பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/674

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 667 "மங்கையரால் வரும் காமமில்லையெனிற் கடுங் கேடெனும் நாமமில்லை நரகமும் இல்லையே’ -கம்பராமா. மந்தரை 21. "நிறையும் உண்டோ காமங் காழ்கொளில்' மணிமேகலை 5.20. 35. கதி கான :: உடம்பை விடா வினையேன் இ கதிகாண மலர்க்கழல் என் றருள்வாய் மதிவா னுதல்வள்ளியைஅல்லதுயின் துதியா விரதாசுரபூ பதியே. (அந்) மதிவாணுதல் ........பூபதியே! விதிகாணும். அருள்வாய். (பொ.உ) (மதி) பிறை போன்றதும், (வாள்) ஒளிவீசுவது மான (நுதல்) நெற்றியை உடைய (வள்ளியை அல்லது) வள்ளிய்ைத் தவிர (பின்) பின்னர் வேறு யாரையும் (துதியா) துதிக்காத (விரதா) நோன்பு பூண்டவனே! (சுரபூபதியே) தேவர்களுக்கு அரசே! (விதி) பிர்மன் (கானும்) படைக்கும், (உடம்பை) உடலுக்கிடந்தரும் பிறப்பை (விடா) விடாத (வினையேன்) வினை நிறைந்த அடியேன் (கதிகாண) நல்ல கதியை அடையும்படி (மலர்க்கழல்) தாமரையன்ன உனது ருவடியை (என்று) அப்போது (அருள்வாய்) அருள்புரிவாய். (சு-உ) முருகா! பிறப்புக்களை ஒழிக்காத நான் நற்கதி காண என்று அருள் புரிவாய். (கு.உ.) (1) விதி கானும் உடம்பை - பர்வ வினையால் ஏற்படும் உடம்பை எனலுமாம். உடம்பை { - தேகாபி மானத்தை விடுதல் - என்னில் ஆரும் எனக்கினி யாரில்லை - அப்பர் 5.21:1; கழல் பெறுதல் திருவடி திகூைடி பெறுதல் - அது தேகாபிமானத்தையும், பிற பற்றுக்களையும் நீக்கும். "இணையார் திருவடி என் தலைமேல் வைத்தலுமே துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன் IT "நின் கழலிணை காட்டிக் காய மாயத்தைக் கழித்தருள் செய்யாய்" திருவாசகம் 13-1; 23.5.