பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/650

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

644 முருகவேள் திருமுறை (10-திருமுறை பென்னல்லை ஆணல்லை பேடும் அல்லை பிறிதல்லை ஆனாயும் பெரியாய் நீயே உண்ண்ல்லை நல்லார்க்குத் தீயை யல்லை உணர்வரிய ஒற்றியூர் உடைய கோவே" அப்பர் 6-45-9. "இருளென்பதுவுமன்றி ஒளியென்ப துவுமன்றி எவையுந் தனுளடங்க ஒருமுதலாகும், உளதென்பதுவுமன்றி இலதென் பதுவுமன்றி உலகம் தொழ இருந்த" - தாயுமா. வண்ணம் எனவருவன இங்கு நினைவுக்கு வரும். 14. ஆசைகள் அற கைவாய் கதிர்வேல்-முருகன் கழல்பெற் றுய்வாய் மன்னே ஒழிவாய் ஒழிவ்ாய் மெய்வாய் விழி நாசியொடும் செவியாம் ஐவாய் வழி செல்லும் அவாவினையே. (அந்) மனனே! கைவாய்...உய்வாய், மெய்வாய்... அவாவினையே, ஒழிவாய் ஒழிவாய். (பொ.உ) மனனே! ஏ! மனமே! (கைவாய்) கையிடத்தே (கதிர்வேல்) ஒளி பொருந்திய வேலை ஏந்திய முருகவேளின் (கழல்பெற்று) திருவடியை அடைந்து (உய்வாப்) உய்தி-பிழைப்பை நற்கதியைப் பெறுவாயாக மெய் (உடல்), வாய், (விழி) கண், (நாசி) மூக்கு இவையுடன் (செவி) காது ஆகின்ற (ஐவாய்) ஐந்து பொறிகளின் வழியாக (செல்லும்) ஏற்படும் - உண்டாகும் (அவாவினை) ஆசைகளை (அல்லது அவா . ஆசை, வினை-வினைகள் இவைதமை ஒழிவாய் ஒழிவாய் - நிச்சயமாக நீ விடுவாய், விடுவாய். (சு-உ) மனமே! வேல் முருகன் திருவடியைப் பெற்று அதனால் உய்தி பெறுக, ஆசைகளை விடுக அவாவினை ஒழிவாய் ஒழிவாய் - ஆசைகளை لمعه-رك) விடுவாயாக விடுவாயாக எனலுமாம்.