பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/635

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

628 முருகவேள் திருமுறை (10-திருமுறை 2. யான் எனது அற-எல்லாம் அற உபதேசித்தருள் உல்லாச நிராகுல யோக விதச் சல்லாப விநோதனு நீ யலையோ எல்லாம்அற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுரபூ (அந்) முருகா! (சுரபூபதியே!) உல்லாச ....சொல்லாப். (பொ.உ) முருகனே! சுரபூபதியே தேவர்களின் அரசே! (உல்லாசம்) உள்ளக் களிப்பு, (நிராகுலம்) கலக்கமின்மை இவைகளுடன் கூடிய யோகவித) எண்வகை யோக விதங்கள் - யோக மார்க்க வழிகள் சம்பந்தமான (சல்லாபம்) வினா விடைப் பேச்சுக்க்ளில் (விநோதனும்) ஈடுபட்டு மகிழ்ச்சி யுடன் பொழுது போக்குபவனும் (நீ அலையோ) நீ அல்லவா நீதான் . நீ ஒருவனே (எல்லாம் அற) சகல பந்தங்களும் நீங்கிஒழியும்படி, (என்னை) யான் எனது எனப்படும் அகங்க்ள்ரமமகாரங்கள், (இழந்த) ஒழிந்து தொலையும் (நலம்) மேலான நன்மை நிலைய்ைச் (சொல்லாய்) உபதேசித்தருளுக! (சு-உ) முருகா! சகல பாசங்களும் தொலையும்படி எனக்கு உபதேசித்தருளுக. (கு.உ.) (1) உல்லாச விநோதன், நிராகுல விநோதன், யோகவிதச் சல்லாப விநோதன் அல்லது யோகவித விநோதன் (அல்லது யோக விநோதன், இதவிநோதன்) எனக் கூட்டியும் பொருள் காணலாம். உல்லாசம், நிராகுலம், யோகம், இதம் ( மை, நன்மை) சல்லாபம், விநோதம் என்னும் ஆறு. தன்மைகளைக் கொண்டவன்-முருக! நீ ஒருவனே எனலுமாம். இறைவனை இன்பன், கவலை...யில்லர், நலந்தான் அவன், பரமயோகி' என்றார் சம்பந்தரும் (2.88.3; 1-87-1; 2-19.3; 1-119-3.) (2) எல்லாம் அறுதல் - சொல்லுகைக் கில்லை யென்றெல்லாம் இழந்து சும்மா இருக்கும் எல்லை. கந், அலங். 10; என்னை முழுக்க இழந்த இடத்தே தன்னை விளக்கிய சால் இளசைக்கோன்' இளசைப் பதிற்றுப்பந்தந்தாதி 47. (3) இப்பாடலிற் கேட்ட வரம் சித்தித்ததைக் கந்தரலங்காரம் 10, 19, 61 எண்ணுள்ள செய்யுள்களிற் காண்க.