனங்களும்
புயங்களும் பொருந்தி அன்பு நண்பு பண்பும் உடனாகப்
புணர்ந்து
... பொன் குடங்களும் அஞ்சும் என்று கூறத் தக்க
மார்பகங்களையும் தோள்களையும் தழுவி, அன்பும், நட்பும்,
குணமும் ஒன்றாகக் கூடி,

உடன் புலர்ந்து பின்பு கலந்து அகம் குழைந்து அவம் புரிந்து
சந்ததம் திரிந்து படுவேனோ
... உடனே ஊடியும், பின்பு கலந்தும்,
மனம் குழைந்தும், கேடு விளைவித்தும் எப்போதும் இவ்வாறே
திரிந்து அழிவேனோ?

அனங்கன் நொந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண்
திறந்து இருண்ட கண்டர் தந்த அயில் வேலா
... மன்மதன் வாடி,
நைந்து, வெந்து அழிந்து சிதறும்படி அன்று (நெற்றிக்) கண்ணைத்
திறந்து விழித்தவரும், கரிய கழுத்தை உடையவருமான சிவபெருமான்
பெற்றெடுத்த கூரிய வேலனே,

அடர்ந்து அடர்ந்து எதிர்ந்து வந்த வஞ்சர் அஞ்ச வெம் சமம்
புரிந்த அன்பர் இன்ப நண்ப உரவோனே
... கூட்டம் கூட்டமாய்
நெருங்கி எதிர்த்து வந்த வஞ்சகர்களாகிய அசுரர்கள் பயப்படும்படி
கொடிய போர் செய்தவனும், அன்பர்களுக்கு இன்பம் தருபவனும்
ஆன நண்பனே, வீரனே,

சினங்கள் கொண்டு இலங்கை மன் சிரங்கள் சிந்த வெம்
சரம் தெரிந்தவன் பரிந்த இன்ப மருகோனே
... கோபம் கொண்டு,
இலங்கை அரசனான ராவணனுடைய தலைகள் சிதற கொடிய
அம்பை ஏவிய ராமன் (திருமால்) அன்பு கொள்ளும் இன்ப மருகனே,

சிவந்த செம் சதங்கையும் சிலம்பு தண்டையும் புனைந்து
செந்தில் வந்த கந்த எங்கள் பெருமாளே.
... சிவந்த, அழகிய
சதங்கையும் சிலம்பும் தண்டையும் அணிந்து, திருச்செந்தூரில்
எழுந்தருளும் கந்தனே, எங்கள் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.166  pg 1.167 
 WIKI_urai Song number: 61 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 44 - kanangaL koNda (thiruchchendhUr)

kanangaL koNda kuntha Langa Lumku laintha lainthu vinju
     kaNka Lumchi vantha yarnthu ...... kaLikUrak

karanga Lumku vinthu nenja kanga Lumka sinthi dumka
     Rangu peNka Lumpi Ranthu ...... vilaikURip

poninku danga Lanju mentha nanga Lumpu yanga Lumpo
     runthi yanpu naNpu paNpu ...... mudanAkap

puNarnthu danpu larnthu pinka lantha kamku zhaintha vampu
     rinthu santha thanthi rinthu ...... paduvEnO

ananga nonthu nainthu venthu kunthu sintha anRu kaNthi
     Ranthi ruNda kaNdar thantha ...... ayilvElA

adarntha darnthe thirnthu vantha vanja ranja vemcha mampu
     rintha anpa rinpa naNpa ...... uravOnE

sinangaL koNdi langai manchi rangaL siththa vemcha ranthe
     rintha vanpa rintha inpa ...... marukOnE

sivantha semcha thangai yumchi lampu thaNdai yumpu nainthu
     senthil vantha kantha engaL ...... perumALE.

......... Meaning .........

kanangaL koNda kunthaLangaLum kulainthu alainthu vinjum kaNkaLum sivanthu ayarnthu: The cloud-like wavy hair has become dishevelled; the elegant eyes are red and weary;

kaLi kUrak karangaLum kuvinthu nenjakangaLum kasinthidum kaRangum peNkaLum piRanthu vilai kURi: with elation and folded hands, these women move about with overflowing emotion; being enchanted by them, one begins to negotiate a price for their service;

po (n)nin kudangaL anju (m) menthanangaLum puyangaLum porunthi anpu naNpu paNpum udanAkap puNarnthu: hugging their shoulders and bosom which put golden pots to shame, one enjoys the carnal relationship, with love, friendship and virtues merging together;

udan pularnthu pinpu kalanthu akam kuzhainthu avam purinthu santhatham thirinthu paduvEnO: at once, there is a tiff between the two, followed by reunion; am I destined to destroy myself roaming about with a molten heart and causing severe damage at all times?

anangan nonthu nainthu venthu kunthu sintha anRu kaN thiRanthu iruNda kaNdar thantha ayil vElA: Manmathan (God of Love) was felled, shattered and burnt down, when He opened the third fiery eye on His forehead; He is Lord SivA with a dark stain on His neck, and You are His son, Oh Lord with a sharp spear!

adarnthu adarnthu ethirnthu vantha vanjar anja vem samam purintha anpar inpa naNpa uravOnE: When groups of treacherous demons advanced confrontingly, they were driven away in panic from the battlefield as You fought with them fiercely; and You are the elating friend to all Your dear devotees, Oh valorous One!

sinangaL koNdu ilangai man sirangaL sintha vem saram therinthavan parintha inpa marukOnE: With immense rage, He wielded a mighty arrow that shattered the heads of RAvaNan, the King of Lanka; and You are the endearing nephew of that RAmA (Lord VishNu), Oh Lord!

sivantha sem sathangaiyum silampu thaNdaiyum punainthu senthil vantha kantha engaL perumALE.: Wearing reddish and petite anklets (called sathangai and thaNdai), You are seated in ThiruchchendhUr, Oh KanthA! You are our dear Lord, the Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 44 kanangkaL koNda - thiruchchendhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]