பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/687

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

680 முருகவேள் திருமுறை (10:திருமுறை (4) குலிசாயுத முருகவேளுக்கும் குலிசாயுதம் உண்டு. சிங்கமுகாசுரனை அட்டது குலிசமே. குலிச சத்தியை விட்டருள் கெர்ச்சித மயில் வீரா. திருப்புகழ் 296. "கஞ்சமதனைய ஒர்கைக் காமரு சந் தன்னை வஞ்சகன் உயிருன் டொல்ல்ை வ்ருகென் விடுத்தான் மன்னோ"-கந்தபுராணம் 4-12-453. குஞ்சரம் - பிணிமுகம் என்னும் யானை முருகவேளுக்கு உரியது. ஒடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி - திருமுரு காற்றுப்படை 247. பிணிமுகம் ஊர்ந்த வெல்போர் இறைவ. பரிபாடல் 17:49, சேயுயர் பிணிமுகம் ஊர்ந்து - 5.2 (5) மெய்ப்பொருள் ஈகுவையோ என ஞானப் பொரு ளைக் கேட்டாராதலின் குரவா, குருவே) என்றும் தயாபரனே' (கருணைமூர்த்தியே) என்றும் சொற் ப்ரயோகங்கள் வந்துள. ஈ - இது கீழோர் மேலோரை இரக்க வரும் சொல்; தா தனக்கு ஒப்போன் மாட்டுக் கேட்க வரும் சொல்; கொடு மேலோர் கீழோரைக் கேட்க வரும் சொல் - நன்னூல்-சூ. 407, கந்தரலங்காரம் 52 குறிப்புரை - பக்கம் 51. (6) சிவயோகம் பாலிக்க வல்லவர் முருகவேள். அவரை யோகவிதச் சல்லாப விநோதன்' என அநுபூதி (2) லும், யோகத்தா றுபதேசித் தேசிக எனத் திருப்புகழிலும் (68) கூறியுள்ளார். அநுபூதி 41-ம் பார்க்க். 46. கவலை திர ந்ேதாயும் எனக் கருள்தந் தையுநீ சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள் கந்தா கதிர்வே லவனே உம்ையாள் மைந்தா குமரா மறைநா யகனே. (அந்) கந்தா...நாயகனே! எந்தாயும்....எனையாள். (பொ.உ) (கந்தா) கந்தப் பெருமானே! (கதிர் வேலவனே) ஒளி வீசும் வேலாயுதனே! உமாதேவியின் மைந்தனே! குமரமூர்த்தியே! (மறை நாயகனே) வேதமூர்த்தியே! (எந்தாயும்) எங்கள் தாயும் அல்லது என் தாயும், எனக்கு அருள்செய்யும் தந்தையும் நீ (சிந்தாகுலமானவை) என் மன வருத்தங்கள்