பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/669

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

662 முருகவேள் திருமுறை (10:திருமுறை "மற்பொரு திரள்புய மதயானை" திருப். விநா. 1. "ஆனையுரிவை மற்புரி புயத்தினிது மேவுவர்" - - சம்பந்தர் 3-78.2. (3) என் சொல்லே புனையும்......வேலவன் - "அடிமை தொடுத்திடு புன்சொல் ஒன்று ಕ್ಹ புனைந்தன" - புயவகுப்பு 30. "அடிமை ஆசுகவி கவிமாலை சூடுவதும்" சீர்பாத வகுப்பு 24. "அடிமை சொலுஞ் சொற்றமிழ்ப் பனிரொடு பரிமள மிஞ்சக் கட்ப்ப மாலையும் அணிவோன்ே". திருப்புகழ் 186. வேலவனே' என்றார் வேவே மாயையை நீக்கவல்ல்தாதலின். 30. உணர்த்திய ஞானம் சொல்ல இயலாது செவ்வான் உருவில் திகழ்வே லவன்.அன் றொப்வா ததென உண்ர்வித் ததுதான் அவ்வாறறிவர்ர் அறிகின் றத்லால் எவ்வாறொருவர்க்கிசைவிப்பதுவே. - (பொ-உ) (செவ்வான் உருவில்リ சிவந்த வானத்தின் (செக்கர் வானத்தின்) உருவத்துடன் (திகழ்) விளங்கும் (வேலவன்) வேற்பெருமான், (அன்று) அடியேனுக்கு முதனாளில் (ஒவ்வாததென) ஒப்பாகாதது என நிகரில்லாதது என இவ்வுபதேசத்துக்கு இணையானது வேறொன்று இல்லை என்று சொல்லும்படியாய் (# அதுதான்) எனக்கு உபதேசித்த அந்த ஞான அனுபவ நிலைதான் (அவ்வாறு) அங்ங்னம் உபதேசம் பெற்று (அறிவார்) அறிபவர்கள் (தங்கள் உள்ளத்தில்) (அறிகின்றதலால்) அறிகின்றது அல்லால் அறிந்து அனுபவிக்க முடியுமேதவிர (எவ்வாறு எங்ங்னம் (ஒருவர்க்கு) பிற்ரொருவர்க்கு (இசைவிப்பது) அதைச் சொற்களால் சொல்ல இயலும் - சொல்ல இயலாது என்றபடி ". ■ (சு-உ) முருகவேள் உணர்த்திய ஞானோபதேச நிலையை அநுபவிக்கலாமே ஒழிய பிறருக்கு எடுத்துச்சொல்ல இயலாது. (கு.உ.) () முருகன் செந் நிறத்தவன்; வேலும் செந் நிறத்தது. அநுபூதி 25ன் குறிப்புரையைப் பார்க்க (2) எங்ங் னிருந்த தென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன் அங்ங் னிருந்ததென் துந்தீபற’ -- திருவுந்தியார் 4. அநுபூதி 12-ன் குறிப்ப்ையும் பTTஅது.