பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/661

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

654 முருகவேள் திருமுறை (10-திருமுறை (2) ள் தர: "யான் எனதென் றற்ற இடமே திருவடி" என்றாராதலின் (கந்தர் கலிவெண்பா 34) அகங்கார ம்மக்ாரம் அற்ற நிலையை என்று தருவாய் எனலுமாம். (3) விரதம் - அருவருப்பு. H விரதமாயை புரி சகுனி - வில்லிபாரதம் நாடுகர் 32 (Lexicon) விரதா - அடியாரைப் புரக்கும் விரதம் (நோன்பு) பூண்டவன்ே - தன் கடன் அடியேனையுந் தாங்குதல்" - அப்பர் 5-19.9. சுர தேவனே! என்வும் பிரித்துப் பொருள் காண்பர். (4) விபாடணன் - விபாடம் - பிளக்கை; விபாஷணன் --- நட்புக்கு உரிய பேச்சு இல்லாதவன். பகைவன்! (பாட்ணம் - பேச்சு) எனவும். பொருள் கர்ண்பர். வி-இன்மை குறிக்கும் விராகம்’ என்பதிற்போல். சூர் - அவி - பாடணன் - சூரனுடைய ஆன்மையை (அவி) குலைக்கவல்ல பாடணன் - பேச்சை உடையவ்னே எனலுமாம். 22. தன் தவப் பேற்றை நினைந்து மகிழ்தல் காளைக் குடி ரேசன் எனக்கருதித் தாளைப் பணியத் தவமெய் தியவர் பாளைக் குழல் வள்ளி பதம்பணியும் வேளைச் சுரபூ பதி மேருவையே. (அந்) பாளைக் குழல்.மேருவையே காளைக் குமரேசன் .... GTILIct/ILIGNU/Т. (பொ.உ) (பாளை) கமுகின் பாளை - தென்னம் பாளை போல நீண்ட குழல்) கூந்தலை உடைய (வள்ளி பதம்) வள்ளியின் பாதங்களைப் (பணியும்) பணிகின்ற (வேளை) செவ்வேள் முருகனை, (சுர பூபதி) தேவர்களுக்குத் தலைவனாய் - அரசாய் (மேருவை) மேருமலை ஒத்தபெருமை கொண்ட வனை, காளைக் குமரேசன் காளைப் பருவத்துக் குமாரமூர்த்தி என்று (கருதி) தியானித்துத் (தாளை) அவரது திருவடியைப் (பணிய) பணியும்படியான (தவம்) தவநிலையை (எய்தியவா) நான் அடைந்த பேறு என்ன அற்புதகரமானது. (சு-உ) வள்ளி பாதம் பணிந்த பெருமான து பாதத்தைப் பணியும் தவம் எனக்குக் கிட்ைக்க நான் என்ன தவம் செய்தேனோ! i