திருப்புகழ் 38 கட்டழகு விட்டு  (திருச்செந்தூர்)
Thiruppugazh 38 kattazhaguvittu  (thiruchchendhUr)
Thiruppugazh - 38 kattazhaguvittu - thiruchchendhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன
     தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன
          தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன ...... தனதான

......... பாடல் .........

கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம்
     இட்டபொறி தப்பிப் பிணங்கொண் டதின்சிலர்கள்
          கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் ...... முறையோடே

வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென
     மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி
          விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற ...... வுணர்வேனோ

பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல்
     முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை
          பட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர் ...... முடிசாயத்

தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு
     நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி
          சற்சமய வித்தைப் பலன்கண் டுசெந்திலுறை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்து ... இறுகிய கட்டுக்கோப்பாய்
இருந்த அழகிய உடல் தளர்ந்துபோய், அவ்வுடலில் இருந்துகொண்டு

முனம் இட்டபொறி தப்பி ... முன்பு ஆட்டிவைத்த ஐந்து பொறிகளும்
கலங்கிச் சிதறிப்போய்,

பிணங்கொண்டதின் சிலர்கள் ... பிணம் என்ற நிலையை உடல்
அடைந்ததும், சில பேர்கள்

கட்டணமெ டுத்துச் சுமந்தும் ... பிணத்தைக் கூலிக்கு எடுத்துச்
சுமந்து போக,

பெரும்பறைகள் முறையோடே ... பெரிய பறைகள் முறைப்படியாக

வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென ... வெட்டவிட
வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சம் என்ற ஓசையில் முழங்க,

மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும் ... மக்கள் ஒன்றுகூடிப்
பிணத்தைத் தொடர்ந்தும், சிலர் செல்லும் வழியிலே புரண்டும்

வழி விட்டுவரு மித்தைத் தவிர்ந்து ... சிலர் பிணம் செல்வதற்கு
வழி விடுகின்றதுமான இந்தப் பொய்யான வாழ்வை விட்டு,

உன் பதங்களுற வுணர்வேனோ ... உன் திருவடிகளை அடையும்
வழியை நான் உணர மாட்டேனோ?

பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்து ... பட்டு உருவிச்
செல்லும்படி ஆணவம் கொண்ட உயரமான கிரெளஞ்சமலையை
வேலாயுதம் பிளந்து எறிந்து,

கடல் முற்றும் அலை வற்றிக் குழம்புங் குழம்ப ... கடல் முழுதும்
அலை வற்றிப்போய் குழம்பாகக் போகும்படி,

முனை பட்டஅயில் தொட்டு ... கூர்மை கொண்ட வேலாயுதத்தைச்
செலுத்தி,

திடங்கொண் டெதிர்ந்தவுணர் முடிசாய ... வலிமையோடு
எதிர்த்த அசுரர்களின் முடி சாயும்படியாக,

தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு நிர்த்தமிட ...
அடியோடு அழியும்படி வெட்டி, தலையற்ற உடல்களும், பெரிய
கழுகுகளும் நடனமாடவும்,

ரத்தக் குளங்கண்டு உமிழ்ந்துமணி ... ரத்தம் குளமாகப்
பெருகச்செய்தும், அசுரர் கிரீடங்களினின்று மணிகள் சிதறி விழ வைத்தும்,

சற்சமய வித்தைப் பலன்கண்டு ... தேவர்களுக்கு நல்ல காலம்
வருவதற்கான விதையைப் பலன் கிடைக்குமாறு நீ நட்டுவைத்த

செந்திலுறை பெருமாளே. ... திருச்செந்தூர் நகரில் வீற்றிருக்கும்
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.160  pg 1.161 
 WIKI_urai Song number: 58 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 38 - kattazhagu vittu (thiruchchendhUr)

kattazhaku vittuth thaLarnthang kirunthumunam
     ittapoRi thappip piNangkoN dathinsilarkaL
          kattaName duththuc cumanthum perumpaRaikaL ...... muRaiyOdE

vettavida vettak kidanjang kidanjamena
     makkaLoru mikkath thodarnthum puraNdumvazhi
          vittuvaru miththaith thavirnthun pathangaLuRa ...... vuNarvEnO

patturuvi nettaik kravunjam piLanthukadal
     mutRumalai vatRik kuzhampung kuzhampamunai
          patta ayil thottuth thidangkoN dethirnthavuNar ...... mudisAyath

thattazhiya vettik kavantham perungkazhuku
     nirththamida raththak kuLangkaN dumizhnthumaNi
          saRcamaya viththaip palankaN dusenthiluRai ...... perumALE.

......... Meaning .........

kattazhaku vittuth thaLarnthu: The handsome and robust body became emaciated.

ang kirunthumunam ittapoRi thappi: The five sensory organs that once ruled the body were thrown into confusion and disarray.

piNangkoNda thinsilarkaL kattaName duththuc cumanthum: The body turned into a corpse that was carried by a few for a fee.

perumpaRaikaL muRaiyOdE vettavida vettak kidanjang kidanjamena: Large drums were beaten in a ritualistic manner to the meter of "vettavida vettak kidanjang kidanjam".

makkaLoru mikkath thodarnthum puraNdum vazhi vittuvaru: People marched in a group following the corpse, and a few simply rolled along the path, while some cleared the way for the funeral procession.

miththaith thavirnthun pathangaLuRa vuNarvEnO: When will I escape from this myth called life and learn to seek the way to attain Your hallowed feet?

patturuvi nettaik kravunjam piLanthu: The tall and arrogant Mount Krouncha was hit by Your spear which pierced right through shattering it to pieces.

kadal mutRumalai vatRik kuzhampung kuzhampa: The entire sea, with dissipated waves, dried up, shrinking into a muddy puddle.

munai patta ayil thottuth thidangkoN dethirnthavuNar: Upon impact of Your sharp spear, the strong and aggressive demons

mudisAyath thattazhiya vetti: were completely uprooted, with their heads chopped off.

kavantham perungkazhuku nirththamida: The truncated bodies of the demons danced on the battlefield along with large eagles.

raththak kuLangkaNdu: Pools of blood filled up everywhere.

umizhnthumaNi: From the crowns of the demons, precious gems were knocked down.

saRcamaya viththaip palankaNdu: You planted the seed of prosperity for the celestials and the sages in

senthiluRai perumALE.: ThiruchchendhUr, which is Your abode, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 38 kattazhagu vittu - thiruchchendhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]