பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/640

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 633 6. திருவடித் தியானம் உற திணியானமநோ சிலைமீதுனதாள் அணியார் அரவிந்தம் அரும்புமதோ பணி யா என வள்ளி பதம் பணியுந் தனியா அதிமோக தயா பரனே. (அந்) பணியா என..தயாபரனே! திணியான. அரும்புமதோ! (பொ.உ) பணியா என (எனக்கு இடும்) கட்டளைகள் எவையோ என (வினவி), வள் ன் (பதம்பணியும்) பாதத்தில் விழுந்து வணங்கும் (தணியா) குறைவுபடாத )ே மிக்க காதல் கொண்டுள்ள தயாபர மூர்த்தியே! (கருணைக் கடலே! (திணியான) திண்ணியதான கடின மான(மநோ சிலை) (எனது) நெஞ்சக் கனகல்லின் மீது மனம் என்னும் கல்லின் மீது (உன்) உன்னுடைய தாள்) திருவடி என்னும் (அணி ஆர்) அழகு நிரம்பிய (அரவிந்தம்) தாமரை (அரும்புமதோ) அரும்புவிட்டு மலருமோ! (சு-உ) வள்ளிகாதலனே! உனது திருவடி என்மனத்தில் மலருமா! (கு.உ.) (1) திணியான மநோசிலை காப்புச் செய்யுளில் நெஞ்சக் கனகல்' என்பதன் குறிப்பைப் பார்க்க சேற்றில் முளைக்கும் தாமரை - என் மனம் எனும் கல்லில் முளைக்குமா என்றதனால் என் மனத்தைச் சேறுபோல நெகிழச் செய் என வேண்டின்தாகும். (2) பணி யா என வேண்டி நின்றதை , தெய்வக் குறப் பெண் குறிப்பறிந் தருகணைந்துன் குற்றேவல் செய்யக் கடைக்கன் பணிக்கெனக் குறையிரந்து...நின்றவன்' என்றார் குமர குருபரரும். இங்ங்ணம் பணிந்தது - பத்தி செய்வோர்க்கு ஏவல் செயும் பணியாளன் ஈசன் என்னும் பேருண்மையைப் புலப்படுத்தும். பண்டி சிக்கழக பகிப் பெ|பதமே பாணி க்க்தா ப I - 11