பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/648

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 641 (4) வித்தார கவிவகை - விரிவாகப் பாடும் பிரபந்தம். மும்மணிக்கோவை, பன்மணி மாலை, மறம், கலி வெண்பா, மடலூர்தல், இயல், இசை, நாடகம், பல்வகைக் கவி, கூத்து, கிரீடை, பாட்ாண்டத்துறை, வகுப்பு, விருத்த கவிதை இவை முதலிய வற்றை விரித்துப் பாடுவது வித்தார கவி' - (பிங்.) 12. மெளனோபதேசம் பெற்றது செம்மான் மகளைத் திருடுந் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவ்ான் 'சும்மா இருசொல் லறனன் றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. (பொ.உ) செம்மான் - செவ்விய (இலக்குமியாம்) மான் ஈன்ற மகளை - மகளாம் வள்ளியைத் (திருடும்) திருடின களவிற் கொண்டு சென்ற (திருடன்) கள்வன், பெருமானாகிய முருகன் (அவன்) பிறவான் இறவான் - அவனுக்குப் பிறப்பு, இறப்பு இல்லை (அத்தகைய பெருமான்) சும்மா இருப்பாயாக, (சொல் அற) மெளன நிலையில் இரு என்றலுமே (என்று எனக்கு உபதேசித்த உடனே) அம்மா! என்ன ஆச்சரியம் - பொருள் நான் உணரவில்லை - உலக விஷயங்கள் யாவும் அற்றன. (சு-உ) முருகவேள் சும்மா இரு என்று உபதேசித்தவுடன் பிரபஞ்ச விஷயங்கள் யாவும் என்முன் மறைந்தன. (கு.உ) (1) செவ்விய (மால்) திருமாலின் மகள் எனவும் பொருள் காணலாம். வள்ளி (சுந்தரவல்லி) திருமாலின் மகள் : செம்மான் சக்கிலி என்றும் பொருள் இருப்பதால் சக்கிலி மகளை எனவும் ஒரு திட்டு தொனிக்கும் (வஞ்சப் புகழ்ச்சி). கருமான் மருகனைச் செம்மான் மகளைக் களவு கொண்டு - எனவரும் கந்தரலங்காரத்தையும் (91) காண்க (2) திருடன் - என்றது இகழ்ந்ததுபோல் புகழ்ந்ததாம் (வஞ்சப் புகழ்ச்சி) அரிவையை.லீலைகள் செய்து நாடிய கிா அருள்தரு கந்தவேளே . திருப்புகழ் 741.