பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/678

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 671 38. ஆட்கொள்ளப்பட்டது ஆதாளியை ஒன் றறியே னை அறத் தீத்ாளியை ஆண் டதுசெப் பும்தோ கூதாள கிராத்குலிக் கிறைவா வேதாள கணம் புகழ் வேலவனே. (அந்) கூதாள..........வேலவனே! ஆதாளியை...... செப்புமதோ. - (பொ.உ) (கூதாள) கூதள மாலையை அணிந்தவனே! (கிராதகுலிக்கு) வேடர் குலத்தவளாம் வள்ளிக்கு (இறைவா) தலைவனே! (வேதாள கண்ம்) பேய்க் கூட்டங்கள் புகழ்கின்ற வேலாயுத மூர்த்தியே! (ஆதாளியை) டம்பப் பேச்சு பேசுபவன், நல்லது ஒன்றும் அறியாதன், (அற) மிகவும் (திதாளியை) திக் குணம் கெட்ட் குணம் உன்டயவன் ஆகிய என்னை (ஆண்டது). என்னை ஒரு பொருளாகக் கருதி நீ ஆண்டருளிய கருணை (செப்புமதோ) சொல்லும் தரத்ததோ - தரத்ததன்று - என்றபடி (சு-உ) குற்றம் நிறைந்த என்னை, முருகா! நீ ஆண்ட கருணை சொல்லுந் தரத்ததன்று. (கு.உ) (1) ஆதாளி வாயன். திருப்புகழ் 611. ஆதாளிகள்'- திருப்புகழ் 118. (2) இப் பாடல் அருணகிரியாரின் வரலாற்றை விளக்கு வது. அநுபூதி 3, 5, 8, 11, 12, 20, 22, 28, 30, 42, 43, 44, 49 எண்ணுள்ள பாடல்களும் அத்தகையனவே. (3) கூதளமலரை அணிந்த வள்ளி எனவும் கூட்டிப் பொருள் காண்பர். முருகவேளுக்குக் கூதளமலர் பிரிய மாதலால் - கூதாள என முருகவேளையே விளித்துப் பொருள் காணலாம். முடியிற் கொண்ட கூதளம் என - திருப், 960 கூதள கந்த மாலிகை தோய்தரு கழல் 99. (திருப்புகழ் 960, பக்கம் 784 கீழ்க்குறிப்பைப் பார்க்க) - - (4) குலம் என்பதிற் பிறந்த ஆண்பாற் பெயர் குலவன்; பெண்பால். குலி - குலமிலாதானைக் குலவனே என்று கூறினும்" - சுந்தரர் 7.34-6. "கிராத குலி" - மயில் விருத்தம் 3.