பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/679

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

672 முருகவேள் திருமுறை (10-திருமுறை (5) வேதாள கணம் - சூர சம்மாரத்தின்போது நிறையப் பிணங்கன்ளப் பசியடங்கப் பெற்ற காரணத்தால், முருகனை நிரம்பப் புகழ்ந்தன வேதாளம் பேய் (திவாகரம்). சூரொடும்பொர வஞ்சி குடிய பிள்ளையார் படை தொட்ட நாள், ஈருடம்பு மிசைந்திரண்டுதி ரப்பரப்பும் ఖిల్జీ வயிறார முன்பு அவர் செற்ற தானவர் அற்ற நாள் விசும்பு துார விழும் பிணங்கள் நிணங்களுற மிசைந்தனம்’ - பூத வேதாள் வகுப்பு. அலகை வகுப்புக்களையும் பார்க்க - தக்க பரணி 231, 232, வேல் வகுப்பு அடி 4-ன் குறிப்பு, பக். 319. 39. ஆசைகள் அற மாவேழ் சனனங் கெடமா யைவிடா வேடன்ன என்று முடிந்திடுமோ காவே குறமின் கொடித்ேர்ள் புணருந் தேவே சிவசங்கர தேசிகனே. (அந்) கோவே....தேசிகனே! மாவேழ்.முடிந்திடுமோ! (பொ.உ) கோவே - அரசே! குறமின் கொடி) குறச் குலத்தவளும் மின்னற் கொடிபோன்றவளுமான $ణి: (தோள் புணரும்) தோள்களை அணையும் (தேவே) தேவனே! சிவசங்கரனுக்குத் (தேசிகனே) குருமூர்த்தியே! ம்ா ஏழ் சினனம். பெரிய, ஏழ்வகையதான, பிறப்பு கெட, மாயை விடா - மாயை விடாத - ஆசை மயக்கம் நீங்காத (மூ ஏடணை) மூன்று ஈஷணைகளும் - மண்ணாசை, பெண் ஆசை, பொன் ஆசை எனப்படும் மூன்றுவகை ஆசைகளும் (என்று) எப்போது தான் (முடிந்திடும்ோ) முடிவுற்று ஒழியுமோ (அறிகிலேன்) என்றவாறு. |- - (சு-உ) சிவகுரு மூர்த்தியே! பிறப்பு என்பது ஒழிய மூவாசைகள் என்றுதான் முடிவுறுமோ! தெரியவில்லையே. (கு.உ) (1) ஏழ் பிறப்பு: தேவர், மக்கள், விலங்கு புள், ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம், திருப்புகழ் 668, பக்கம் 34; 743, பக்கம் 218 கீழ்க்குறிப்பைப் பார்க்க (2) மூ வேடணை - ஏடணை ஈடணை, மனைவி, மக்கள், பொருள் இவை பற்றிய ஆசை எனலுமாம். மனைவி, மக்கள், அர்த்த ஏடணைகள் மூன்று - கைவல்ய நவநீதம். தத்துவ