பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/677

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

670 முருகவேள் திருமுறை 10:திருமுறை உபதேசித்தார் என்பதும் மேற்சொன்ன கருத்தோடு பொருந்தும் அரவு புனைதரு புதிதரும் வழிபட அறின்iஅறிவது பொருளென அருளிய பெருமாளே என்றார் திருப்புகழில் 509 (பக்கம் 164) கீழ்க்குறிப்பு. (2) குமராய நம' என்பது ஆறெழுத் தென்பர் ஆசிரியர் நச்சினார்க்கினயர். 37. முருகன் கணங்களைக் கூட கிரிவாய் விடுவிக் ரமவேல் இறையோன் பரிவா ரம்எனும் பதமே வலையே புரிவாய் மணினே பொறையாம் அறிவால் அரிவாய் அடியோடும் அகந்தையையே. (அந்) மனமே! கிரிவாய்......புரிவாய், அகந்தையையே பொற்ையாம் அறிவால் அடியோடும் அரிவாய். (பொ.உ) மனமே! கிரிவாய் - கிரெளங்ச கிரியின்மீது (விடு) செலுத்தின (விக்ரம) பராக்ரமம் உள்ள வேல் (இறையோன்) வேலை ஏந்திய இறைவன் முருகவேளின் (பரிவாரம் எனும் பதம்) (அடியார்) கணத்தைச் சேர்ந்தவன் என்னும் பதவியை (மேவலையே) அடைதலையே (புரிவாய்) நீ விரும்புவாயாக அகந்தையையே (நான் என்னும்) ஆணவத்தையே, பொறையாம் அறிவால் பொறுமை என்கின்ற றிவைக்கொண்டு (அடியோடும் அரிவாய்) வேருடனே ே து தள்ளுவாயாக. (சு-உ) மனமே! முருகன் அடியாரொடுசேர விரும்புக; அகந்தையைப் பொறையால் அரிந்து எறிக. (கு.உ) (1) இறைவன் அடியாரொடு கூடுதல் முக்கியமான வேண்டுகோள். இந்தப் பாக்கியத்தை முருகன் அருணகிரியார்க்குப் பிரசாதித்தனர். வேலோன் போதமிலேனை...கெடுதலிலாத் தொண்டரிற் கூட்டியவா!' எனவரும் அலங்காரம் 100ஆம் செய்யுளையும் குறிப்புரையையும் காண்க; (பக்கம் 97). (2) அகந்தையை அகற்றுவது பொறையே கந்தரந்தாதி பாடல் 84, பக்கம் 243 குறிப்புரையைக் காண்க