பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/641

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

634 முருகவேள் திருமுறை (10:திருமுறை "நின் ஆர்வலர் தொழுதகை அமைதியின் அமர்ந் தேர்யும் நீயே! அவ்ரவர் ஏவலாளனும் - -பரிபாடல் 4.70.72. "கூம்பித்தொழுவார்தம் குற்றேவலைக் குறிக்க்ொன்டிருக்கும் குழகா போற்றி" -அப்பர் 6.5-4. என வருவன காண்க. வள்ளி பதம் பணிதல் - வனசரி பதயுக கஞ்சம் வணங்கும் பாக்ய கதம்பன் - திருப்புகழ் 18.6. 7. கதிபெறும் வழி கெடுவாய் மனனே கதிகேள் கரவா திடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய் சுடுவாய் நெடுவே தனைதுTள் படவே டுவாய் விடுவாய் வினையா வையுமே (அந்) மனனே! கெடுவாய் கதிகேள்......நினைவாய், ெ வதனை ..........சுடுவாய், வினை யாவையுமே விடுவாய் டுவாய். (பொ.உ) (மனனே கெடுவாய்) ஏ மனமே! நீ கெட்டொழிய நிற்கின்றாய்! (கதிகேள்) நீ நற்கதி பெறும் வழியைக் கூறுகின்றேன் கேட்பாயாக (கரவாது) உள்ளத்தில் ஒளித்தல் இல்லாது (இடுவாய்) தானம் செய்வாயாக (வடிவேல்) கூரிய வேலை ஏந்திய (இறை) கடவுள் முருகவேளின் (தாள்) திருவடிகளை (நினைவாய்) தியானிப்பாயாக. (அங்ங்னம் நீ செய்தால்) (நெடு வேதனை) பெரிய வருத்தம் நோய்களெல்லாம் துாள்பட்டொழியச் (சுடுவாய்) சுட்டு எரிப்பாய்; (வினையாவையுமே) வினைகளெல்லாவற்றினின்றும் (விடுவாய் விடுவாய்) விரைவில் நிச்சியமாக விடுதலை பெறுவாய். (சு-உ) வினை, வேதனை தொலைய வேண்டில் - கரவாது இடுக, முருகன் திருவடியைத் தியானிக்க. (கு.உ.) (1) இச்செய்யுளில் உள்ள உபதேசம் உணர்ந்து அறு டி க்கத் தக்கது.