Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

 முதல் காண்டத்திற்கு   next kandam

1 - பாயிரம்   next padalampAyiram

Ms Revathi Sankaran (0.92mb)




விநாயகர் காப்பு

(திகட சக்கர)

திகட சக்கரச் செம்முக மைந்துளான்
     சகட சக்கரத் தாமரை நாயகன்
          அகட சக்கர வின்மணி யாவுறை
               விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம். ......    1

(உச்சியின் மகுட)

உச்சியின் மகுட மின்ன வொளிர்தர நுதலி னோடை
     வச்சிர மருப்பி னொற்றை மணிகொள் கிம்புரி வயங்க
          மெய்ச்செவிக் கவரி தூங்க வேழமா முகங்கொண் டுற்ற
               கச்சியின் விகட சக்ர கணபதிக் கன்பு செய்வாம். ......    2

சுப்பிரமணியர் காப்பு

(மூவிரு முகங்கள்)

மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி
     ஏவருந் துதிக்க நின்ற விராறுதோள் போற்றி காஞ்சி
          மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி யன்னான்
               சேவலு மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி. ......    3

நூற் பயன்

(இந்திர ராகி)

இந்திர ராகிப் பார்மே லின்பமுற் றினிது மேவிச்
     சிந்தையி னினைந்த முற்றிச் சிவகதி யதனிற் சேர்வர்
          அந்தமி லவுணர் தங்க ளடல்கெட முனிந்த செவ்வேற்
               கந்தவேள் புராணந் தன்னைக் காதலித் தோது வோரே. ......    4

வாழ்த்து

(வான்முகில் வழாது)

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
     கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
          நான்மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
               மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம். ......    5

ஆகத் திருவிருத்தம் - 5



1 - பாயிரம்   next padalampAyiram

 முதல் காண்டத்திற்கு   next kandam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]